Monday, 26 June 2017

பிறந்த துல்லியமான நேரத்தை கண்டுபிடிக்கும் ஆளும் கிரஹங்களில் உப நட்சத்திரத்தையும் பயன்படுத்தும் நுணுக்கமான எளிய முறைகள்

பிறந்த துல்லியமான நேரத்தை கண்டுபிடிக்கும் ஆளும் கிரஹங்களில் உப நட்சத்திரத்தையும் பயன்படுத்தும் நுணுக்கமான எளிய முறைகள்

1) குறிப்பிட்ட நேரத்தை எந்த எந்த கிரகங்கள் ஆளுக்கின்றதோ அந்த கிரகங்களுக்கு ஆளும் கிரஹங்கள் என்று பெயர்.

2) ஒரு கிரகம் எந்த வேளை செய்யனும் என்று சொல்லுபவர் சூரியன் ஆகும்.

3) செயல்படுத்தும் கிரகம் அல்லது நடைமுறைக்கு கொண்டுவரும் கிரகம் சந்திரன் ஆகும்.

4) ஒரு கிரகத்தை செயல்படுத்தும் கிரகங்கள் சூரியன்,சந்திரன் ஆவார்.

5) விதி ஒரு சம்பவத்தை நிர்ணிக்கும் பொழுது அந்த சம்பவம் நடக்க தசை,புத்தி வரவேண்டும்.

6) எப்பொழுது ஜாதகத்தை வாங்கிறோமோ அந்த நேரத்தை ஆளும் கிரஹமாக வைத்து ஜாதகத்தை கணிக்க வேண்டும்.ஜாதகத்தை வாங்கிய நேரத்தை விட்டு வேறுஒரு நேரத்தை ஆளும் கிரஹமாக வைத்து ஜாதகத்தை கணிக்ககூடாது, வாட்ஸ்ஆப், மெஸ்ஜியில் ஜாதகம் வந்த நேரத்தை ஆளும் கிரஹமாக வைத்து ஜாதகத்தை கணிக்க வேண்டும்.

ஆர்.பி.14.07.2011 10.14.00 பிற்பகல்
லக் ராசி நட்சத்திரம் உபநட் உபஉப உபஉபஉப
சனி குரு சுக்கி குரு ராகு

லக்ன நிலையில் உள்ள உபஉபஉப ராகு தேவையில்லை

உதாரணம் சந்திரன் நிலை
சந் ராசி நட் உபநட் உபஉப உபஉபஉப
குரு சுக்கிரன் குரு புதன் ராகு

சந்திரன் நிலையில் உள்ள ராசிஅதிபதி குரு தேவையில்லை

சந்திரன் நிலையில் உள்ள நட்சத்திரம் சுக்கிரன் ஒரு மாநிலத்தின் பெயரையை குறிப்பிடும்.

சந்திரன் நிலையில் உள்ள உப நட்சத்திரம் குரு ஊரின் பெயரை குறிப்பிடும்.

சந்திரன் நிலையில் உள்ள உபஉப நட்சத்திரம் புதன் அந்த ஊரில் உள்ள ஒரு குறிப்பிட்ட தெருவை குறிக்கும்.

சந்திரன் நிலையில் உள்ள உபஉபஉப நட்சத்திரம் ராகு அந்த ஊரில் உள்ள ஒரு குறிப்பிட்ட தெருவில் உள்ள ஒரு குறிப்பிட்ட வீட்டை குறிக்கும்.
இது போல குறுகிவரும் உபஉபஉப நட்சத்திரத்தை துணைக்கொண்டு ஜாதகர் பிறந்த நேரத்தை திருத்த வேண்டும்.

ஜாதகம் வாங்கும் நேரத்தில் உள்ள ஆளும் கிரகத்தில் உள்ள சந்திரனின் நிலையை ஆராய்யும் பொழுது ஜாதகரின் கேள்விக்குரிய பாவங்களை சந்திரனின் நின்ற நட்சத்திரம்,உப நட்சத்திரம் மூலமாக தெரியவரும் அதை கொண்டு ஜாதகரின் பிரச்சனையை அறியலாம்.

