இரண்டாவது பகுதி
குழந்தை பிறப்பில் உள்ள சாதகமற்ற நிலைகள் யாவை?
9) 5ம் பாவ உப நட்சத்திரம்,உப உப நட்சத்திரம்,ஆரம்பமுனை நட்சத்திரமாக உள்ள இந்த மூன்று கிரகங்களும் 5ம் பாவ விதிக்கொடுப்பினையை தீர்மானிக்கிறது.இந்த மூன்று கிரகங்களின் ஏதாவது ஒன்றின் தசை நடந்தாலும் அந்த கிரகம் 5ம் பாவத்திற்கு நன்மையோ அல்லது தீமையோ செய்யும் அதிகாரம் உள்ளது.5ம் பாவ உப நட்சத்திரம் நன்றாக இருந்தும் 5ம் பாவ உபஉப நட்சத்திரம் அல்லது 5ம் பாவ ஆரம்பமுனை நட்சத்திரம் கெட்டுயிருந்து தன்னுடைய தசையை நடந்தும் போது குழந்தை பிறப்பில் பாதிப்பை உண்டாக்க முடியும்,ஏனெனில் விதிக்கொடுப்பினை மதி என்ற தசையாக வரும் பொழுது வலிமையாக செயல்படும் என்ற விதிபடி.
10) 5ம் பாவ விதிக்கொடுப்பினை நிர்ணைக்கும் மூன்று முனைகளின் தசை இளமையில் அதாவது ஆணுகளுக்கு 20 வயதில் இருந்தும்,பெண்களுக்கு 16 வயது முதலும் நடக்கும் போது இதனுடைய பாதிப்பு அதிகமாக இருக்கும்.
11) குழந்தை பிறப்பதற்கு கிரக காரகம் குரு ஆகும். குரு தான் நின்ற நட்சத்திரம்,உப நட்சத்திரம் மூலமாக 4,8,12ம் பாவங்களை தொடர்பு கொள்கூடாது.
12) குழந்தை பிறப்பதற்கு கிரக காரகம் குரு ஆகும். 5ம் பாவ உப நட்சத்திர கிரகமாக குரு இருந்து 4,8,12ம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாகவும் அல்லது உபஉப நட்சத்திரமாகவும் அல்லது ஆரம்பமுனை நட்சத்திரமாகவும் இருந்து தான் நின்ற நட்சதிதரம்,உப நட்சத்திரம் மூலமாக 4,8,12ம் பாவங்களை தொடர்பு கொள்ளும் போது குரு தன்னுடைய கையில்உள்ள 5ம் பாவத்தை கெடுத்துக்கொண்டு 4,8,12ம் பாவங்களின் வேளையை செய்யும் இது ஒரு வகை,மற்றொரு வகை தன்னுடைய கையில் 4,8,12ம் பாவங்களை வளர்க்கும் போது 5ம் பாவத்திற்கு கூடுதலாக பாதிப்பை தரும். ஏனெனில் 4,12ம் பாவத்தின் பிரதான வேளையே 5,9ம் பாவங்களை முழுமையாக கெடுப்பதுதான்,லக்னத்திற்கு 70 சதவீதம் தீமையை தரும்.12ம் பாவம் 1,5ம் பாவங்களை முழுமையாக கெடுத்தும்,9ம் பாவத்திற்கு 70 சதவீதம் தீமையை தரும்.4,12 அந்த பாவங்கள் வலிமைபெறும் போது 5ம் பாவம் பாதிக்கபடும் என்பது பொது விதி.5ம் பாவ பாதிக்பட்டுயிருக்கும் போது 4,8,12ம் பாவங்கள் வலிமைபெற கூடாது என்பது சிறப்பு விதியாகும்.
13) 5ம் பாவ விதிக்கொடுப்பினை ஒற்றைப்படை பாவங்களை தொடர்பு கொண்டுயிருந்தும்,குரு ஒற்றைப்படை பாவங்களை தொடர்பு கொண்டுயிருக்கும் போதும். 4,12ம் பாவங்களுக்கு உப நட்சத்திர கிரகங்கள் தான் நின்ற நட்சத்திரம்,உப நட்சத்திரம் மூலமாக 4,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டு இருந்து இந்த தசை ஜாதகருக்கு 20 வயது முதல் தசை நடந்தும் போது.4ம் பாவம் லக்னத்திற்கு 70 சதவீதம் தீமையை தரும்,5ம் பாவத்திற்கு 12ம் பாவமாக 4ம் பாவம் வருவதால் 5ம் பாவத்தின் காரகங்களுக்கு எதிரான காரகங்களை கொண்டுயிருக்கும்,9ம் பாவத்திற்கு 8ம் பாவமாக 4ம் பாவம் வருவதால் 9ம் பாவத்திற்கு எதிர்மறையான சிந்தனைகள் இருக்கும்.ஒரு கிரகம் தன்னுடைய தசையில் தன்னுடைய பாவத்திற்கு ஒரு விளைவையும்,லக்னத்திற்கு ஒரு விளைவையும்,மற்ற பாவங்களுக்கு ஒரு விளைவையும் தரும் என்ற விதிபடி,4,12ம் பாவ உப நட்சத்திர கிரகங்களின் தசையில் 1,5,9ம் பாவங்களுக்கு ஒரு விதமான பாதிப்பை ஜாதகருக்கு தரும்.குழந்தை பிறப்பில் சில சங்கடங்களை ஜாதகர அனுபவிப்பார்.ஆனால் குழந்தை பிறக்கும்.
14) 5ம் பாவ உப நட்சத்திரம் பாவதிக்கபட்டுயிருந்து,கிரக காரக குருவும் பாதிக்கபட்டுயிருந்து,1ம் பாவம் 4,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டுயிருக்கும் போது மிகவும் குழந்தை பிறப்பில் சங்கடங்களை ஜாதகர் அனுபவிப்பார். 1,5,குரு வலுவாக பாதிக்கபட்டுயிருக்கும் போது வலிமையான ஒற்றைப்படை பாவங்களை தொடர்பு கொண்ட தசை நடந்தாலும் குழந்தை பிறப்பதில் பிரச்சனைகள் இருக்கும். அதாவது இரண்டு அல்லது மூன்று கருசிதைவு அல்லது 7மாதமாக குழந்தை வயிற்றில் இருக்கும் போது வயிற்றியிலே இறந்துவிட்டது என்று சுகபிரசவம் மூலமாக அல்லது அறுவைசிகிச்சை மூலமாக குழந்தை வெளியேயெடுக்கபடும்.குழந்தை பிறந்து இறப்பது,மூளை வளர்ச்சிகுன்றிய குழந்தைகளாக பிறப்பது,சராசரி குந்தையாக இல்லாமல் உடல் ஊனத்தோடு பிறப்பது,மூன்று அல்லது நான்கு கை மற்றும் கால்களோடு பிறப்பது, திருமணம் ஆகி 10,15 ஆண்டுகள் கழித்து குழந்தை பிறக்கும்.இதுபோல பலவிதமான கஷ்டங்களை அனுபவித்து பிறகே குழந்தை பிறக்கும்.
15) குழந்தை பிறப்பதில் கருப்பபை முக்கிய இடத்தை வகீக்கிறது.கர்ப்பபைக்கும் கிரக காரகம் குருவாகும்.7ம் பாவம் கர்ப்பபையை குறிக்கும்.7ம் பாவம் பாதிக்கபட்டு,குரு பாதிக்கபட்டுயிருக்கும் பெண்களுக்கு கருப்ப்பையில் இருக்கும் பிரச்சனைகளால் கரு அடிக்அடி கலைந்துவிடும்.கருப்பபைவாய்புறத்தில் உள்ள தொற்று நோய்கள்,நீர் கட்டிகள் போன்ற பல பிரச்சனைகளால் பாதிப்பு உண்டாகும்.
16) 5ம் பாவத்திற்கு உப நட்சத்திரமாகவும்,உபஉப நட்சத்திரமாகவும்,ஆரம்பமுனை நட்சத்திரமாகவும் சந்திரன் இருப்பது.நடக்கும் தசை நாதன் சந்திரன் நின்ற நட்சத்திரமாக இருக்கும் என்ற விதிபடி. 5ம் பாவத்திற்கு உப நட்சத்திரம் சந்திரன் நின்ற நட்சத்திரமாக 4,8,12 பாவ உப நட்சத்திர கிரகம் இருக்கும்.4,8,12ம் பாவ உப நட்சத்திர கிரகத்தின் தசை நடக்கும் போது பாதிப்பை உண்டாக்கும்.
17) 5,7ம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாகவும்,உபஉப நட்சத்திரமாகவும், ஆரம்பமுனை நட்சத்திரமாகவும் சந்திரன் இருப்பது.
18) 5ம் பாவ உப நட்சத்திரமாகவும்,உபஉப நட்சத்திரமாகவும், ஆரம்பமுனை நட்சத்திர அதிபதி குரு இருந்து 4,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டால் முழுமையான பாதிப்பை தருவார்.கிரக காரக கிரகம் அந்த பாவத்திற்கு அதிபதியாக இருந்து பாதிக்கபட்டுயிருந்தால் மிகவும் பாதிப்பை தரும். இதற்கு காரகோபாவநாசி என்று பெயர்.
19) உப நட்சத்திரமாகவும்,உபஉப நட்சத்திரமாகவும், ஆரம்பமுனை நட்சத்திர அதிபதிகளாக சனி,ராகு,கேது இருந்து இவர்கள் நின்ற நட்சத்திரம்,உப நட்சத்திர கிரகங்கள் சனி,ராகு,கேதுவாக இருந்தால் ஜாதகருக்கு அலி தன்மை அல்லது மலட்டு தன்மை அதிகாமாக இருக்க வாய்ப்புள்ளது.
ஜோதிட விதிகள் இரண்டாவது பகுதி முடிவுற்றது ஜாதக ஆய்வு தொடரும்
No comments:
Post a Comment