Saturday, 3 June 2017

இராணுவம்,போலீஸ்,தீவிரவாதமும் மற்றும் ரவுடிசமும்,தர்மத்துக்கு புறம்பாக செயல்படுவர்களை செயல்படுத்தும் பாவங்கள் யாது? பகுதி 1

இராணுவம்,போலீஸ்,தீவிரவாதமும் மற்றும் ரவுடிசமும்,தர்மத்துக்கு புறம்பாக செயல்படுவர்களை செயல்படுத்தும் பாவங்கள் யாது? பகுதி 1
8ம் பாவம் தர்மத்துக்கு புறம்பாக செயல்படுவதை நியாபடுத்துவது,சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவது, தன்னுடைய இன, மதம் சார்பாக சட்டங்களை கடுமையாக பின்பற்றுமாறு தன்னுடைய மக்களை துன்புறுத்துவது, மற்றவர்களின் மீது அதிகமாக கட்டுபாடுகளை விதிப்பது, மற்றவர்களின் சுதந்தரத்தை நசுக்குவது, மற்றவர்களின் பேச்சு சுதந்திரத்தை மறுபது, மற்றவர்களின் உரிமைகளை பரிப்பது,மற்றவர்களின் மீது அத்துமீறல்கள் செய்வது, மற்றவர்களை துன்புறுத்துவது,பொது மக்கள் முன்னிலையில் கொடூரமான முறையில் கொலைகள் செய்வது அவற்றை சழூக வளைதளங்களில் வெளியீடுவது, தன்னுடைய கொள்கைக்கு எதிரானவர்களை பொது இடத்தில் கொலை செய்வது அதன் மூலமாக மற்றவர்களை பயமுறுத்துவது, மற்றவர்களை சித்திரவதை செய்வது, அசட்டு தைரியத்தை தருவது, ஒரு மதத்துக்கு உள்ளே உள்ள பிரிவினர்கள் தாக்கிக்கொள்வது, இவர்கள் வழிபாட்டு தலத்திற்கு மற்றொரு பிரிவினர் தாக்குவது,ஒரு மத பிரிவினர் வேறுயொரு மத பிரிவினரை தாக்குவது, அவர்களுடைய வழிபாட்டு தலத்தை அழிப்பது,
9ம் பாவம் இயற்க்கையை குறிக்கும் இயற்க்கைக்கு மாறாக குண்டு வைத்து பொது மக்களை கும்பலாக கொல்வதை 8ம் பாவம் குறிக்கும்,பொதுமக்களின் மீது கண்மூடிதனமான துப்பாக்கியால் சுட்டு கொல்வதை குறிக்கும், மற்றவர்களின் உடமைகளை கைபற்றுவது, தன்னுடைய இன,மொழி, மதம் சார்பாக மக்களை திசை திருப்பது,மற்ற இன,மத மக்களுக்கு எதிராக தாக்குதல் தொடுப்பது. தன்னுடைய கொள்கைக்காக மற்றவர்களை மூளை சலவை செய்வது,தீடிரென எழச்சி பெறுவது,தீடிரென வீழச்சி பெறுவது,அற்ப ஆயுள்,இயற்க்கைக்கு மாறான மரணம்,கடுமையான வேதனைகள் அடைந்து மரணம் அடைவது,உடலை விட்டு உடனே உயிர் பிரியாது, உடல் சிதைக்கபட்டு மரணம் அடைவது, சித்திரவதை செய்படுதல்,தலைமறைவாக வாழ்தல்,கடவுள் அருள் இல்லாதவர்கள்,கடவுளால் தண்டிக்கபட்டவர்கள், உண்மையான மத கொள்கை இல்லாதவர்கள்,



8ம் பாவம் என்பது 1,5,9ம் பாவத்திற்கு 4,8,12ம் பாவங்களாக வருவதால் லக்னம் என்ற ஜாதகருக்கு இவருடைய செயல்களால் பிரச்சனைகள் ஏற்படுவது,ஜாதகர் ஏற்படும் அனைத்துவித துன்பங்களுக்கும், வலி,வேதனைகள்,பிரச்சனைகள் அவற்றுக்கு மூல காரணமாக ஜாதகரே காரணமாக இருப்பார்.திருமணம் செய்து கொள்வது இல்லை,குழந்தை இல்லை,தன்னுடைய குடும்பத்தை விட்டு வெளியேறுதல்,அன்பு,பாசம் இல்லாதவர்கள், எல்லோருக்கும் உள்ள பொதுவான கருத்திலிருந்து அல்லது சிந்தனையிலிருந்து மாறுபட்டு வித்தியாசமான கருத்துக்களை அல்லது சிந்தனைகளை கொண்டிருப்பது.மேற்கண்ட சிந்தனைகளை அர்த்த முள்ளதாக மாற்றுவது. ஒருவருடைய வீழ்ச்சியை தனக்கு சாதகமாக்கி கொண்டு தன்னை வளர்த்துக்கொள்வது, ஜாதகர் தன்னுடைய வலியையும், வேதனைகளையும், எதிர்மறையான சம்பவங்களையும் அனுபவங்களாகக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறுதல். சட்ட விரோத நடவடிக்கை மூலம் தனது பொருளாதாரத்தை உயர்த்தி கொள்வது, பாவ புண்ணியத்தினை கருத்தில் கொள்ளாமல் தனது கொள்கையில் உறுதியாக இருத்தல்,உயிருக்கும் உடலுக்கும்ஆபத்தான விஷயங்களில் ஈடுபட்டு அதன் மூலம் பொருளாதாரத்தினை பொருளாதாரத் தினை உயர்த்துவது,இறந்தவர்களின் பணம்,சொத்து, தொழில், மற்றவர்களை நிர்பந்தபடுத்தி தனது பொருளாதாரத்தை உயர்த்தி கொள்வது.

பகுதி 1 முடிவுற்றது தொடரும்

No comments:

Post a Comment