ஆளும் கிரகம் 18.05.2011 காலை மணி 6.52 சென்னை போரூர்

கிரகம் நட் ராசி நட்(அ) உப.நட் உஉ.நட் உஉஉ

லக்னம் ரோ சுக் சந் புதன் ராகு சனி

சந்திரன் அனு செ சனி சூரியன் புதன் ராகு

1) சந்திரநிலையில் உள்ள உபஉபஉப நட்சத்திர கிரகத்தை (ராகு) நம்முடைய மென்பொருளில் புளூ கலரில் காட்டுபட்டுயிருக்கும் அதை பிறந்த நேர லக்னத்தில் உள்ள புளூ கலரில் காட்டுபட்டு யிருக்கும் உபஉப நட்சத்திர கிரகமாக வருமாறு செய்யவேண்டும்.

2) சந்திரநிலையில் உள்ள உபஉப நட்சத்திர கிரகத்தை பிறந்த நேர லக்னத்தில் உள்ள உபஉப நட்சத்திர கிரகமாக (புதன்) நம்முடைய மென்பொருளில் புளூ கலரில் காட்டுபட்டு யிருக்கும் அதை பிறந்த நேர லக்னத்தில் உள்ள புளூ கலரில் காட்டுபட்டுயிருக்கும் உபஉப நட்சத்திர கிரகமாக வந்தாலும் பராவில்லை (உபஉபஉப நட்சத்திர கிரகத்திற்கு முன்னாள் உபஉப நட்சத்திரம் கிரகம் வந்தாலும் பராவில்லை).

3) சந்திரநிலையில் உள்ள உபஉபஉப நட்சத்திர கிரகம், உபஉப நட்சத்திர கிரகம் இரண்டியில் ஒரு கிரகம் பிறந்த நேர லக்னத்தில் உள்ள உபஉப நட்சத்திர கிரகமாக வந்து மற்றொருகிரகம் வரவில்லை என்றாலும் பராவில்லை இரண்டு கிரகமும் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை (புதன்,ராகு இவை இரண்டியில் ஒன்று வந்தால் போதும் மற்றொன்று வரவில்லையென்றாலும் பராவில்லை).

4) சந்திர நிலையில் உள்ள உபஉபஉப நட்சத்திர கிரகத்தை பிறந்த நேர லக்னத்தில் உள்ள உபஉப நட்சத்திர கிரகமாக வந்துவிட்ட பிறகு சந்திர நிலையில் உள்ள உபஉப நட்சத்திர கிரகத்தை பிறந்த நேர லக்னத்தில் உள்ள உபஉபஉப நட்சத்திர கிரகமாக கண்டிப்பாக வரவேண்டும் என்ற கட்டாயம் இல்லை.உதாரணமாக உபஉபஉப நட்சத்திரம் கிரகம் ராகு லக்ன நிலையில் உபஉப நட்சத்திர கிரகமாக வந்தவிட்ட பிறகு சந்திரநிலையில் உள்ள உபஉப நட்சத்திர கிரகம் புதன் பிறந்த நேர லக்னத்தில் உள்ள உபஉபஉப நட்சத்திர கிரகமாக புதன் வரவேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

5) சந்திரநிலையில் உள்ள உபஉப நட்சத்திர கிரகத்தை (புதன்) பிறந்த நேர லக்னத்தில் உள்ள உபஉப நட்சத்திர கிரகமாக (நம்முடைய மென்பொருளில் புளூ கலரில் காட்டுபட்டுயிருக்கும்) அதை பிறந்த நேர லக்னத்தில் உள்ள புளூ கலரில் காட்டுபட்டுயிருக்கும் உபஉப நட்சத்திர கிரகமாக வைத்து நேரதிருத்தம் செய்யலாம்

6) சந்திரன் நிலையில் உள்ள உப நட்சத்திர கிரகம்,உபஉப நட்சத்திர கிரகம், உபஉபஉப நட்சத்திர கிரகங்களில் மூன்று இடங்களில் இரண்டு இடங்களில் ஒரே கிரகமே வந்துயிருந்தால் அந்த கிரகத்திற்க்கும் ஜாதகர் பிறப்புக்கும் ஏதே ஒருவித தொடர்பு இருக்கிறது என்பதை கடவுள் நமக்கு உணர்த்திகிறார்.அதனால் அந்த கிரகம் கண்டிப்பாக பிறந்த நேர லக்னநிலையில் உபஉப நட்சத்திர நிலையில் அல்லது உபஉபஉப நட்சத்திர கிரகமாகவோ வரவேண்டும்.

