Tuesday, 22 March 2016

துல்லியமாக பலன் காணும் ஜோதிட முறையும் அதற்க்கான வழிமுறைகளும்

                                             சிவாயநம
துல்லியமாக பலன் காணும் ஜோதிட முறையும் அதற்க்கான வழிமுறைகளும்

துல்லியமான பலன்கள் சொல்லுவதற்க்கு முன்னோர்கள் ராசி கட்டத்தை பல பிரிவுகளாக பிரித்து வகுத்துள்ளனர். அவ்வாறு 12 பிரிவுகளாக பிரித்து பலன் காணும் முறையை உருவாக்கியுள்ளேனர்,மற்றும் அட்டவர்க்கம் என்ற பெரிய அளவில் ஒரு கணித முறையும் உருவாக்கியிருந்தனர், வேதை,பருவம் என்ற தசைக்குரிய கிரகங்களின் வலிமையை அறியும் முறையும் உருவாக்கியிருந்தனர், ஆனால்  இதற்க்குயல்லாம் தெளிவான வழி காட்டும் புத்தகங்கள் நமக்கு கிடைட்க்கவில்லை,அதற்க்கான ஆய்வுகள் செய்ய போதிய நேரம் இன்மை அல்லது அறிவுயில்லை என்பதால் பெருபாலன்னோர் ராசி கட்டத்தை மட்டுமே வைத்து பலன் சொல்லுகிறார்கள்.

ஜோதிட அறிவு உள்ள ஒரு பிரிவினர் ஜாதகர் கொடுத்த ஜாதகத்தை கணித்து பார்த்து ராசி,அம்சம்,பாவ சக்கரத்தை கொண்டு பலன் சொல்லுகிறார்கள் இவர்கள் நன்றாகவே பலன் உரைக்கிறார்கள்,ஆனால் பெருபால ஜோதிடர்கள் ராசி கட்டத்தையும் வைத்தே பலன் உரைக்கிறார்கள்,மற்றும் ஏழரை சனி,அஷ்டம சனி, அஷ்டம குரு, அஷ்டம ராகு, அஷ்டம கேது போன்றவையை வைத்தே நன்மை மற்றும் தீமை பலன் கூறுகிறார்கள்,தசைக்கோ, புத்திக்கு வருவது இல்லை.

ஒரு கிரகத்தின் ஆதிபத்தியத்திற்க்கு,அந்த கிரகம் இருக்கும் இடம்,அந்த கிரகம் நின்ற நட்சத்திரஅதிபதியின் ஆதிபத்தியம் போன்றவற்றுக்கு முக்கியத்தும் அளிக்காமல் சேர்க்கை, பார்வை,பாதகசானம் போன்றவற்றுக்கு முக்கியத்தும் அளிக்கிறார்கள்.

சேர்க்கை என்பது ஒரு பாதத்தில் இணைந்து இருப்பது என்று பாரம்பரிய நூல்களில் விளக்கபட்டுள்ளது.

ஒரு கிரகம் அப்படி 30டிகிரி உள்ள ஒரு ராசியை ஒரே மாதிரியாக பார்த்து பலனை தராது.

பாதகாதிபதியால் முழுமையாக நல்ல ஆதிபத்தியில் உள்ள ஒரு கிரகத்தை கெடுக்கும் என்று பாரம்பரிய நூல்களில்  கூறவில்லை.

பாரம்பரியமுறையில் உள்ள பலன் கூறுவதில் உள்ள தெளிவாக பலன் கூறுவதில் உள்ள பிரச்சனைகளை சென்ற நூற்றாண்டில் வாழ்ந்து காலஞ்சென்ற ஜோதிட மேதை கோபால கிருஷ்ணன் (மீனா),கே.எஸ்.கிருஷ்ணழூர்த்தி அவர்கள் பெரும் பாடுபட்டனர்.

ஒரு தசை என்பதை ஒரு நட்ச்த்திரமாக எடுத்துக்கொண்டு அந்த தசையின் உட்பிரிவுகளான புத்திகளை எப்படி தசையிலைருந்து பிரிக்கின்றோமோ அதன்படி நட்சத்திரத்தை பிரிப்பது சரியான பலனைத் தரும் என்ற சிந்தனை சென்ற நூற்றாண்டில் வாழ்ந்து காலஞ்சென்ற ஜோதிட மேதை கோபால கிருஷ்ணன்(மீனா)அவர்களுக்கு வந்தது,அதன்படி அவர் ஒரு நட்சத்திரத்தை ஒன்பது பிரிவுகளாக பிரித்தார்,அதாவது 27*9=243 ஆகும்,இது தான் சார ஜோதிடத்தின் அடுத்த பரிணாமத்திற்கு மூல காரணமாக அமைந்தது.

சென்ற நூற்றாண்டில் அதே காலக்கட்டத்தில் வாழ்ந்த ஜோதிட மாதேதை பேராசிரியர் கே.எஸ்.கிருஷ்ணழூர்த்தி அவர்கள்,இந்த 243 உட்பிரிவுகளை மேலும் மேம்படுத் தினார்.அதாவது சூரியன்,குரு நட்சத்திரங்களில் உள்ள சந்திரன்,ராகு உட்பிரிவுகள் இரண்டு ராசிகளில் வருவதால் 243 உப பிரிவுகளுடன் மேலும் 6 உப பிரிவுகளை சேர்த்து 249 பிரிவுகளாக ராசி மண்டலத்தை பிரித்தார்,இந்த உட்பிரிவுகளுக்கு இவர் உப நட்சத்திரம்(SUBLORD)என்று பெயரிட்டு ஜோதிட உலகில் ஒரு மறுமலர்ச்சியை உண்டாக்கினார்.

பேராசிரியர் கே.எஸ்.கிருஷ்ணழூர்த்தி அவர்கள் ஒரு கிரகம் தான் நின்ற நட்சத்திர அதிபதியின் பலனை தரும் என்ற நிலையில் இருந்து சார ஜோதிட முறையை நட்சத்திரம் சம்பவத்தை காட்டும் என்றும் உப நட்சத்திரம் நட்சத்திரம் காட்டிய சம்பத்திற்கு சாதக,பாதக பலனை தரும் என்றும் மேம்படுத்தினார்.

மேலும் திரு.கே.எஸ்.கிருஷ்ணழூர்த்தி அவர்கள் ஜோதிட கணிதத்தை கணக்கீடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவிற்கு அதனை பல ஆய்வுகள் செய்து மேம்படுத் தினார்.அதாவது கிரகங்களுக்கு எப்படி நட்சத்திரம்,உப நட்சத்திரம் என்று பிரிவுகள் உள்ளேதோ,அதே பிரிவுகளை 12 பாவங்களுக்கும் ஏற்படுத்தி குறுகிய கால இடைவெளியில் பிறப்பவர்கள்(30 நொடி அளவில் கூட) பெருமளவு வேறுபடுத்தி காட்டும் புதிய உயர்கணித ஜோதிட முறையை வடிவமைத்து ஜோதிட உலகில் அழியாப் புகழை பெற்றார்.







No comments:

Post a Comment