Saturday, 24 November 2018

ஒருவருக்கு முகவாதம் எவ்வாறு வருகிறது என்பதற்கான மருத்துவ விளக்கமும்.

தொழில் முறை உயர் கணித சார ஜோதிடத்தின் மூலமாக ஜாதக ஆய்வுகள் 1

மூளையிலிருந்து வரும் ஏழாவது கபால நரம்பு தான் முகத்தசைகளை இயக்குகிறது.மூளையின் தண்டுப்பகுதியிலிருந்து புறப் படும் இந்த நரம்பு காதின் உட்புறம் இருக்கும் “முகக்குழாய்” எனும் மிகவும் குறுகிய பகுதியின் வழியாக கபாலத்தை விட்டு வெளியேறி, முகத்திலுள்ள தசைகளுக்கு வந்து சேருகிறது. முகத்திற்கு வந்ததும் ஐந்து கிளைகளாகப்பிரிந்து முகத்தசைகள், கண்ணீர் சுரப்பிகள், உமிழ் நீர் சுரப்பிகள், நாக்கு, உள்காது ஆகியவற்றில் உள்ள தசைகளை இயக்குகிறது.இந்த நரம்பு பாதிக்கப்படும் போது இந்த தசைகளின் இயக்கங்கள் அனைத்தும் பாதிக்கப்படுகின்றன.
ஒருவருக்கு முகவாதம் எவ்வாறு வருகிறது என்பதற்கான மருத்துவ விளக்கமும்.
உயர் கணித சார தொழில் முறை ஜோதிடத்தின் விதிகளும்.
1) மூளையில் இருந்து வரும் நரம்புகளை குறிக்கும் பாவம் 1ம் பாவம் பாதிப்புயடையவேண்டும்
2) மூளையில் இருந்து வரும் நரம்புகள் காதின் பின் பக்க வழியாக சென்று முகத்தில் 5 நரம்புகளாக பிரிகிறது.அப்போது2ம் பாவம் பாதிப்புயடைய வேண்டும்.
3) பொதுவாக நரம்புகளை குறிக்கும் பாவம் 3ம் பாவம் பாதிப்புயடைய வேண்டும்.
4) நரம்புக்கு அதிபதி புதன் பாதிப்பு அடைய வேண்டும்.
5) மூளைக்கு அதிபதி சூரியன் பாதிப்பு அடைய வேண்டும்.
6)நடப்பு தசை,புத்திகளை ஆய்வு செய்ய வேண்டும்.
2005 ஆண்டுயில் முகவாதம் நோய் தாக்கியது.இடது கண்ணுக்கு அருகில் இடது பக்கம் கன்னம் இழுத்துக்கொண்டது.5ஆண்டுகள் மருத்துவம் செய்து குணம் அடைந்தார்கள்.
1)விதி மூளையில் இருந்து வரும் நரம்புகளை குறிக்கும் பாவம் 1ம் பாவம் பாதிப்புயடையவேண்டும்
லக்ன உப நட்சத்திரமாக குரு 1, 11ம் பாவங்களுக்கும், 4, 9ம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாக உள்ளார்.
குரு இயற்கை சுபர், அவர் கையிலிருக்கும் பாவங்கள் நல்ல பாவங்கள், அதாவது 1, 11, 4, 9 அதிலும் 9 ம் பாவம் குருவிற்கே உகந்த பாவம்,இந்த இடத்தில் குருவை 200 சதவீதம் சுபதன்மை உடையவர் என்று சொல்லலாம்
குரு இயற்கை சுபர். கூடவே கையில் வைத்திருக்கும் பாவங்கள் சுபத் தன்மை உடையது, இந்த ஜாதகர் இயற்கையிலேயே மென்மையான சுபாவம் கொண்டவர், எல்லோரையும் இன்முகத்தோடு வரவேற்பார், எல்லோரையும் நன்றாக. உபசரிப்பார்.
ஒரு கிரகம் இயற்க்கை சுபராக இருந்து,தன்னுடைய கையில் சுப தன்மையுள்ள பாவங்களை வைத்திருந்து,அந்த கிரகம் நின்ற நட்சத்திரம்,உப நட்சத்திரம் மூலமாக தொடர்பு கொண்ட பாவங்கள் லக்னத்திற்கு தீமையை செய்யும் 8,12ம் பாவங்களாக இருந்தாலும்,சுப கிரகம் வலி வேதனைகளை தரும் ஆனால் அதில் கொடூரதன்மை இருக்காது.
