Monday, 5 June 2017

இராணுவம்,போலீஸ்,தீவிரவாதமும் மற்றும் ரவுடிசமும்,தர்மத்துக்கு புறம்பாக செயல்படுவர்களை செயல்படுத்தும் பாவங்கள் யாது? பகுதி 2

இராணுவம்,போலீஸ்,தீவிரவாதமும் மற்றும் ரவுடிசமும்,தர்மத்துக்கு புறம்பாக செயல்படுவர்களை செயல்படுத்தும் பாவங்கள் யாது? பகுதி 2


ஒரு ஜாதகத்தில் ஏற்படும் பாதிப்புகளை பற்றிய முழுமையான உயர்கணித சார ஜோதிட விதிகளை பார்போம்.


ஜாதகத்தில் 4,8,12ம் பாவங்களே ஜாதகருக்கு முழுமையான தீமையை தரும்.

1ம் பாவம் என்பது சுய அறிவு,சுயசிந்தனை குறிக்கும்.

5ம் பாவம் என்பது ஒரு பிரச்சனை வந்த பிறகு அதில் இருந்தும் மீளும் அறிவை குறிக்கும்,ஆழ்ந்த அறிவு,ஸ்பெஷல் அறிவு(பண்முகம் தன்மை கொண்ட அறிவு) குறிக்கும்.

9ம் பாவம் என்பது ஒரு பிரச்சனை வருவதற்கு முன்னாலே அதை பற்றி முழுமையாக ஆய்வு செய்து செயல்படுவதை குறிக்கும்.


இந்த மூன்று பாவங்களுக்கு 4,8,12ம் பாவங்கள் முழுமையாக பாதிப்பை தரும்.ஒரு மனிதனின் சிந்தனையில் ஏற்படும் மாற்றமே அனைத்துவிதமான பிரச்சனைகளுக்கும் மூல கரகமாக அமைகிறது என்று மனநல மருத்துவம் கூறுகிறது.


உதாரணமாக குடிகாரகளை பற்றி மன நல மருத்துவம் கூறுவதை பார்ப்போம்.மூளையில் உள்ள ஒரு அமிலத்தில் ஏற்படும் ஏற்ற தாழ்வே அவர் மிகபெரிய குடிகாராக இருப்பதற்கு காரணம் என்று கூறுகிறது.சுய அறிவும்,சுயமாக சிந்திக்கும் குணம் உள்ளவர்கள் (தன்னுடைய கட்டுபாட்டியில் இருப்பவர்கள்) குடிபழகத்திற்கு அடிமையாகமாட்டார்கள்.சுய அறிவை இழந்து,தன்னை மறந்த நிலையில் ஆடைகள் இல்லாமல் நடுரோட்டில் மயக்கத்தில் இருப்பதை லக்னம் பாதிப்பால் வரும் பாதிப்பாக நான் பார்க்கிறேன்.


நடுரோட்டில் விழந்துயிருக்கும் ஜாதகரின் சுய அறிவு,சுய கௌரவம் முழுமையாக பாதிப்புயடைக்கிறது என்பதை இதன் மூலமாக நாம் அறியலாம்.
நம் உடலில் இயக்கத்திற்கு முழுமையான காரணங்களாக இருப்பதது,பல்வேறு அமிலங்கள், வேதிபொருட்கள்,உமிழ் நீர்சுரப்பிகள், நாளமில்லா சுரப்பிகள் இன்னும் பல உள்ளன இவற்றில் ஏற்படும் ஏற்றதாழ்வுகளால் ஒவ்வொரு மனிதனின் குணநலங்கள்,உடல் நலன்களின் மாற்றம் வருகிறது என்று மருத்துவம் கூறுகிறது.


உடலின் சமநிலையை,சழூகம்,வாடிக்கையாளர்கள், வாழ்க்கை துணையை குறிக்கும் 7ம் பாவம் பாதிப்பு அடைவதால் இந்த மாதிரியான பிரச்சனைகள் வருவதற்கு காரணமாகிறது.சழூகத்தின் மீது வரும் கோபத்தினாலே தீவிரவாதிகள், சழூகவிரோதிகள் உருவாகிறார்கள் என்பது இதன் மூலமாக விளங்கிறது.