7) சந்திரன் நிலையில் உபஉப நட்சத்திரமாக வரும் கிரகத்தின் ஆரம்ப கால அளவு முதல் முடியும் கால அளவு வரை உள்ள மொத்த செகண்டுகளின் மத்தியமத்தில் வைக்கவேண்டும்.

8) சந்திரன் நிலையில் உபஉப நட்சத்திர கிரகம், உபஉபஉப நட்சத்திர கிரகங்களில் பிறந்த நேர லக்னத்தில் உள்ள உபஉப நட்சத்திர கிரகமாக ஏதோயெரு கிரகம் வந்துவிட்டால் வராத கிரகத்தை வரவைத்தால் பொழுதும்.

9) ஆளும் கிரகத்தை கொண்டு பிறந்த நேரத்தை திருத்தும்பொழுது ஜாதகரு கொடுத்த நேரத்திற்கு நெருக்கமாக வரும் உபஉப நட்சத்திர கிரகத்தையோ அல்லது உபஉபஉப நட்சத்திரத்தை வைத்து நேரத்தை திருத்த வேண்டும்.

10) கேள்விக்கேட்கும் பாவத்திற்கு ஆளும் கிரகத்தைகொண்டு லக்னத்திற்கு நேரத்தம் செய்யும் முறையை கொண்டே பிறந்த நேரத்தை திருத்தினால் சரியான பலன் கிடைக்கும்.

11) சூழ்நிலைக்கு கேற்ப்ப ஆளும் கிரகத்தை பயன்படுத்தும் புதிய முறைகளை கீழே பார்போம்

ஜாதகர் ஜெனகாலம் 15.06.1973 காலை மணி 11.00 காஞ்சிபுரம்

கிரகம் நட் ராசி நட்அதி உப.நட் உஉ.நட் உஉஉ

லக்னம் மக சூரி கேது புதன் செ புதன்

சந்திரன் கே செ புதன் செ சனி செ

ஆளும் கிரகம் 18.05.2011 காலை மணி 6.52 சென்னை போரூர்

கிரகம் நட் ராசி நட்அதி உப.நட் உஉ.நட் உஉஉ

லக்னம் ரோ சுக் சந் புதன் ராகு சனி

சந்திரன் அனு செ சனி சூரி புதன் ராகு

ஜாதகர் கொடுத்த நேரத்திற்கு அருகிலே நேரதிருத்தம் செய்யவேண்டும், ஆளும்கிரத்தில் சந்திரன் நிலையில் உள்ள உபநட்சத்திரம், உபஉபநட்சத்திரம்,உபஉபஉப நட்சத்திர கிரகங்கள் ஜாதகர் பிறந்த லக்ன நிலையை குறிப்பிடும்.
அந்த கிரகங்கள் நிறைய வரும் படியாக நேரதிருத்தம் செய்வது சிறப்பு ஆகும்.

ஆளும் கிரகத்தில் சந்திரன் நிலையில் உள்ள உபநட்சத்திரம், உபஉப நட்சத்திரம்,உபஉபஉப நட்சத்திர கிரகங்களின் உப நட்சத்திரத்தில் உள்ள கிரகத்தியும் லக்னநிலையில் உபஉப நட்சத்திரமாகவோ அல்லது உபஉபஉப நட்சத்திரமாகவோ வர வைக்கலாம். சந்திரன் நிலையில் உள்ள இந்த மூன்று கிரகங்களை லக்ன நிலைக்கு கொண்டுவர நேரத்தை அதிகமாகவோ அல்லது குறைத்தாலோதான் வரும் என்றால் அப்பொழுது இந்த சூரியன்,புதன்,ராகு ஆகிய மூன்று கிரகங்களின் நட்சத்திரம்,உப நட்சத்திரத்தில் உள்ள கிரகங்களை லக்ன நிலையில் உபஉப நட்சத்திரமாகவோ அல்லது உபஉபஉப நட்சத்திரமாகவோ வர வைக்கலாம் என்பது முக்கியமான விதியாகும்.

சூரியன் உப நட்சத்திரத்தில் சுக்கிரனும்,ராகு நட்சத்திரத்தில் சுக்கிரனும் உள்ளார்,

புதனின் உப நட்சத்திரத்தில் சூரியன்,புதன்,குரு,சனி ஆகிய நான்கு கிரகங்கள் உள்ளன.