குரு நின்ற நட்சத்திரம் சந்திரன் 3, 12 பாவங்களுக்கும் உப நட்சத்திரமாகவும், 12ம் பாவத்திற்கு ஆரம்பமுனை நட்சத்திரமாகவும் உள்ளார்.
1ம் பாவ உப நட்சத்திரமாக உள்ள கிரகம் 8ம் பாவத்திற்கு உப நட்சத்திரமாக வரக்கூடாது, வந்தால் பெரும் தீமை தரும் என்று நம் குருநாதர் சொல்லியிருக்கிறார்.இந்த விதியை 12ம் பாவத்திற்கும் பயன்படுத்தலாம்.
சந்திரன் 3,12ம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாகவும் 12ம் பாவத்திற்கு ஆரம்ப முனை நட்சத்திரமாகவும் உள்ளதால்.இவருடைய நட்சத்திரம்,உப நட்சத்திரத்தில் கோச்சாரத்தில் செல்லும் கிரகங்கள் 3,12ம் பாவ வேளையை செய்யும் போது ஜாதகருக்கு பிரச்சனைகளை தரும் என்ற விதிபடி.
3ம் பாவத்தில் இருந்து எண்ணிவரும் போது 12ம் பாவம் 10ம் பாவமாக வரும்,12ம் பாவத்தில் இருந்து எண்ணி வரும் போது 3ம் பாவம் 4ம் பாவமாக வரும்.இதனால் சந்திரன் 3ம் பாவ வேளையை 70 சதவீதமும்,12ம் பாவ வேளையை 30 சதவீதமும் செய்வார்.
நட்சத்திரம் காட்டிய சம்பவம் நடந்தே தீரும்.அந்த சம்பவம் தொடர்ந்து நடக்குமா? அல்லது சிறிது செயல்பட்டு நின்றுவிடுமா?அல்லது உடனே துண்டிக்கபடுமா என்பதை குரு நின்ற உப நட்சத்திரம் தீர்மானிக்கும்.
குரு நின்ற உப நட்சத்திரம் ராகு 5 பாவத்திற்க்கும் உப நட்சத்திரமாகவும்,3,10ம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாகவும், 1,5ம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாகவும் உள்ளார்.
சந்திரன் காட்டிய 3,12பாவங்களை உடைக்ககூடிய பாவங்களான 3ம் பாவத்தை கெடுக்க்கூடிய 2,6,10ம் பாவங்களை காட்டவில்லை.12ம் பாவத்தை உடைக்க கூடிய 3,7,11ம் பாவங்களை குரு நின்ற உப நட்சத்திரம் ராகு காட்டவில்லை.இதனால் குரு நின்ற நட்சத்திர சம்பவம் தொடர்ந்து நடக்கும்.
12ம் பாவம் 30 சதவீதம் செயல்படுவதால் ராகு வைத்துள்ள 5ம் பாவ 75 சதவீத வலிமை செயல்படாது.1ம்பாவம் 15 சதவீதம் செயல்படாது.மற்றும் 1,5ம் பாவங்களை கெடுத்துக்கு கொண்டு குரு 3,12ம் பாவ வேளையை செய்வார்.
ஜாதகரின் செயல் திறனை,செயல்படுவது லக்னம் பாவம் என்றால் அதனுடைய 12ம் பாவம் செயல்திறனையிழத்தலை குறிக்கும்.
1ம் பாவம்12ம் பாவத்தை செயல்படுத்தும் போது மூளையில் சில பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
ஒரு கிரகம் 12ம் பாவத்திற்கு உப நட்சத்திரம் மூலமாக 60 சதவீதம் வலிமையோடு செயல்படுகிறதா? அல்லது உபஉப நட்சத்திரமாக இருந்து 25சதவீதம் வலிமையோடு செயல்படுகிறதா? ஆரம்பமுனை நட்சத்திரமாக இருந்து 15சதவீதம் வலிமையோடு செயல்படுகிறதா? என்பதை கவனத்தில் கொண்டுநான் பலனை சொல்ல வேண்டும்.
குரு3ம் பாவத்தை 70 சதவீத்மும்,12ம் பாவத்தை 30 சதவீதமும் செயல்படுத்துகிறார். 3ம் பாவம் என்பது லக்னத்திற்கு சாதகமான பாவம்,லக்னத்தின் பரிமாண பாவம் ஆகும்.லக்ன காரகங்களை 200 சதவீதம் வலிமைபெறும் என்பதை காட்டுகிறது.
