Wednesday, 23 March 2016

மனநிலை பாதிப்பு ஆய்வு ஜாதகம் 1
ADVANCED KP STELLAR ASTROLOGY (உயர்கணித சார ஜோதிடம்)

இந்த ஜாதகர் B.C.A. படித்தவர். நல்லபடி வேலை செய்தும் வந்தவர். 2009 ல் திருமணமும் முறைப்படி நடந்து உள்ளது. அதன் பின் குழந்தை பிறப்பில் தாமதம் ஏற்படவே, ஒரு ஜோதிடரிடம் சென்று ஜாதகம் பார்த்து உள்ளனர். ஜாதகத்தை பார்த்த ஜோதிடர் இந்த ஜாதகம் ஒரு உருப்படாத ஜாதகம், இந்த ஜாதகருக்கு 2012 ஒரு மிக பெரிய கண்டம் உள்ளது, கண்டதை ஜாதகர் தாண்ட முடியாது என்று சொல்லி விட்டு ஜாதகத்தை மூடி கொடுத்து அனுப்பிவிட்டார். இந்த ஜாதகரின் குடும்பமே சோகத்தில் முழ்கியது. இந்த ஜாதகரின் பெற்றோர்களும் பல ஜோதிடர்களிடம் 2012 ம் ஆண்டு இந்த ஜாதகருக்கு ஏதாவது கண்டம் உள்ளதா என பார்த்து சொல்லுங்கள் என்று பலன் கேட்டு உள்ளனர். அனைவரும் அச்சு பிசகாமல் ஒரே பதில் கொடுத்து உள்ளனர். (உண்மையில் ஜாதகமும் அப்படித்தானே உள்ளது).
இந்த நிலையில் ஜாதகரே ஜோதிட புத்தகங்கள் வாங்கி படிக்க ஆரம்பித்து உள்ளார், கிட்டதட்ட ஒரு நூற்றி ஐம்பது ஜோதிட புத்தகங்கள் வாங்கி படித்து விட்டு, உறவினர்களுக்கு இவரே பலன் சொல்லும் அளவுக்கு தேறிவிட்டார்.(குரு திசை ராகு புத்தி கவனியுங்கள்)
தனக்கு வரப்போகும் சனி திசை கண்டிப்பாக தீய பலனை தரும் என்ற நிலைக்கு வந்து விட்டவர் வேலைக்கு செல்வதை நிறுத்தி விட்டார். மற்றவர்களுடன் பேசுவதையும் குறைத்துக் கொண்டார். சனி திசை சுய புத்தி ஆரம்பித்தது ஜாதகரின் தூக்கம் குறைய தொடங்கியது. உடலில் ஒருவித பதட்டமும் தொற்றிக்கொண்டது. தனி அறையில் இருப்பதும், யாரிடமும் பேசுவது இல்லை. ஜாதகரின் பெற்றோர்கள் ஒரு சிலரது அறிவுரைகளின் படி ஜாதகரை மனநிலை மருத்துவரிடம் அழைத்து செல்ல. மருத்துவர் மருத்து வமனையில் ஒரு மாதம் தங்க வைத்து சிகிச்சை கொடுத்து ஒரு நடமாடும் பொம்மை போல் வீட்டுக்கு அனுப்பி விட்டார்.
ஜாதகர் ஆண் 12.11.1974 அன்று 7.30 காலை திருச்சி.ஆளும் கிரகம் காஞ்சிபுரம் 19.10.2014 அன்று இரவு 10.50.18 ஆகும் திருத்திய நேரம் 7.30.32 ஆகும்.ஆளும் கிரகத்தில் சந்திரன் உபஉபஉப நட்ச்த்திரமாக உள்ளதை பிறந்த நேரத்தில் உபஉபஉப நட்சத்திரமாகவும்,உபஉப நட்சத்திரமாக உள்ள சனியை பிறந்த நேரத்தில் உபஉப நட்ச்த்திரமாக வருமாறு வைத்து உள்ளேன்.

ஜாதகரின் பற்றிய தகவல் மனநிலை பாதிப்பு ஆகும்.

