Friday, 15 November 2019

குருபெயர்ச்சி,சனி பெயர்ச்சி,ராகு,கேது பெயர்ச்சி பலன்கள் என்று சொல்லி ஜோதிடத்தை அவமானபடுத்து ஜோதிடர்களின் கவனத்திற்கு.


தமிழ்நாட்டின் தொத்த ஜனதொகை 8 கோடி என்று வைத்துக்கொள்வோம்.அப்போது ஒரு ராசிக்கு 6666666,6667 இவ்வளவு மக்கள் வருகிறார்கள் அதாவது 66 லட்சத்து 66ஆயிரத்து 666 நபர்கள் வருகிறார்கள். ஒவ்வொரு நட்சத்திற்கும் 29 லட்சத்து 62 ஆயிரத்து 962 நபர்கள் வருகிறார்கள்.இவர்கள் அனைவருக்கும் ஒரே பலன் என்றால் நம்முன்னோர்கள் (ரிஷகள், முனிவர்கள்) ஏன் 12 கட்ட கணிதங்கள்,திசை,புத்திகணிதம்,அஷ்டவர்க்கம்,ஷட்வர்க்கம்,இன்னும் பல கணித முறைகளை கண்டுபிடித்து கொடுத்தார்கள்.ஒரும் ராசியையும்,நட்சத்திரத்தையும் வைத்து பலனை சொல்லிவிட்டு போய்யிருக்கிளமே.அவை பொது பலன்களே ஆகும்.அந்த பொது பலன்கள் ஒவ்வொருக்கு முரமயாக பொருந்தி வராது.20 சதவீதம் அளவிற்கு கூட பொருந்திவராது.

பரிகாரக இல்லை ஓலை சுவடியில் சமர்கிருதம் மொழியில் இருந்து மொழி பெயர்க்கபட்ட எந்த பாரம்பரிய ஜோதிட நூல்களில் பரிகாரகங்கள் சொல்லபடவில்லை.இந்த பாவங்களில் இந்த கிரகங்கள் இருந்தால்,பார்த்தால்,சேர்ந்தால் இந்த பலன் என்றே சொல்லபட்டுள்ளது. இந்தபலன்களை சொன்ன நம்முன்னோர்கள் (ரிஷகள், முனிவர்கள்) தாங்கள் சொன்ன ஜோதிட விதிகளுக்கு முரணாக பரிகாரத்தை எந்தஜோதிட நூல்களிலும் சொல்லவில்லை என்பதை முதலில் நல்ல ஜோதிடர்கள் உணரவேண்டும். நல்ல ஜோதிடர்கள் யார் என்றார்1,4,5,8,9,12ம் பாவங்கள் ஒற்றைப்படை பாவங்களை தொடர்பு கொண்டவர்களே ஆவார்.அவர்கள் பரிகாரங்களை சொல்லி மக்களை ஏமாற்றமாட்டார்கள். பரிகாரங்களை சொல்லி மக்களை ஏமாற்றும் ஜோதிடர்கள் யார் என்றால் 1,4,5,8,9,12ம் பாவங்கள்இரட்டைப்படைபாவங்களோடு 8,12ம் பாவங்களும் கலப்போடு இருக்கும். இந்த ஜோதிடர்களே பரிகாரங்களை சொல்லி மக்களை ஏமாற்றுவார்கள்.பரிகாரகங்கள் உண்மை என்றால் ஜோதிடர்களும்,கோயில் பணிபுரியும் பிராமணர்களும் ஏன் எல்லாவிதமான கடுமையான துயரங்கள்,தீராத ஆட்கொல்லி நோய்,கடுமையான வருமையில் வாடவேண்டும்.பரிகாரம் உண்மையெற்றால் முதலில் இவர்கள் பரிகாரகங்களை செய்துக்கொண்டு நன்றாக வாழ்ந்து காட்டவேண்டுமே.பரிகாரகம் என்பது என்னவென்றால் இறைவனிடம் சராணகதி அடைவது மட்டுமே அவனுடைய நாமத்தை அனுதினமும்,ஒவ்வொரு வினாடியும் ஜெபித்துக்கொண்டுயிருப்பதே இதுவே தேவாரத்தில்(திருஞானசம்பந்தர்,திருநாவுகரசு,சுந்தரர்,மாணிக்கவாசகர்) அவர்களால் சொல்லபட்டுள்ளது.அதற்கும் நம் ஜாதகத்தில் 9ம் பாவம் இடம் அளித்தால் மற்றுமே சாத்தியம் ஆகும்.
விதிவழியே மதி செல்லும்.மதியால் விதியை வெல்ல முடியாது.முடியும் என்பவர்கள் நிரூபித்துக்காட்டவேண்டும்