1ம் பாவம் நோய் எதிர்ப்பு திறன்,செல்கள் உற்பத்தி,ஜாதகரின் தனி திறமை, முழுமை யான தோற்றம்,கௌரவம்,புகழ்,வெற்றிகளை குறிக்கும், இவற்றியெல்லாம் மறுக்கும் பாவம்12ம் பாவம். என்பது தோல்வி,ஏமாற்றம்,செயல்திறன் இல்லை,நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக இருப்பது,தாழ்வு மனப்பான்மை ஆகியவற்றை குறிக்கும்.
லக்ன பாவம் 70 சதவீதம் 3ம் பாவத்தையும்,30 சதவீதம் 12ம் பாவத்தையும் செயல்படுத்துவதால் ஜாதகரின் மூளையில் சில குறைப்பாடுகள் இருக்க வாய்ப்பு உள்ளது.
2)விதி பாவம் மூளையில் இருந்து வரும் நரம்புகள் காதின் பின் பக்க வழியாக சென்று முகத்தில் 5 நரம்புகளாக பிரிகிறது.அப்போது2ம் பாவம் பாதிப்புயடைய வேண்டும்.
2,8ம் பாவங்களுக்கு புதன் உப நட்சத்திரமாகவும், 6,7, 11ம் பாவங்களுக்கும் உபஉப நட்சத்திரமாக உள்ளார்.
1ம் பாவ உப நட்சத்திரம் 8ம் பாவத்திற்கு உப நட்சத்திரம் ஆக வரக்கூடாது, வந்தால் பெரும் தீமை தரும் என்று நம் குருநாதர் சொல்லியிருக்கிறார்.
அந்த விதியை 2ம் பாவம்8ம் பாவத்திற்கு உப நட்சத்திரமாக வந்தால் பாதிப்பை தரும் என்று கூறலாம்.
புதன் 2,8ம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாகவும்,6,7,11ம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாகவும் உள்ளார். ஆரம்ப முனை நட்சத்திரமாக எந்த பாவங்களுக்கும் இல்லை,3,7,11ம் பாவங்களை உடைக்கும் 2,6ம் பாவத்திற்கு புதன் ஆதிபத்தியம் பெற்றுள்ளதால் 7,11ம் பாவங்களை கெடுத்துக்குக்கொண்டு 2,6,8ம் பாவங்களை புதன் செயல்படுவார்.
இவருடைய நட்சத்திரம்,உப நட்சத்திரத்தில் கோச்சாரத்தில் செல்லும் கிரகங்கள் 2,6,7,8,11ம் பாவ வேளையை செய்யும் போது ஜாதகருக்கு பிரச்சனைகளை தரும் என்ற விதிபடி.
1ம் பாவ உப நட்சத்திரமாக உள்ள கிரகம் 8ம் பாவத்திற்கு உப நட்சத்திரமாக வரக்கூடாது, வந்தால் பெரும் தீமை தரும் என்று நம் குருநாதர் சொல்லியிருக்கிறார்.இந்த விதியை மற்ற பாவங்களுக்கு பயன்படுத்தலாம்.
புதன் 2,8ம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாகவும் 6,7,11ம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாகவும் உள்ளார்.8ம் பாவத்திற்கு 6ம் பாவம் 11ம் பாவமாக வருவதால் 6,8ம் பாவங்களின் தாக்கம் அதிகமாக இருக்கும்.புதனுடைய நட்சத்திரம்,உப நட்சத்திரத்தில் கோச்சாரத்தில் செல்லும் கிரகங்கள் 7,11ம் பாவங்களை கெடுத்துக்கொண்டு 2,6,8ம் பாவ வேளையை செய்யும் போது ஜாதகருக்கு பிரச்சனைகளை தரும் என்ற விதிபடி.
புதன் நரம்புக்கு அதிபதி,உணர்வு புலன்களுக்கு அதிபதிபாக உள்ளார்.2,6,7,8,11ம் பாவங்களில் உள்ள உறுப்புகளில் நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும்.
புதன் நின்ற நட்சத்திரம் சூரியன் 8ம் பாவத்திற்கு உப உப நட்சத்திரமாகவும்,4,8ம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாகவும் உள்ளார்.
ஒரு கிரகம் 6,8ம் பாவங்களுக்கு உப நட்சத்திரம் அல்லது உப உப நட்சத்திரம் அல்லது ஆரம்பமுனை நட்சத்திரமாக இருந்து தான் நின்ற நட்சத்திரம்,உப நட்சத்திரம் மூலம் 6,8ம் பாவங்களை தொடர்பு கொள்ளும் போது மிக பெரியளவில் பாதிப்புகளை உண்டாக்கும்.