அதற்கு நாம் ஆய்வு செய்யவேண்டிய பாவங்கள் மற்றும் கிரக காரகங்கள் பன் வருமாறு

1)      3ஆம் பாவம் மற்றும் மனோகாரகன் சந்திரன், சிறிய அளவு குழப்பமான மனநிலைக்கு சனி.பெரிய அளவில் குழப்பமான மன நிலைக்கு ராகு ஆகும்.

2)           லக்னம் கொடுப்பினை

3)           தசை கொடுப்பினை

இப்பொழது ஜாதகத்தை ஆய்வு செய்வோம்

இப்பொழது நடப்பது சனி தசை.சனி புத்தியாகும்.

சனி 8.11ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக உள்ளார் மற்றும் 1,3ஆம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரிமாக உள்ளார்.1,9ஆம் பாவங்களுக்கு ஆம்பமுனை நட்டசத்திரமாகவும் உள்ளார்.    

சனி தான் நின்ற நட்சத்திரம் குரு மற்றும் புதன் உப நட்சத்திரம் வழியாக 2,6,8,10,12ஆம் பாவங்கள் வேளையை செய்யும்.

இங்கே குரு 6,8,10,12 ஆம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாக உள்ளார்

புதன் 2,5ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக வும்,   5,9 பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாக ,  5ஆம் பாவத்திற்கு ஆரம்பமுனை நட்டசத்திரமாகவும் உள்ளார்.    

புத்தி சானம் என்று கூறும் 5ஆம் பாவத்தை கெடுத்தும். ஆழந்த அறிவு.தெய்வ அனுகிரகம் என்று சொல்லும் 9ஆம் பாவத்தையை கெடுத்து 2,6,8,10,12ஆம் பாவங்களின் வேளையை சனி செய்கிறது.

சனி தன்கிட்ட உள்ள 11 மற்றும் 1,3, மற்றும் 1,9ஆம் பாவங்களுக்கு எதிராகவும் மற்றும் 8ஆம் பாவத்திற்கு சாதகமாகவும் வேளையை செய்கிறார்.

8ஆம் பாவம் 6,8,10,12 ஆம் பாவங்களை தொடர்பால் அசுர பலம் பெறுகிறது


இதைதான்  பாரம்பரித்தில் காரகோபாவநாசி என்று கூறுவார்,கிரக காரகமும்.அதற்க்குறிய பாவத்திலே நின்று இருப்பது, அதாவது குழப்பதிற்க்கு கிரக காரகர் சனி அவரே 1,3, அதிபதியாகம்,அதிகமான துன்பத்தை தரும் 8ஆம் பாவத்திற்கு அதிபதியாகவும் வருகிறார்.மற்றும் நடப்பது சனி தசை சனி புத்தி ஆகும், சொல்ல வேண்டுமா ஜாதகரின் துயரத்தை.

லக்னம் 40 சதவீதம் கெட்டு.3ஆம் பாவம் 40 சததீம் கெடடு, நடப்பு தசையும் 3 ஆம் பாவத்றிக்கு எதிராக உள்ளது. கரிக காரகங்களும் கெட்டு உள்ளது.

அடுத்து வரும் புதன் புத்தி மேலோட்டமாக பார்க்கும் போது நன்றாக உள்ளது, உள்ளே பார்த்தால் புதன் நின்ற நட்சத்திரம்,உப நட்சத்திரம் ராகு ஆகும்.ராகு 1,3,7 உப நட்சத்திரம்மாவும்.4,8,12ஆம் பாவங்களும் ஆரம்ப முனை நட்சத்திரமாகவும் உள்ளார் அதனால் குழப்ங்களை சிறிய அளவில் குழப்பமான பிரச்சனைகளை தருவாறு.

அதற்ககு பிறகு வரும் கேது 6,8ஆம் பாவங்களின் வேளையை செய்யும்,6ஆம் பாவம் 3,7,11ஆம் பாவங்களை வலு இழக்கசெய்யும்,

சுக்கிரனும் 6,8,10,12 மற்றும் 10,12 அதாவது இரண்டு முறை 10,12 வருவதை கவனிக்க . 3ஆம் பாவத்தை அதிக அளவு கெடுக்கும்,நாம் தான் ஆய்வு செய்ய வேண்டும் மென் பொருள் ஒரு 10,12யை தான் காட்டும்.
                    

