Sunday, 13 November 2016

உடல்கூறியில் 3ம் பாவத்தின் முக்கியத்துவம் இரண்டாம் பதிப்பு



உடல்கூறியில் 3ம் பாவத்தின் முக்கியத்துவம்


                                                       இரண்டாம் பதிப்பு




3ம் பாவம் 3,7,11 அல்லது 1,5,9ம் பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது வளைய கூடிய தன்மை,தளர்ச்சியாக அதாவது நெகழ்வு தன்மையை அதிகமாக இருக்கும். தலைசுற்றுதல் இருக்காது.வேகம் மத்திம்மாக இருக்கும்,ஓட்டம் ஒரே சீராக இருக்கும்.




3ம் பாவம் 6,8,12 பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது ஜாதகர் உணர்வுகளை கட்டுபடுத்த தெரியாதவர்,உணர்வுகளை முறையாக வெளிபடுத்த தெரியாதவர்,விரத்தி மனநிலை, தாழ்வுமனபான்மை, மயக்கம் வரும்,தலை சுற்றுதல்,நிலையாக எண்ணம் இல்லாமல் இருப்பது, எப்பொழதும் புத்துணர்ச்சியில்லாமல் கலைப்பாக இருத்தல், தெளிவற்ற மனநிலையில் இருத்தல் அல்லது செயல்படுதல்,தெளிவற்ற சிந்தனை, நினையாற்றல் குறைவு அல்லது இல்லாமல் போகுதல், முறையற்ற ஓட்டம், முறை அற்ற அசுரவேகம்.




3ம் பாவம் 6,8,12 பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது ஜாதகருக்கு புதுபித்தல் இல்லாமல் இருப்பார்,விரிவுபடுத்தி செய்ய தெரியாது,ஒரு செயலையின் அப்கிரேடை பற்றிய அறிவு இல்லாமல் இருப்பது,கற்பதற் கேற்ற மனச்சார்பும்,அறிவற்றவராக இருப்பது,மனத்தில் பதியும் பதிவுகளால் பாதிப்புகள் ஏற்படுதல், தன்னுடைய எண்ணத்துக்கு ஏற்ப உடலை இயக்க முடியாத நிலையில் இருப்பது. ஒருவர் வீரம் இல்லாதவராக இருத்தல் அல்லது முரட்டுதனமான செயல்படுதல், விவேகம்யற்ற தைரியம் உடையவராக இருப்பார், தன்னம்பிக்கை இல்லாதவராக இருப்பது, மனோபலம் இல்லாதவர்,உறுதிப்பாடு மற்றும் விடாமுயற்சி இல்லாதவர்க இருப்பார்.உடலில் உள்ளே ஓடும் இரத்த ஓட்டம் கட்டுபாடுற்ற முறையில் அசுர வேகத்தில் ஓடுதல் இதை மருத்துவர்கள் உயர் இரத்த அழுத்தம் என்று கூறுவார்கள்,இரத்த ஓட்டம் மிகவும் குறைவாக இருப்பது குறைந்த இரத்த அழுத்தம் என்று கூறுவார்கள்.




லக்னம் என்னதான் வலிமையாக இருந்தாலும் லக்னத்தின் பரிமாண பாவமான 3,11ம் பாவம் கெட்டுயிருந்தால் ஜாதகர் ஒரு அளவிற்க்கு மேல் சிறப்பாக செயல்படமுடியாது ஏனெனில் லக்னத்தின் இரு தூண்கள் 3,11ம் பாவங்கள் ஆகும்,






3ம் பாவம் தன்னுடை பாவத்திற்கு 3ம் பாவமான 5ம் பாவத்தையும் தொடர்பு கொண்டால் 100 சதவீதம் இரத்த ஓட்டம் சரியாக இருக்கும்,11ம் பாவமான 1ம் பாவத்தையும் தொடர்பு கொண்டால் 200 சதவீதம் இரத்தம் ஓட்டம் ஒரே சீராகவும் அதாவது ஒரே வேகத்தில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் ஓடும்.
3ம் பாவம் தன்னுடைய பரிணாம பாவங்களான 1,5ம் பாவங்களுக்கு 12ம் பாவங்களான 4,12ம் பாவங்களை தொடர்பு கொண்டால் இரத்தம் ஓட்டம் ஒரே சீராக இல்லாமல் சீரற்ற முறையில் அதாவது கேவமாகவோ அல்லது வேகம் குறைந்தோ ஓடும்.






3ம் பாவம் லக்னத்திற்கு தீமையான 4,8,12ம் பாவங்களை தொடர்புகொண்டால் அதிகமாக கோபபடுதல்,எரிந்து, எரிந்து விழுவது,இரத்த ஓட்டம் சீராக இருக்காது, இதனால் அதிகமாககோபபடுதல்.உணர்ச்சிவசபடுதல், உணர்ச்சிகளை முறையாக வெளிபடுத்த தெரியாதவர்கள்.
காது, தோள்பட்டை, நரம்புமண்டலங்கள்,உணர்வு புலன்கள் பாதிக்கபடும்,பயம், படபடப்பு, உணர்ச்சி வசபடுவது,உடனுக்கு உடன் கோபபடுவது, திடீரென கத்துவது, சிறிய அளவில் உள்ள பிரச்சனை உணர்ச்சி வசபட்டு பெரிதாக்குவது, தாழ்வு மனப்பான்மை, எளிதில் உணர்ச்சி வசபடுதல், ஒருமுறை எடுத்த முடிவை 5நிமிடத்தில் 10 முறை மாற்றுவது,மனோதிடம் இல்லாதது,உறுதிபாடு இல்லாமல் இருப்பது,
புதன் 3ஆம் பாவ உப நட்சத்திரமாக இருந்து 8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டால், காரகோபாவநாஸ்தி யாகும். நரம்பு மண்டத்திற்கு புதன் கிரக காரகமாக இருந்து 8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டு கெட்டுவிடுவதால் அதற்கு காரகோபாவநாஸ்தி என்று பெயர்.






ஒரு பாவத்திற்கு அதிபதியாக ஒரு கிரகம் இருந்து,அதே பாவத்திற்கு கிரக காரகம் வேறுயொரு கிரகமாக இருந்து கெடுத் பொழுது வரும் பாதிப்பைவிட ஒரே கிரகமே பாவத்திற்கும்,அந்த காரகத்திற்கும் அதிபதியாக இருந்து கெடும் பொழுது அதிகமான பாதிப்பை தரும். இதுவே காரகோபாவநாஸ்தி ஆகும்.






இயற்கை அசுபர்களான ராகு,கேது,சனி போன்ற கிரகங்கள் 3ம் பாவ உப நட்சத்திரமாக இருந்து அவர்கள் நின்ற நட்சத்திரம்,உப நட்சத்திரமாக ராகு,கேது,சனி போன்ற கிரகங்கள் இருக்கும் பொழுது இரத்த புற்று நோய் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.




இரத்தம் அழுத்தம் அதிகமாக்கு மற்ற பாவ பலன்கள்.






4ம் பாவம் 4,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டு இருந்து சுக்கிரனும் 4,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டுயிருக்கும் பொழுது இரத்ததில் சக்கரையின் அளவு அதிகமாகும் பொழுது உயர் இரத்தம் அல்லது சக்கரையின் அளவு குறையும் பொழுது பொழுது குறைந்த இரத்த அழுத்தம் ஏற்படும்.


                                 

No comments:

Post a Comment