மேலே குறிப்பிட்ட விதிபடி புதன் நின்ற நட்சத்திரம் சூரியன் 8ம் பாவத்திற்கு உப உப நட்சத்திரமாகவும்,4,8ம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாகவும் உள்ளதால் புதனின் மூல பாவத்தில் உள்ள 2,6,8ம் பாவங்கள் வலிமையாக பாதிப்பு அடையும்,அதே நேரத்தில் 7,11ம் பாவங்களுக்கு உப உப நட்சத்திரமாகவும் புதன் உள்ளதால் அதன் பாவங்களை கெடுத்துக்கொண்டு புதன் செயல்படுவார்.
புதன் நின்ற உப நட்சத்திரம் சுக்கிரன் 6,9ம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாகவும்,1,2,5 ம் பாவங்களுக்கு உப உப நட்சத்திரமாகவும் நட்சத்திரம் காட்டிய 4,8ம் பாவங்களை உடைக்கும் 3,7,11ம் பாவங்களை உப நட்சத்திரம் காட்ட வில்லை அதனால் நட்சத்திர சம்பவம் தொடர்ந்து நடக்கும்.உப நட்சதிதரம் சுக்கிரன் காட்டிய 1,5,9ம் பாவங்களுக்கு நட்சத்திரம் 12ம் பாவத்தை காட்டுவதால் 1,5,9ம் பாவங்கள் வலிமை குன்றிவிடும்,அதே நேரத்தில் 2,6ம் பாவங்கள் நட்சத்திரம் காட்டிய 4,8ம் பாவங்களை வலிமையாக செயல்பட வழிவகுக்கும்.
இதனால் ஜாதகருக்கு 2,6,7,8,11ம் பாவங்களில் குறிப்பிடும் உறுப்புகளில் பிரச்சனைகள் தோன்ற வாய்ப்புகள் உள்ளன.
3வது விதி பொதுவாக நரம்புகளை குறிக்கும் பாவம் 3ம் பாவம் பாதிப்புயடைய வேண்டும்.
சந்திரன் 3,12ம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாகவும் 12ம் பாவத்திற்கு ஆரம்ப முனை நட்சத்திரமாகவும் உள்ளார்.3,12ம் பாவங்களின் நின்ற நட்சத்திரம்,உப நட்சத்திரம் நடக்கும் தசை,புத்திகளுக்கு ஏற்ப்ப மாறிக்கொண்டுயிருக்கும்.
சந்திரன் 3,12ம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாகவும் 12ம் பாவத்திற்கு ஆரம்ப முனை நட்சத்திரமாகவும் உள்ளதால்.இவருடைய நட்சத்திரம்,உப நட்சத்திரத்தில் கோச்சாரத்தில் செல்லும் கிரகங்கள் 3,12ம் பாவ வேளையை செய்யும் போது ஜாதகருக்கு பிரச்சனைகளை தரும் என்ற விதிபடி.
3ம் பாவத்தில் உள்ள நரம்பு மண்டலம்,உணர்வு புலன்கள்,கைகள், தோள் பட்டை,ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணம்(உடலில் உள்ள நடக்கும் பயணம்) போன்றவற்றில் பாதிப்புகள் அடைய வாய்ப்புகள் உள்ளன.
4வது விதி நரம்புக்கு அதிபதி புதன் பாதிப்பு அடைய வேண்டும்.
புதனை பற்றி ஏற்கெனவே ஆய்வுகள் செய்துள்ளோம்.
5வது விதி மூளைக்கு அதிபதி சூரியன் பாதிப்பு அடைய வேண்டும்.
சூரியன் 8ம் பாவத்திற்கு உபஉப நட்சத்திரமாகவும்,4,8ம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாகவும் உள்ளார்.
ஒரு கிரகம் மூலபாவத்தில்(கையில் உள்ள பாவங்கள்) 8,12ம் பாவங்களை வைத்திருந்தால்அந்த கிரகம் தீமையான கிரகம் ஆகும்.
அந்த கிரகம் சூரியனுடைய நட்சத்திரம்,உப நட்சத்திரத்தில் கிரகங்கள் கோச்சாரத்தில் செல்லும் போது 8,4,8,12ம் பாவ வேளைகளை செய்யும் அப்போது ஜாதகருக்கு பிரச்சனைகளை தரும் என்ற விதிபடி.