உயர்கணித சார ஜோதிடம் படி 16.10.2011 சனி தசை ஆரம்பம் ஆகும்,அது முதல் ஜாதகரின் பிரச்னைகள் அதிகமாகி உள்ளது   

Tuesday, 22 March 2016

துல்லியமாக பலன் காணும் ஜோதிட முறையும் அதற்க்கான வழிமுறைகளும்

                                             சிவாயநம
துல்லியமாக பலன் காணும் ஜோதிட முறையும் அதற்க்கான வழிமுறைகளும்

துல்லியமான பலன்கள் சொல்லுவதற்க்கு முன்னோர்கள் ராசி கட்டத்தை பல பிரிவுகளாக பிரித்து வகுத்துள்ளனர். அவ்வாறு 12 பிரிவுகளாக பிரித்து பலன் காணும் முறையை உருவாக்கியுள்ளேனர்,மற்றும் அட்டவர்க்கம் என்ற பெரிய அளவில் ஒரு கணித முறையும் உருவாக்கியிருந்தனர், வேதை,பருவம் என்ற தசைக்குரிய கிரகங்களின் வலிமையை அறியும் முறையும் உருவாக்கியிருந்தனர், ஆனால்  இதற்க்குயல்லாம் தெளிவான வழி காட்டும் புத்தகங்கள் நமக்கு கிடைட்க்கவில்லை,அதற்க்கான ஆய்வுகள் செய்ய போதிய நேரம் இன்மை அல்லது அறிவுயில்லை என்பதால் பெருபாலன்னோர் ராசி கட்டத்தை மட்டுமே வைத்து பலன் சொல்லுகிறார்கள்.

ஜோதிட அறிவு உள்ள ஒரு பிரிவினர் ஜாதகர் கொடுத்த ஜாதகத்தை கணித்து பார்த்து ராசி,அம்சம்,பாவ சக்கரத்தை கொண்டு பலன் சொல்லுகிறார்கள் இவர்கள் நன்றாகவே பலன் உரைக்கிறார்கள்,ஆனால் பெருபால ஜோதிடர்கள் ராசி கட்டத்தையும் வைத்தே பலன் உரைக்கிறார்கள்,மற்றும் ஏழரை சனி,அஷ்டம சனி, அஷ்டம குரு, அஷ்டம ராகு, அஷ்டம கேது போன்றவையை வைத்தே நன்மை மற்றும் தீமை பலன் கூறுகிறார்கள்,தசைக்கோ, புத்திக்கு வருவது இல்லை.

ஒரு கிரகத்தின் ஆதிபத்தியத்திற்க்கு,அந்த கிரகம் இருக்கும் இடம்,அந்த கிரகம் நின்ற நட்சத்திரஅதிபதியின் ஆதிபத்தியம் போன்றவற்றுக்கு முக்கியத்தும் அளிக்காமல் சேர்க்கை, பார்வை,பாதகசானம் போன்றவற்றுக்கு முக்கியத்தும் அளிக்கிறார்கள்.

சேர்க்கை என்பது ஒரு பாதத்தில் இணைந்து இருப்பது என்று பாரம்பரிய நூல்களில் விளக்கபட்டுள்ளது.

ஒரு கிரகம் அப்படி 30டிகிரி உள்ள ஒரு ராசியை ஒரே மாதிரியாக பார்த்து பலனை தராது.

பாதகாதிபதியால் முழுமையாக நல்ல ஆதிபத்தியில் உள்ள ஒரு கிரகத்தை கெடுக்கும் என்று பாரம்பரிய நூல்களில்  கூறவில்லை.

பாரம்பரியமுறையில் உள்ள பலன் கூறுவதில் உள்ள தெளிவாக பலன் கூறுவதில் உள்ள பிரச்சனைகளை சென்ற நூற்றாண்டில் வாழ்ந்து காலஞ்சென்ற ஜோதிட மேதை கோபால கிருஷ்ணன் (மீனா),கே.எஸ்.கிருஷ்ணழூர்த்தி அவர்கள் பெரும் பாடுபட்டனர்.