ஜாதகர் மகம் நட்சத்திரத்தில் புதனின் உப நட்சத்திரத்தில் பிறந்துள்ளார்.மகம் நட்சத்திரசந்தில் பிறந்துள்ளார்.மகம் நடசத்திரம் 4 நிமிடங்களில் முடிந்து பூரம் நட்சத்திரம் ஆரம்பம் ஆகபோகிறது.
ஜாதகர் பிறந்த நேரத்தை குறைந்து பார்போம்.

ஜாதகர் 1நிமிடம் குறைந்து 10 மணி 59 நிமிடம் என்று வைக்கும்பொழுது லக்ன உபஉப நட்சத்திரமாக சூரியன் வருகிறது.லக்ன 1,3,5,9,11ம் பாவங்களை தொடர்பு கொள்கிறது.ஜாதகர் ஒல்லியான உடல் வாகு இருக்கவேண்டும், தலையில் பிரச்சனை இல்லை என்று சொல்லும்பொழுது ஜாதகர் அதை மறுகிறார்.

ஜாதகர் பிறந்தநேரத்தை 01 நிமிடம் அதிகரிக்கும் பொழுது (11 மணி 01 நிமிடம்) லக்ன உபஉப நட்சத்திரமாக ராகு வருகிறது.லக்ன 1,7,10ம் பாவங்களை தொடர்பு கொள்கிறது.ஜாதகர் தலையில் பிரச்சனை இல்லை என்று சொல்லும்பொழுது ஜாதகர் இதையும் மறுகிறார்.

ஜாதகர் பிறந்தநேரத்தை 02 நிமிடம் அதிகரிக்கும் பொழுது (11 மணி 02 நிமிடம்)லக்ன உபஉப நட்சத்திரமாக குரு வருகிறது.லக்ன 1,7,10ம் பாவங்களை தொடர்பு கொள்கிறது.ஜாதகர் தலையில் பிரச்சனை இல்லை என்று சொல்லும்பொழுது ஜாதகர் இதையும் மறுகிறார்.

ஜாதகர் பிறந்தநேரத்தை 03 நிமிடம் அதிகரிக்கும் பொழுது (11 மணி 03 நிமிடம்) லக்ன உபஉப நட்சத்திரமாக சனி வருகிறது.லக்ன 1,7,10ம் பாவங்களை தொடர்பு கொள்கிறது.ஜாதகர் தலையில் பிரச்சனை இல்லை என்று சொல்லும்பொழுது ஜாதகர் இதையும் மறுகிறார்.
ஆக புதனின் உப நட்சத்திரத்தில் உள்ள கிரகங்களை வைக்கும் பொழுது வரும் லக்ன தொடர்பு கொண்டும் சொல்லும் பலன் ஜாதகருக்கு ஒன்றி வரவில்லை அதனால் புதனின் தவிர்த்து சூரியன்,ராகுவின் நட்சத்திர,உப நட்சத்திரத்தில் உள்ள கிரகங்களை கொண்டு நேரத்திருத்தம் செய்வோம்.

11 மணி 3 நிமிடத்திற்கு லக்ன நட்சத்திரம் மகம் (கேது)ஆகும்.கேதுவின் கடைசி உப நட்சத்திரம் புதன் ஆகும்.புதனின் கடைசி உபஉப நட்சத்திரம் சனி ஆகும்.ஆக அடுத்த 1நிமிடத்தை அதிகரிக்கும் பொழுது(11 மணி 04 நிமிடம்) சுக்கிரன் நட்சத்திரத்தில், சுக்கிரன் உபநட்சத்திரத்தில், சுக்கிரன் உபஉப நட்சத்திரத்தில் லக்ன வரும்.

சூரியன்,ராகுவின் ஏஜென்டாக சுக்கிரன் வருகிறார்.லக்ன தொடர்பு 2,4,6,8,12 என்று வருகிறது,ஜாதகருக்கு சுக்கிர தசையில் உடலில் பிரச்சனைகள் தோன்றியிருக்கும்,தலையில் பிரச்சனை இருக்கும் என்ற உடன் ஆமா என்று கூறினார்.

இவ்வாறாக ஆளும் கிரகத்தை பயன்படுத்துவதை மிகவும் எளிமையாகவும்,துல்லியமாகவும் சொல்லி கொடுக்கு ஜோதிட சக்கரவத்தி திரு.A. தேவராஜ் ஐயா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
 

No comments:

Post a Comment