ஒரு கிரகம் மூலபாவத்தில்(கையில் உள்ள பாவங்கள்) 8ம் பாவங்களை வைத்திருந்தால்அந்த கிரகம் தீமையான கிரகம் ஆகும்.
8,12ம் பாவங்களுக்கு நட்சத்திரம் ,உப நட்சத்திரமாக உள்ள கிரகங்களின் நட்சதிதரம், உப நட்சத்திரத்தில் எந்த கிரகம் இல்லாமல் இருப்பது நல்லது.8,12ம் பாவ வேளையை செய்ய ஏஜெண்டுகள் இல்லாமல் இருந்தால் 8,12ம் பாவ வேளைகள் திரும் திரும்ப நடக்காது ஜாதகருக்கு என்ற விதிபடி.
8,12ம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக,உபஉப நட்சத்திரமாக,ஆரம்பமுனை நட்சத்திரமாக உள்ள கிரகங்கள் தான் நின்ற நட்சத்திரம்,உப நட்சத்திரம் மூலம் 3,7,11ம் பாவங்களை தொடர்பு கொண்டு வலிமை இழப்பது மிகவும் நன்று அல்லது 1,5,9ம் பாவங்களை தொடர்பு கொள்வது சிறப்பு அல்லது 2,4,6,10ம் பாவங்களை தொடர்பு கொண்டு வலிமை பெற்றாலும் 2,4,6,10ம் பாவங்கள் லக்னத்திற்கு தீமை இல்லை என்பதால் சிறு பாதிப்புகள் மட்டுமே இருக்கும்.8,12ம் பாவங்களையே தொடர்பு கொள்ளும் போது மிகவும் கொடூரமான முறையில் துன்பங்களை ஜாதகர் அனுபவிக்க வேண்டி வரும்.அவ்வாறு 8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டாலும் அந்த கிரகம் உப நட்சத்திரமாக அல்லது உபஉப நட்சத்திரமாக அல்லது ஆரம்பமுனை நட்சத்திரமாக இருந்து தொடர்பு கொண்டுள்ளதா?என்று பார்த்து அதன் பலம்
சூரியன் நின்ற நட்சத்திரம் சூரியாக உள்ளது.சூரியன் 8ம் பாவத்திற்கு உப உப நட்சத்திரமாகவும்,4,8ம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாகவும் உள்ளார். சூரியனில் கையில் உள்ள மூல பாவங்கள் மிகவும் வலிமை பெறுகிறது. சூரியன் நின்ற உப நட்சத்திரம் நட்சத்திரம் காட்டிய 4,8ம் பாவங்களுக்கு 12ம் பாவங்களை காட்டினால் நட்சத்திரம் சம்பவம் உடனே துண்டிக்கபடும்.சூரியன் நின்ற உப நட்சத்திரம்சந்திரன்3,12ம்பாவங்களுக்கு உபநட்சத்திரமாகவும்,12ம் பாவத்திற்கு ஆரம்பமுனை நட்சதிதரமாகவும் உள்ளார்.3ம் பாவம்4,8ம் பாவங்களை உடைத்துவிடும் என்பதால் நட்சத்திரம் காட்டிய சம்பவம் துண்டிக்கபட்டு.3ம் பாவம் 70 சதவீதமும்,12ம் பாவம் 30 சதவீதமும் இரண்டும் கலந்தமாதிரியாக செயல்படும்.
சூரியன் 8,4,8ம் பாவங்களுக்கு ஆதிபத்தியம் பெற்று 12ம் பாவத்தை தொடர்பு கொண்டது தீமையானால் அந்த 12ம் பாவம் 30 சதவீதம் வலிமை மட்டுமே உள்ளது மற்றும் 3ம் பாவம் 70 சதவீதம் உடன் உள்ளதை நினைவில் கொள்ள வேண்டும்.சூரியன் முழுமையான பாவி இல்லை.
மூளையில் 30 சதவீத அளவிற்கு கிரக காரகம் சூரியன் மூலமாக பாதிப்பு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
6வது விதி நடப்பு தசை,புத்திகளை ஆய்வு செய்ய வேண்டும்.2005 ஆண்டுயில் முகவாதம் நோய் தாக்கியது.இடது கண்ணுக்கு அருகில் இடது பக்கம் கன்னம் இழுத்துக்கொண்டது.5ஆண்டுகள் மருத்துவம் செய்து குணம் அடைந்தார்கள்.
31.08.1999 அன்று முதல் சந்திர தசை நடக்கிறது.2005 ஆண்டு முகவாதம் நோய் தாக்கிய போது சந்திர தசையில் சனி புத்தி நடந்துக்கொண்டுயிருந்தது.