4,8,12ம் பாவங்களுக்கு 6ம் பாவம் 3,7,11ம் பாவங்களாக வருகிறது, அதிலும் குறிப்பாக 4ம் பாவத்திற்கு 3ம் பாவமாக 6ம் பாவம் வருவதால் 4ம் பாவ காரகங்களை 100 சதவீதம் வளர்க்கும் பாவம் 6ம் ஆகும்.


அதே நேரத்தில் 6ம் பாவத்திற்கு 4ம் பாவம் 11ம் பாவமாக வருவதால் 6ம் பாவ காரகங்களை 4ம் பாவம் 200 சதவீதம் வளர்க்கும்.


6ம் பாவத்திற்கு 3ம் பாவமாக 8ம் பாவம் வருவதால் 6ம் பாவத்தின் காரகங்களை 8ம் பாவம் அடுத்த பரிணாம நிலைக்குகொண்டு செல்லும்.


8ம் பாவத்திற்கு 6ம் பாவம் 11ம் பாவமாக வருவதால் 8ம் பாவ காரகங்களை 6ம் பாவம் 200 சதவீதம் வளர்க்கும்.


4,8,12ம் பாவங்கள் ஒரே திரிகோணங்கள் என்பதால் 4ம் பாவத்தை விட 8ம் பாவ தன்மை வலிமையானது ஆகும்,8ம் பாவத்தை விட 12ம் பாவம் வலிமையானது ஆகும்.ஒரு திரிகோணத்தை விட மற்றொரு திரிகோணம் வலிமையானது ஆகும்.திரிகோண பாவங்கள் ஒரே தன்மைய உடையது ஆகும்.
4,8,12ம் பாவங்கள் 4,8,12ம் பாவங்களை தொடர்பு கொள்வது பெரும் தீமையை தரும்.



4,8,12ம் பாவங்கள் 4,6,8,12ம் பாவங்களை தொடர்பு கொள்வதும் இன்னும் தீமையை அதிகரிக்கும்.



4,8,12ம் பாவங்கள் ஒரு ஜாதகத்தில் வலிமை யடைந்து  இருக்கும்  பொழுது 1,5,9ம் பாவங்களுக்கு எதிராகவே ஜாதகரின் செயல்பாடு இருக்கும். ஜாதகரின் குணநலங்கள் சராசரி மனிதர்களின் குணநலன்களில் இருந்து முழுமையாக மாறுபட்டது இருக்கும்.


4,8,12ம் பாவங்கள் ஒரு ஜாதகத்தில் 4,6,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டுயிருக்கும் பொழுது,1,5,6,9ம் பாவங்களும் 4,6,8,12ம் பாவங்களை தொடர்பு கொள்ளும்பொழுது இன்னும் சிந்தனையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு பெரும் தீங்கை ஏற்படுத்தும்.


எந்த ஒரு பாவமும் தனித்து செயல்படாது,மற்ற பாவங்களோடு இணைந்து செயல்படும் பொழுதே வலிமையாக நன்மையோ அல்லது தீங்கையோ செய்ய முடியும்.


திரிகோண பாவங்கள் ஒரே தன்மை வாய்தவை அவைகளால் ஒரு குறிப்பிட்ட அளவிற்க்கு மேலாக வலிமையாக செயல்பட முடியாது.ஆனால் பரிமாண பாவங்கள் என்பது இரண்டு திரிகோணங்களை சார்ந்தவை என்பதால் அவற்றை உடைப்பதற்கு இன்னுயொரு பரிமாண பாவங்களே முடியும்,


அதனால் பரிமாண பாவங்களுக்கு ஒரு கிரகம் உப நட்சத்திரமாக வந்து தான் நின்ற நட்சத்திரம்,உப நட்சத்திரம் மூலமாக தன்னுடைய பாவங்களுக்கு சாதகமான பாவங்களை தொடர்பு கொள்ளும்போது அந்த கிரகம் அதிகபடியாக வலிமை செயல்படும்.



