Friday, 18 March 2016

ஜோதிடம் என்பது என்ன பொருள்

                                              சிவாயநம


                            ஜோதிடம் என்பது என்ன பொருள்




ஜோதிடத்தில் முதல் முதலில் விண்வெளியில் சுற்றி வரும் நட்சத்திரகள், ஒவ்வொரு கூட்டமாக சுற்றி வருவதையும், அந்த நட்சத்திர கூட்டத்தை கொண்டே பலன்கள் நிர்ணையம் செய்யபடுகிறது, விண்வெளியில் பல நட்சத்திர கூட்டங்கள் இருந்தாலும் அவற்றில் 27 நட்சத்திர கூட்டங்களே பூமியின் மீது ஒருவிதமான நன்மைகளை அல்லது தீமைகளையோ செய்கிறது.பிறகு கோள்கள் கண்டுபிடித்தனர்,அந்த கோள்கள் அந்த 27 நட்சத்திரகள் வழி வளிமண்டத்தை சுற்றி வருகிறது. அப்பொழது நிகழம் கிரகங்களின் சேர்க்கையால் ஏற்படும் பூமியில் நன்மை அல்லது தீமைகள் ஏற்படுகின்றன.

27 நட்சத்திரங்களை கொண்ட ராசி மண்டலத்தை 360 டிகிரியாக பிரிக்கபட்டுள்ளது,ஒவ்வொரு ராசியும் 30 டிகிரியாக பிரிக்கபட்டுள்ளது,ஒருநட்சத்திரம் என்பது 13.20 டிகிரியாக ஆகும் மற்றும் ஒருநட்சத்திரம் என்பது 9பாதங்களை கொண்டது ஒரு பாதம் என்பது 03.20 டிகிரி ஆகும்,ஒரு ராசி என்பது 9 பாதங்களாக பிரிக்கபட்டுள்ளது,12 ராசிகள் 108 பாதங்களாக பிரிக்கபட்டுள்ளது.

சூரியன் ஒரு மாதம் ஒரு ராசியில் இருப்பார்
சந்திரன் இரண்டேகால் நாட்கள் ராசியில் இருப்பார்
செவ்வாய் 1.5 மாதம் ஒரு ராசியில் இருப்பார்
புதன் 1 மாதம் ஒரு ராசியில் இருப்பார்
குரு 1 ஆண்டு ஒரு ராசியில் இருப்பார்
சுக்கிரன் 1 மாதம் ஒரு ராசியில் இருப்பார்
சனி 2.5 ஆண்டுகள் ஒரு ராசியில் இருப்பார்
ராகு 1.5 ஆண்டுகள் ஒரு ராசியில் இருப்பார்
கேது 1.5 ஆண்டுகள் ஒரு ராசியில் இருப்பார்

ஜோதிட விதிகளை உருவாக்கிய முனிவர்கள்,சித்தர்கள்,நம் முன்னோர்கள் ஒவ்வொரு ராசியிலும் உள்ள கிரகங்கள் அந்த கிரகங்களை பார்க்கும் கிரகங்கள்,அந்த கிரகங்களோடு இணைந்துள்ள கிரகங்கள்(ஒரு பாத்த்தில்) முதலியவற்றால் ஏற்படும் நன்மைகளையும்,தீமைகளையும் மிகவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.

கோச்சாரம் என்பது
1) ஒருவருடைய ஜாதகத்தில் நன்மை செய்யும் கிரகம் கோட்சாரத்தில் நன்மை செய்யும் விதத்தில் இருந்து அந்த கிரகத்தின் தசையே நடக்கும் போது அதிகமான நன்மையை ஜாதகர் அடைவார்
2) ஒருவருடைய ஜாதகத்தில் நன்மை செய்யும் கிரகம் கோட்சாரத்தில் தீமை செய்யும் விதத்தில் இருந்து அந்த கிரகத்தின் தசையே நடக்கும் போது நன்மையை குறைத்து செய்வார் ஆனால் தீமையை செய்யமாட்டார்.
3) ஒருவருடைய ஜாதகத்தில் தீமை செய்யும் கிரகம் கோட்சாரத்தில் தீமை செய்யும் விதத்தில் இருந்து அந்த கிரகத்தின் தசையே நடக்கும் போது அதிகமான தீமையை ஜாதகர் அடைவார்
4) ஒருவருடைய ஜாதகத்தில் தீமை செய்யும் கிரகம் கோட்சாரத்தில் நன்மை செய்யும் விதத்தில் இருந்து அந்த கிரகத்தின் தசையே நடக்கும் போது தீமையை குறைத்து செய்வார் ஆனால் நன்மையை செய்யமாட்டார்.


இவைகளே நம்முன்னோர்கள் வகுத்த விதிகள் ஆகும்.


