Thursday, 22 February 2018

ஆடம்பர குடியிருப்புகளை கொடுக்கும் பாவங்கள் யாவை?


ஆடம்பர குடியிருப்புகளை கொடுக்கும் பாவங்கள் யாவை? 
 
டிரம்ப நிறுவனம்,இந்தியாவின் புணே,மும்பை,குருகிராம்,கொல்கத்தா ஆகிய நகரங்களில் டிரம்ப் டவர்ஸ் அடுக்குமாடி குடியிருப்புத் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது,இதில் குரு கிராமில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டம் தான் மிகப் பெரியதாகும்.47 மாடிகளுடன் 254 ஆடம்பர குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.இந்த குடியிருப்பில் உள்ள வீடுகளின் விலை 5 கோடி முதல் 11கோடி வரையாகும்.

2ம் பாவம் கையிருப்பு பணதை குறிக்கும்.2ம் பாவத்தின் பரிமாண பாவமான 4ம் பாவம் தேவைக்கு அதிகமான பணத்தை குறிக்கும்,அதாவது பல கோடிகளை குறிக்கும்.4ம் பாவம் 1000 சதுரஅடியில் கட்டபடும் வீட்டை குறிக்கும்.4ம் பாவத்தின் பரிமாண பாவமான 6ம் பாவம் பிரமாடமாண தனி வீடுகள் பண்ணை வீடுகள்,அடுக்குமாடி குடியிருப்புகளை குறிக்கும்.
சழூகத்தோடு ஒன்றிவாழ்தல்,பொது மக்களோடு இணைந்து வாழ்தல் என்பது 7ம் பாவம் ஆகும்.

பிரமாடமாண தனி வீடுகள்.பண்ணை வீடுகள்,அடுக்குமாடி குடியிருப்புகள் பொதுவாக ஊருக்கு வெளியே இருக்கும்.இந்த வீடுகளுக்கு எளிதாக பொது மக்கள் சென்று வரும் சூழல் இருக்காது.பாதுகாப்பு கெடுபிடிகள் இருக்கும்.கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தபட்டுயிருக்கும்.காம்போண்டு சுவர்கள் பெரிதாக இருக்கும். செக்கியூரிட்டிகள் இருப்பார்கள்.வந்து போவர்களை பதிவு செய்வார்கள்.இவை அனைத்து 7ம் பாவத்தின் காரகங்களுக்கு எதிரானது என்பதால் 6ம் பாவம் ஆடம்பரமான பெரிய அடுக்கு மாடி குடியிருப்புகள்,பிரமாடமாண தனி வீடுகள் பண்ணை வீடுகள் குறிக்கும்.

5கோடி முதல் 11 கோடி வரை உள்ள வீட்டை வாங்குபவர்கள் கண்டிப்பாக மாத சம்பளகாரகளாக இருக்க முடியாது.ஆண்டு சம்பளம் 3 கோடிக்கு மேல் உள்ளவர்களால் மட்டுமே இது போன்ற வீடுகளை வாங்க முடியும்.1,4,6,10ம் பாவங்கள்,சுக்கிரன யாருக்கு எல்லாம் வலிமை பெற்றுள்ளதோ அவர்களே இது போன்ற ஆடம்பர வீடுகளை வாங்க முடியும்.சுக்ரனின் அகம் சார்ந்த காரகங்களை அனுபவிப்பவர்களால் ஆடம்பரமான வீடுகளை வாங்கமுடியாது. விலை உயர்ந்த ஆடைகள்,கோர்ட்,சூட்,ஹீக்கள்,அணிகளங்கள், விலை உயர்ந்த கார்கள்,கால்அணிகளங்கள்,அழகு சாதன பொருட்கள் இவைகள் சுக்கிரனின் புற சார்ந்த காரகங்கள் ஆகும்.இவைகளை அனுபவிப்பர்கள் அகம் சார்ந்த காரகங்களை துரந்து புறம் சார்ந்த காரகங்களை அதிகமான நாட்டம் இருக்கும்.பெரியளவில் பொருள் ஈட்டுவார்களாக இருப்பார்கள்.இவர்களிடம் கருப்பு பணமும் இருக்கும்.கருப்பு பணத்திற்கு அதிபதியும் சுக்கிரன் காரகர் ஆவார்.நடிகர்கள்,நடிகைகள்,சினிமாதுறையில் உள்ளவர்கள்,விளையாட்டு வீரர்கள்,அரசியல் வாதிகள் போன்றவர்கள் 5ம் பாவத்தில் உள்ள புறம் சார்ந்த காரகங்களை அதிகமாகவும் அகம் சார்ந்த அதாவது உணர்வு பூரமாக இருப்பது என்பது சொற்பமாகவும் இருக்கும்.ஒற்றைப்படை பாவங்கள் இரட்டைப்படை பாவங்களை தொடர்பு கொள்ளும் போது ஒன்றை ஒன்று எதிர்க்கும்,தன்னுடைய இயல்பான நிலையில் இருந்து மாறிஒற்றைப்பை பாவங்கள் செயல்படும் என்பது விதியாகும்.

No comments:

Post a Comment