6,8க்கு ஒரே கிரகம் உபநட்சத்திரம்மாக இருந்து 6,8,12ம் பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது ஏற்படும் பாதிப்பு அதிகமாக இருக்கும்.


6,12க்கு ஒரே கிரகம் உபநட்சத்திரம்மாக இருந்து 6,8,12ம் பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது ஏற்படும் பாதிப்பு அதிகமாக இருக்கும்.


8,12க்கு ஒரே கிரகம் உபநட்சத்திரம்மாக இருந்து 6,8,12ம் பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது ஏற்படும் பாதிப்பு அதிகமாக இருக்கும்.


6,8,12ம் உப நட்சத்திரம்மாக ஒரே கிரகமே இருந்து 4,6,8,12ம் பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது ஏற்படும் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கும்.


4,6,8,12ம் உப நட்சத்திரம்மாக செவ்வாய்,ராகு,கேது, சனி போன்ற இயற்க்கை பாவிகள் இருந்து அவர்கள் நின்ற நட்சத்திரம்,உப நட்சத்திரமாக செவ்வாய், ராகு, கேது,சனி இருந்து 4,6,8,12ம் பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது ஏற்படும் பாதிப்பு மிகவும் மோசமான பாதிப்பை தரும்.


ஒரு கிரகம் தன்னுள்ளாக 12ம் பாவ காரகங்களை வைத்துள்ளது.ஒரு பாவ உப நட்சத்திரமாக உள்ள ஒரு கிரகம் அந்த பாவத்தில் உள்ள தன்னுடைய காரகம் மற்றும் அந்த பாவ காரகத்தை முன்னுறுத்தி தான் நின்ற நட்சத்திரம்,உப நட்சத்திரம் கிரகங்களின் பாவ காரகங்கள் மூலமாக தன்னுடைய பாவ காரகத்திற்கு சாதகமாக வளர்த்துக்கொண்டோ அல்லது,பாதகமாக தன்னுடைய பாவ காரகத்தை கெடுத்துக்கொண்டோ அல்லது தன்னுடைய பாவ காரகத்தை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு வளர்த்து பிறகு துண்டித்துக்கொண்டு நடுநிலை பலனை செய்வார்.


இந்த விதி படி உதாரணமாக 6ம் பாவம் 8ம் பாவத்தை தொடர்பு கொள்வதாக கொள்வோம்,6ம் பாவத்தில் உள்ள மறைமுக எதிரிகள்,பகை என்ற காரகத்தை முன்னுறுத்தி 8ம் பாவத்தை தொடர்பு கொள்ளும் பொழுது 8ம் பாவ காரகங்களாக 6ம் பாவம் மாறி தன்னுடைய காரகத்தை செயல்படுத்தும், தாக்கபடுதல்,கொலை செய்யபடுதல், எதிர்பாராத வகையில் ஏற்படும் விபத்து, அசிங்கம்,அவமானம், வலி, வேதனை ஏற்படும்.



6ம் பாவத்தில் உள்ள கடன் என்ற காரகம் 8ம் பாவத்தை தொடர்பு கொள்ளும் பொழுது 8ம் பாவ காரகமான பெரும் கடனாக மாறும்.



6ம் பாவம் 4ம் பாவத்தை தொடர்பு கொள்ளும் பொழுது சொத்துக்களின் மூலமாக வங்கியில் குறைந்த வட்டிக்கு கடன் கிடைப்பதை குறிக்கும்.


6ம் பாவம் தன்னுடைய காரகத்தை தொடர்பு கொண்ட பாவ காரகங்களாக மாறி செயல்படுகிறது என்பதை பார்தோம்.


6ம் பாவ உப நட்சத்திர கிரகம் இயற்கை பாவிகளான செவ்வாய்,ராகு,கேது,சனி போன்றவற்றில் ஒரு கிரகமாக இருந்து அவர் நின்ற நட்சத்திரம், உப நட்சத்திரம் கிரகங்கள் செவ்வாய்,ராகு,கேது,சனி இவற்றில் இருந்தால் மேற் கண்ட பாதிப்புக்களின் கொடூர தன்மை,அருஅருப்பாக இருத்தல், நமைபெறும் சம்பவங்கள் பாயங்கரமாக இருக்கும்.


இதுபோலதான் ஒரு பாவத்தினால் ஏற்படும் நன்மை அல்லது தீமை அளவீட படுகிறது.


ஒரு பாவத்தின் நன்மையோ அல்லது தீமையோ ஜாதகர் முழுமையாக அனுபவிப்பதற்கு அந்த கிரகத்தின் தசை வரவேண்டும்.ஒரு தசையில் நடக்கும் சம்பவங்களே நீண்ட காலத்திற்கு ஜாதகர் அனுபவிக்கும் சம்பவங்களாக இருக்கிறது.


இதை உதாரணம் மூலமாக பார்போம் முன்னாள் தமிழக முதல்வர் அம்மா அவர்கள் இறந்தபோது நடைபெற்ற தசை குரு ஆகும்.நமைபெற்ற புத்தி சனி ஆகும்.சனி கிரகமே அம்மா அவர்கள் இறப்பதற்கு காரணம் என்றால் சனி ஏன் ராகு தசை,செவ்வாய் தசை,சந்திர தசை போன்ற தசைகளில் தன்னுடைய புத்தியில் மரணத்தை தரவில்லை என்பதை யோசிக்கும் பொழுது தசை நாதன் சொல்லும் வேளைகளைதான் புத்திநாதன் செய்கிறார்கள் என்பது தெளிவாகிறது.



மற்றுயொரு உதாரணம் அமெரிக்கா வரலாற்றிலே அதிபர் ஒருவர்க்கு 70 வயிதிற்கு மேல் உள்ளவராக டிரம்ப் அவர்கள் வந்துள்ளார்.அவர் அதிபராக வந்த்துக்கு இப்பொழுது நடைபெற்ற புத்தி என்றால் இதுவரைக்கு பல தசைகளில் அந்த புத்திநாதன் ஏன் இவரை அதிபராக ஆக்கவில்லை என்று யோசிக்கும் பொழுது புரிகிறது.



ஒரு கிரகம் ஒரே பலனை செய்யும் என்றால் ஒரு ஜாதகரின் வாழ்க்கையில் எல்லா தசையிலும் ஒரே பலனை அந்த கிரகம் செய்வில்லை என்பதை ஆழ்ந்து சிந்திக்கவேண்டும்.அப்பொழுது தசைக்கு ஏற்ப புத்திநாதன் தன்னுடைய செயல்பாட்டை மாற்றிக்கொள்கிறது என்பது இதன் மூலமாக நமக்கு புலன் ஆகிறது.


தீவரவாத்தில் ஈடுபடுவர்கள்,கட்டபஞ்சாய்த்தில் ஈடுபடுவர்கள் ஆயுளை ஆராய்யும் பொழுது அற்ப ஆயுளாகவே உள்ளது.யாரும் 45 வயதை தாண்டவில்லை.கத்தி எடுத்தவனுக்கு கத்தியாலே மரணம் வரும் என்ற தமிழ்யில் ஒரு பழமொழி உள்ளது.


மேற்கண்ட ஆய்வின்படி 4,8,12ம் பாவங்கள் 4,8,12ம் பாவங்களை தொடர்பு கொள்வதாலும்,1,5,6,9ம் பாவங்கள் 4,8,12ம் பாவங்களோ அல்லது 4,6,8,12ம் பாவங்களை தொடர்பு கொள்வதாலே திடீரென ஏற்படும் மாற்றத்தாலே சட்ட விரோத அமைப்புகளில் இணைவதும் அதனாலே மறைந்து வாழ்தல்,உடல் சிதைக்கபட்டு இறத்தல், மற்றும் அற்ப ஆயுள் ஏற்படுகிறது என்பது புலன் ஆகிறது.



பகுதி 2 முடிவுற்றது பகுதி 3 தொடரும்

No comments:

Post a Comment