ஆனால் சுமார் 15 ஆண்டுகளாக தனியார் தொலைக்காட்சிகள் மற்றும்,தினசரி பத்திரிக்களில் ராசி பலன்கள் என்ற பெயரில் பொதுவான பலன்களை அனைவருக்கும் பொருந்தும் பலன்கள் போல கூறிவருகின்றனர் இது முற்றிலும் தவறுயாகும். ஒவ்வொருக்கும் அவர் பிறந்த இடம் பிறந்த நேரம்,பிறந்த தேதி கொண்டு ஜாதகம் கணித்து அவருக்கு நடக்கும் தசையை கொண்டே பலன்களை கூறவேண்டும் என்பது நம்முன்னோர்கள் வகுத்த பலன்கள் ஆகும் ஆனால் அதற்க்கு மாறாக


தமிழ் நாட்டியின் ஜனதொகை 10கோடி என்று கொண்டால் 12 ராசிக்கு பங்கிடும் போது


ஒரு ராசிக்கு வரும் மக்கள் தொகை 83,33,333ஒரு ராசிக்கு உள்ள இத்தனை மனிதர்களுக்கும் ஒரே பலன் நடக்கிறதா என்றால் இல்லை ஒரு ராசியில் சழூதாயத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் உள்ளன அவ்வாறுயிருக்கும் அபொழது அவர்களுக்கு அனைவருக்கும் ஒரே பலனை கூறுவது எவ்வாறு பொருந்தும் என்பதே என்னுடைய கேள்வியாகும்.


ஒரு ராசியில் உள்ள இரண்டேகால் நட்சத்திரங்களுக்கு 83,33,33 லட்சம் மக்களை பிரிக்கும் போது ஒரு நட்சத்திரத்திக்கு வரும் 3703703 லட்சம் மக்கள் வருகிறார்கள் 

அப்பொழது ஒரு நட்சத்திரத்தில் பிறந்த அனைத்தும் மக்களுமே ஒரு பலன் நடக்கவில்லை 

அப்படியிருக்கும் போது ஒரு ராசிக்கு ஒரே பலனாக சொல்லுவது சரியா என்பது என்னுடைய கேள்வியாகும்.


நேரடியாக கேள்விக்கு வருகிறேன்
ஒரு காமாராஜர் தான் உள்ளார்
ஒரு கக்கன் தான் உள்ளார்
ஒரு கலைஞர் கருணாநிதிதான் தான் உள்ளார்
ஒரு செல்வி ஜெயலிலதா தான் உள்ளார்
ஒருசிவாஜிகணேசன்,எம்.ஆர்.ராதா,என்.ஏ.கே.கிருஷ்ணன்,பாலயா,இளையராஜ மற்றும் ஏ.ஆர்.ரகுமான் தான் உள்ளார்,
இவர்களில் தனி திறமை என்பது அவர்களின் பிறந்த ஜாதகத்தை அடிப்படையாக கொண்டது இவர்களும் ஏதாவது ஒரு ராசியில் பிறந்து இருப்பார்கள் மற்றும் ஏதாவது ஒரு நட்சத்திரத்தில் பிறந்துயிருப்பார்கள் அவர்களால் எட்ட முடிந்த உச்ச நிலை அவருடைய ராசியில் பிறந்த மற்ற மக்களால் அடைய முடியவில்லை மற்றும் அவருடைய நட்சத்திரத்தில் பிறந்த மற்ற மக்களால்அடைய முடியவில்லை ஏன்என்பதே என்னுடைய கேள்வியாகும்?

இவ்வாறு இருக்கும் போது
சனி பெயர்ச்சி பலன்
குரு பெயர்ச்சி பலன்
ராகு பெயர்ச்சி பலன்
கேது பெயர்ச்சி பலன்களுக்கு பொதுவாக கூறுவது எவ்வாறு ஏற்றுக்கொள்வது.
அனைவருக்கும் எளிதில் புரியும்படியான கேள்வி
17.03.2016 அன்று எவ்வளவு குழந்தைகள் பிறந்துள்ளனே,
1) அவர்களில் சில பேர் அரசாங்க மருத்துவமனையில் பிறந்துள்ளனர்
2) அவர்களில் சில பேர் தனியார் மருத்துவமனையில் ஒரு லட்சம் செலவு செய்து பிறந்துள்ளனர்
3) அவர்களில் சில பேர் அவர்களின் வீட்டியிலே பிறந்துள்ளனர்
4) அவர்களில் சில பேர் உடல் நலகுறைவோடு பிறந்துள்ளனர்
5) அவர்களில் சில பேர் உடல் எடை அதிகமாக பிறந்துள்ளனர்
6) அவர்களில் சில பேர் உடல் எடை குறைவாக பிறந்துள்ளனர்
7) அவர்களில் சில பேர் உடல் ஊனத்தோடு பிறந்துள்ளனர்
8) இது போல எவ்வளவோ கேள்விகளை கேட்டமுடியும் ஆனால் இதற்க்கு எல்லாம் ராசி பலனை சொல்லுபவர்களிடம் பதில் இல்லை

துல்லியமாக பலன்களை கண்டறிய வழி என்ன அடுத்த பதிவில்


No comments:

Post a Comment