சந்திரன் 3,12ம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாகவும் 12ம் பாவத்திற்கு ஆரம்ப முனை நட்சத்திரமாகவும் உள்ளார்.3,12ம் பாவங்களின் நின்ற நட்சத்திரம் நடக்கும் தசைநாதனாகவும்,உப நட்சத்திரம் நடக்கும் புத்திநாதனாகவும் யிருக்கும்.சந்திர தசையில் சந்திர நின்ற நட்சத்திரம் சந்திரனாகவும்,சந்திரன் நின்ற உப நட்சத்திரம் நடக்கும் புத்திகளுக்கு ஏற்ப மாறிக்கொண்டுயிருக்கும்.
சந்திரன் 3,12ம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாகவும் 12ம் பாவத்திற்கு ஆரம்ப முனை நட்சத்திரமாகவும் உள்ளதால்.இவருடைய நட்சத்திரம்,உப நட்சத்திரத்தில் கோச்சாரத்தில் செல்லும் கிரகங்கள் 3,12ம் பாவ வேளையை செய்யும் போது ஜாதகருக்கு பிரச்சனைகளை தரும் என்ற விதிபடி.
சந்திரன் =சந்திரன் + சனி
3,12 3,12 4,7,10 =4,7,10,2,6 தொடர்புகள்
12 12 2,6,10
எந்த ஒரு நோயும் அது முற்றிய நிலையில் தான் ஜாதகருக்கு தெரியவரும். சந்திரன் உப நட்சத்திரமாக உள்ள 3,12ம் பாவங்களுக்கு சனி உப நட்சத்திரமாக இருந்து ஒரு பலனையம்,மற்ற பாவங்களுக்கு தான் நின்ற நட்சத்திரம்,உப நட்சத்திரம் மூலம் தொடர்பு கொண்ட பாவங்களை வேளையை செய்யும்.
சனி 2,4,6,8 பாவ வேளையை செய்யும்.இதில் 8ம் பாவ வேளையை 100 சதவீதமும்,2ம் பாவ 60 சதவீதம்,4ம் பாவ வேளையை 15 சதவீதமும்,6ம் பாவ வேளையை 25 சதவீதமும் செய்யும்.7,11ம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாக உள்ளதை கெடுத்துக்கொண்டு சனி செயல்படுத்துவார்.
சந்திர தசையில் சனி புத்தில் முகவாத நோய் வந்தற்கான காரணம் நன்கு புலன் ஆகிறது.
1ம் பாவம் முழுமையாக பாதிக்கபடவில்லை 3,12ம் பாவங்களை தொடர்பு கொண்டுள்ளது. 3ம் பாவ வேளையை 70 சதவீதமும்,12ம் பாவ வேளையை 30 சதவீதமும் செயல்படுத்துவார்.
சூரியனும் 3,12ம் பாவங்களை தொடர்பு கொண்டுயிருந்து 3ம் பாவ வேளையை 70 சதவீதமும்,12ம் பாவ வேளையை 30 சதவீதமும் செயல்படுத்துவார்.
2ம் பாவ உப நட்சத்திரமாக புதன் இருந்து கடுமையாக பாதிக்கபட்டுள்ளார்
நரம்புக்கு அதிபதி புதன் கடுமையாக பாதிக்கபட்டுள்ளார்
3,12ம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக சந்திரன் இருந்து ஒரளவுக்கு பாதிக்கபட்டுள்ளது.
சம்பவம் நடந்த போது நடந்த தசை சந்திர 3,12,12ம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக இருந்து தசை நடத்திதால் பாதிப்பு ஏற்பட்டது.3ம் பாவ வேளை 70 சதவீதமும்,12ம் பாவ வேளையை 30 சதவீதமும் செய்வார் சந்திரன்.
ஆய்வு முடிவு.
லக்னம்,சூரியன்,3ம் பாவம்,சம்பவம் நடந்த போது நடந்த தசை சந்திர தசை பகுதியளவே பாதிக்கபட்டுருந்து,
2ம் பாவமும்,புதனும் மட்டும் முழுமையாக பாதிக்கபட்டுயிருந்தால் ஜாதகருக்கு முழுமையான பாதிப்பை தர முடியாமல் போனது.

இவ்வாறு தொழில் முறை உயர் கணித சார ஜோதிடத்தில் துல்லியாமாக பலனை கூற முடியும்
Add caption

1 comment: