Tuesday, 30 May 2017

ஜெனஜாதகமும் கோச்சாரமும்



ஜெனஜாதகமும் கோச்சாரமும்

ஜெனஜாதகம் வலிமையாக இருக்கும் பொழது கோச்சாரத்தால் பாதிப்பு  வருமா?

ஜெனஜாதகம் பாதிக்கபட்டுருக்கும் இருக்கும் பொழது கோச்சாரத்தால் பாதிப்பு  வருமா?

ஜெனஜாதகத்தில் ஒவ்வொரு பாவத்தையும் 3  பங்காக பிரித்துள்ளார்கள்.உப நட்சத்திரம்,உபஉப நட்சத்திரம்,ஆரம்பமுனை நட்சத்திரம் ஆக 12 பாவங்களை 36 பங்காக பிரித்துள்ளார்கள்.


ஒரு பாவத்திற்கு வலிமையாக நன்மையோ அல்லது தீமையோ செய்யும் அதிகாரம் அந்த பாவத்தின் உப நட்சத்திரத்திற்கே வழங்கபட்டுள்ளது.அதாவது 60 சதவீதம் வலிமை உடையது உப நட்சத்திரம்.


ஒரு பாவத்திற்கு இரண்டநிலையில் நன்மையோ அல்லது தீமையோ செய்யும் அதிகாரம் அந்த பாவத்தின் உப உப நட்சத்திரத்திற்கே வழங்கபட்டுள்ளது. அதாவது 25 சதவீதம் வலிமை உடையது உப உப நட்சத்திரம்.


ஒரு பாவத்திற்கு மூன்றாம் நிலையில் நன்மையோ அல்லது தீமையோ செய்யும் அதிகாரம் அந்த பாவத்தின் ஆரம்பமுனை நட்சத்திரத்திற்கே வழங்கபட்டுள்ளது. அதாவது 15 சதவீதம் வலிமை உடையது ஆரம்பமுனை நட்சத்திரம்.


ஒவ்வொரு கிரகமும் தான் நின்ற நட்சத்திரம்,உப நட்சத்திரமாக மாறி தன்னுடைய பாவத்தை வளர்த்துக்கொண்டோ அல்லது கெடுத்துக்கொண்டோ தான் தொடர்பு கொண்ட பாவங்களை வேளையை செய்யும்.


ஒரு கிரகம் தான் நின்ற நட்சத்திரம்,உப நட்சத்திரம் மூலமாக 8,12ம் பாவங்களை தொடர்பு கொள்ளவில்லை என்றால் அந்த பாவ உப நட்சத்திர கிரகம் கோச்சாரத்தில் 8,12ம் பாவ உப நட்சத்திர கிரகத்தின் நட்சத்திரம் மற்றும் உப நட்சத்திரத்தில் செல்லும் பொழுது எந்த விதமான பாதிப்புகளையும் ஏற்படுத்தமாட்டார்.


ஒரு கிரகம் தான் நின்ற நட்சத்திரம்,உப நட்சத்திரம் மூலமாக 8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டுயிருக்கும் பொழுது அந்த பாவ உப நட்சத்திர கிரகம் கோச்சாரத்தில் 8,12ம் பாவ உப நட்சத்திர கிரகத்தின் நட்சத்திரம் மற்றும் உப நட்சத்திரத்தில் செல்லும் பொழுது அந்த பாவத்திற்கு பாதிப்புகளையும் ஏற்படுத்தவார்.


ஒரு கிரகம் தான் நின்ற நட்சத்திரம் 8,12ம் பாவங்களை காட்டி உப நட்சத்திரம் 7,11ம் பாவங்களை காட்டும்பொழுது நட்சத்திரம் காட்டிய பாவங்கள் 10 சதவீதம் செயல்பட்டு பிறகு நட்சத்திரம் காட்டிய பாவங்கள் துண்டிக்கபட்டு உப நட்சத்திர பாவங்கள் தொடர்ந்து செயல்படும்.இந்த கிரகம் கோட்சாரத்தில் 8,12ம் பாவ உப நட்சத்திர அதிபதிகளின் நட்சத்திரம் மற்றும் உபநட்சத்திரத்தில் செல்லும் பொழுது சிறிய அளவில் பிரச்சனைகளை ஜாதகருக்கு தருவார்.


ஒரு கிரகம் தான் நின்ற நட்சத்திரம் 7ம் பாவத்தை காட்டி உப நட்சத்திரம் 8,11ம் பாவங்களை காட்டும்பொழுது உப நட்சத்திரம் வைத்துள்ள 8ம் பாவத்திற்கு நட்சத்திரம் 12ம் பாவத்தை காட்டுவதால் உப நட்சத்திரம் வைத்துள்ள 8,11ம் பாவங்களில் 8ம் பாவம் துண்டிக்கபட்டு 7,11ம் பாவங்கள் செயல்படும்.ஆனால் கோச்சாரத்தில் இந்த கிரகமும் 8,12ம் பாவ உப நட்சத்திர அதிபதிகளின் நட்சத்திரம் மற்றும் உபநட்சத்திரத்தில் செல்லும் பொழுது சிறிய அளவில் பிரச்சனைகளை ஜாதகருக்கு தருவார்.


ஒரு கிரகம் 8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டுயிருந்து அந்த கிரகம் 8,12ம் பாவ உப நட்சத்திர கிரகங்களின் நட்சத்திரத்திலும் அவருடைய உப நட்சத்திரத்திலும் செல்லும் பொழுது அதிகமான பாதிப்புகளை தருவார்.


ஒரு கிரகம் 8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டுயிருந்து அந்த கிரகம் 8,12ம் பாவ உப நட்சத்திர கிரகங்களின் நட்சத்திரங்கள் அல்லாமல் மற்ற கிரகங்களின் நட்சத்திரத்தில் 8,12ம் பாவ உப நட்சத்திரத்தில் செல்லும் பொழுது பாதிப்பு குறைவாக இருக்கும்.


ஒரு கிரகம் 8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டு இருந்து நடப்பு தசை,புத்தி,அந்திரம் 8,12ம் பாவங்களை காட்டும் பொழுது அந்த கிரகம் கோட்சாரத்தில் 8,12ம் பாவ உப நட்சத்திர கிரகங்களின் நட்சத்திரத்திலும் அவருடைய உப நட்சத்திரத்திலும் செல்லும் பொழுது அதிகமான பாதிப்புகளை தருவார்.அல்லது 8,12ம் பாவங்களுக்கு சாதகமான 2,4,6,10ம் பாவங்களை தொடர்பு கொண்டு தசை,புத்தி,அந்தரத்திலும் குறிப்பிட்ட அளவிற்கு பாதிப்பை தரும்.


ஒரு கிரகம் 8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டு இருந்து நடப்பு தசை,புத்தி,அந்திரம் 3,7,11ம் பாவங்களை தொடர்பு கொண்டு நடக்கும்பொழுது அந்த கிரகம் கோட்சாரத்தில் 8,12ம் பாவ உப நட்சத்திர கிரகங்களின் நட்சத்திரத்திலும் அவருடைய உப நட்சத்திரத்திலும் செல்லும் பொழுது பாதிப்பு ஏற்படாது.


ஒரு கிரகம் 8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டு இருந்து நடப்பு தசை 1,5,9ம் பாவங்களை காட்டியும்,புத்தி 4,8,12ம் பாவங்களை காட்டும் பொழது,அந்த கிரகம் கோட்சாரத்தில் 8,12ம் பாவ உப நட்சத்திர கிரகங்களின் நட்சத்திரத்திலும் அவருடைய உப நட்சத்திரத்திலும் செல்லும் பொழுது அதிகமான பாதிப்பு வரும்.


ஒரு கிரகம் 6,8ம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக இருந்து அந்த கிரகம் 8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டு இருந்து நடப்பு தசை,புத்தி,அந்திரம் 8,12ம் பாவங்களை காட்டும் பொழுது அந்த கிரகம் கோட்சாரத்தில் 6,8,12ம் பாவ உப நட்சத்திர கிரகங்களின் நட்சத்திரத்திலும் அவருடைய உப நட்சத்திரத்திலும் செல்லும் பொழுது மோசமான பாதிப்புகளை தருவார்.அல்லது 8,12ம் பாவங்களுக்கு சாதகமான 2,4,6,10ம் பாவங்களை தொடர்பு கொண்டு தசை,புத்தி,அந்தரத்திலும் குறிப்பிட்ட அளவிற்கு பாதிப்பை தரும்.


ஒரு கிரகம் 6,12ம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக இருந்து அந்த கிரகம் 8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டு இருந்து நடப்பு தசை,புத்தி,அந்திரம் 8,12ம் பாவங்களை காட்டும் பொழுது அந்த கிரகம் கோட்சாரத்தில் 6,8,12ம் பாவ உப நட்சத்திர கிரகங்களின் நட்சத்திரத்திலும் அவருடைய உப நட்சத்திரத்திலும் செல்லும் பொழுது மோசமான பாதிப்புகளை தருவார்.அல்லது 8,12ம் பாவங்களுக்கு சாதகமான 2,4,6,10ம் பாவங்களை தொடர்பு கொண்டு தசை,புத்தி,அந்தரத்திலும் குறிப்பிட்ட அளவிற்கு பாதிப்பை தரும்.


ஒரு கிரகம் 8,10ம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக இருந்து அந்த கிரகம் 8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டு இருந்து நடப்பு தசை,புத்தி,அந்திரம் 8,12ம் பாவங்களை காட்டும் பொழுது அந்த கிரகம் கோட்சாரத்தில் 8,12ம் பாவ உப நட்சத்திர கிரகங்களின் நட்சத்திரத்திலும் அவருடைய உப நட்சத்திரத்திலும் செல்லும் பொழுது மோசமான பாதிப்புகளை தருவார்.அல்லது 8,12ம் பாவங்களுக்கு சாதகமான 2,4,6,10ம் பாவங்களை தொடர்பு கொண்டு தசை,புத்தி,அந்தரத்திலும் குறிப்பிட்ட அளவிற்கு பாதிப்பை தரும்.


ஒரு தசைநாதன் வலிமையாக இயங்க புத்திநாதன் ஆதரவு தேவை,புத்திநாதன் வலிமையாக இயங்க அந்திரநாதன் ஆதரவு தேவை, அந்திரநாதன் வலிமையாக இயங்க சூட்மநாதன் ஆதரவு தேவை.


ஒன்றின் ஆதரவு இன்றி மற்றொன்று வலிமையாக செயல்பட முடியாது,தசை மீறி புத்திநாதன் செய்த நன்மையோ அல்லது தீமையோ நீண்ட காலத்திற்கு அனுபவிப்பதர்க்கு தசைநாதன் மிகபெரிய எதிர்பை தெரிவிக்கும் என்பதே மேற்கண்ட விதி மூலமாக தெளிவாக தெரியவருகிறது.அதே போலவே புத்திநாதனை மீறி ஒரு அந்தரத்தில் ஜாதகருக்கு ஏற்பட்ட நன்மையோ அல்லது தீமையோ நீண்ட நாட்களுக்கு அனுபவிப்பதர்க்கு புத்திநாதன் மிகபெரிய எதிர்பை தெரிவிக்கும் என்பதே மேற்கண்ட விதி மூலமாக தெளிவாக தெரியவருகிறது.


லக்ன உப நட்சத்திரம் தான் நின்ற நட்சத்திரம்,உப நட்சத்திரம் மூலமாக 8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டுயிருது,லக்ன பாவ உப நட்சத்திர கிரகம் கோச்சாரத்தில் 8,12ம் பாவ உப நட்சத்திர கிரகத்தின் நட்சத்திரம் மற்றும் உப நட்சத்திரத்தில் செல்லும் பொழுது வலிமையான பாதிப்புகளையும் ஏற்படுத்துவார்.

உதாரணம் ஜாதகம்

சுக்கிரன் 1,2,7க்கு உப நட்சத்திரமாக உள்ளார் சுக்கிரன் நின்ற நட்சத்திரம் ராகு 3ம் பாவ உப நட்சத்திரமாகவும்,8ம் பாவத்திற்கு உபஉப நட்சத்திரமாகவும்,4,8ம் பாவத்திற்கு ஆரம்பமுனை நட்சத்திரமாகவும் உள்ளார்.ராகு 4,8க்கு 12,8ம் பாவமான 3ம் பாவத்திற்கு உப நட்சத்திரமாக உள்ளதால் 4,8ம் பாவ வேளையை செய்யமாட்டார் ராகு. சுக்கிரன் நின்ற உபநட்சத்திரம் புதன் 8,11ம் பாவ உப நட்சத்திரமாகவும்,6,7,11ம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாகவும்,உப நட்சத்திரம் வைத்துள்ள 8ம் பாவத்திற்கு நட்சத்திரம் 8ம் பாவமான 3ம் பாவத்தை காட்டுவதால் 8ம் பாவம் முழுமையாக வேலை செய்யாது.லக்னம் 3,11ம் பாவங்களின் வேளையை செய்யும்.
ஆனால் நட்சத்திரம்,உப நட்சத்திரத்தில் 8ம் பாவங்கள் உள்ளது.ஒரு குறையேயாகும்.லக்னத்திற்கு ஒரு வித்த்தில் சிறதளவிற்கு பிரச்சனையை தரும்.

அன்றை தின(கோச்சாரத்தை ஆய்வு செய்வோம்)

21.05.2017 அன்று மாலை 5 மணி அளவில் மாடிபடிக்கட்டு இறங்கும்பொழுது தலையில் அடிபட்டு ஒரு தையல் போடபட்டுள்ளது.சிறதவிற்கு இரத்தம் வெளியே வந்தது .

DAY ANALYSIS என்ற துல்லியமான கணித முறையை எங்கள் குருநாதர் ஜோதிட சக்கரவத்தி A.தேவராஜ் ஐயா ஒவ்வொரு நாளுக்கு 1,2,7ம் பாவங்கள் அன்று எந்த நட்சத்திரத்தில் பயணம் செய்கிறது ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு எந்த உப நட்சத்திரத்தில் பயணம் செய்கிறது அது மூலமாக ஏற்படும் பாவ தொடர்புகளை துல்லியமான கணித மூலமாக கொடுத்துள்ளார்.  அது மூலமாக எளிதில் ஒரு சம்பவம் ஏன் நடந்த்து என்பதை அறிய முடியும்.


லக்ன உப நட்சத்திரம் சுக்கிரன் 21.25.2017 அன்று மாலை 5.00.06 மணிக்கு புதனின் நட்சத்திரத்திலும்,சுக்கிரனின் உப நட்சத்திரத்திலும் பயணம் செய்தார்.அப்பொழுது ஜாதகருக்கு தலையில் அடிபட்டது.லக்னம் 8ம் பாவ தொடர்பு தன்னுடைய பிரச்சனைக்கு ஜாதகரே காரணம் ஆவார் என்ற விதிபடி ஜாதகர் படிக்கட்டு இறங்கும் போது மேலே உள்ள லேப்டில் இடித்துக்கொண்டு தலையில் அடிபட்டது.உடன் 7,11ம் பாவங்கள் இருப்பதால் பெரிய பாதிப்பு இல்லை.ஆனாலும் 8ம் பாவம் சிறிய அளவில் செயல்பட்டுள்ளது என்பது இதன் மூலம் உறுதியாகிறது.
இது போல துல்லியமாக உயர்கணித சார ஜோதிட மென்பொருள் மூலமாக துல்லியமாக சொல்லமுடியும் என்று பெருமையாக கூறிக்கொள்கிறேன்.



DAY ANALYSIS என்ற துல்லியமான கணித முறையும்,மற்ற சிறப்பு அம்சங்களையும் உருவாக்கி கொடுத்துள்ள எங்கள் குருநாதர் ஜோதிட சக்கரவத்தியான A.தேவராஜ் ஐயாக்கு நின்றியை கூறிக்கொள்கிறேன்





No comments:

Post a Comment