ஒரு தசை என்பதை ஒரு நட்ச்த்திரமாக எடுத்துக்கொண்டு அந்த தசையின் உட்பிரிவுகளான புத்திகளை எப்படி தசையிலைருந்து பிரிக்கின்றோமோ அதன்படி நட்சத்திரத்தை பிரிப்பது சரியான பலனைத் தரும் என்ற சிந்தனை சென்ற நூற்றாண்டில் வாழ்ந்து காலஞ்சென்ற ஜோதிட மேதை கோபால கிருஷ்ணன்(மீனா)அவர்களுக்கு வந்தது,அதன்படி அவர் ஒரு நட்சத்திரத்தை ஒன்பது பிரிவுகளாக பிரித்தார்,அதாவது 27*9=243 ஆகும்,இது தான் சார ஜோதிடத்தின் அடுத்த பரிணாமத்திற்கு மூல காரணமாக அமைந்தது.

சென்ற நூற்றாண்டில் அதே காலக்கட்டத்தில் வாழ்ந்த ஜோதிட மாதேதை பேராசிரியர் கே.எஸ்.கிருஷ்ணழூர்த்தி அவர்கள்,இந்த 243 உட்பிரிவுகளை மேலும் மேம்படுத் தினார்.அதாவது சூரியன்,குரு நட்சத்திரங்களில் உள்ள சந்திரன்,ராகு உட்பிரிவுகள் இரண்டு ராசிகளில் வருவதால் 243 உப பிரிவுகளுடன் மேலும் 6 உப பிரிவுகளை சேர்த்து 249 பிரிவுகளாக ராசி மண்டலத்தை பிரித்தார்,இந்த உட்பிரிவுகளுக்கு இவர் உப நட்சத்திரம்(SUBLORD)என்று பெயரிட்டு ஜோதிட உலகில் ஒரு மறுமலர்ச்சியை உண்டாக்கினார்.

பேராசிரியர் கே.எஸ்.கிருஷ்ணழூர்த்தி அவர்கள் ஒரு கிரகம் தான் நின்ற நட்சத்திர அதிபதியின் பலனை தரும் என்ற நிலையில் இருந்து சார ஜோதிட முறையை நட்சத்திரம் சம்பவத்தை காட்டும் என்றும் உப நட்சத்திரம் நட்சத்திரம் காட்டிய சம்பத்திற்கு சாதக,பாதக பலனை தரும் என்றும் மேம்படுத்தினார்.

மேலும் திரு.கே.எஸ்.கிருஷ்ணழூர்த்தி அவர்கள் ஜோதிட கணிதத்தை கணக்கீடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவிற்கு அதனை பல ஆய்வுகள் செய்து மேம்படுத் தினார்.அதாவது கிரகங்களுக்கு எப்படி நட்சத்திரம்,உப நட்சத்திரம் என்று பிரிவுகள் உள்ளேதோ,அதே பிரிவுகளை 12 பாவங்களுக்கும் ஏற்படுத்தி குறுகிய கால இடைவெளியில் பிறப்பவர்கள்(30 நொடி அளவில் கூட) பெருமளவு வேறுபடுத்தி காட்டும் புதிய உயர்கணித ஜோதிட முறையை வடிவமைத்து ஜோதிட உலகில் அழியாப் புகழை பெற்றார்.







Friday, 18 March 2016

ஜோதிடம் என்பது என்ன பொருள்

                                              சிவாயநம


                            ஜோதிடம் என்பது என்ன பொருள்




ஜோதிடத்தில் முதல் முதலில் விண்வெளியில் சுற்றி வரும் நட்சத்திரகள், ஒவ்வொரு கூட்டமாக சுற்றி வருவதையும், அந்த நட்சத்திர கூட்டத்தை கொண்டே பலன்கள் நிர்ணையம் செய்யபடுகிறது, விண்வெளியில் பல நட்சத்திர கூட்டங்கள் இருந்தாலும் அவற்றில் 27 நட்சத்திர கூட்டங்களே பூமியின் மீது ஒருவிதமான நன்மைகளை அல்லது தீமைகளையோ செய்கிறது.பிறகு கோள்கள் கண்டுபிடித்தனர்,அந்த கோள்கள் அந்த 27 நட்சத்திரகள் வழி வளிமண்டத்தை சுற்றி வருகிறது. அப்பொழது நிகழம் கிரகங்களின் சேர்க்கையால் ஏற்படும் பூமியில் நன்மை அல்லது தீமைகள் ஏற்படுகின்றன.

27 நட்சத்திரங்களை கொண்ட ராசி மண்டலத்தை 360 டிகிரியாக பிரிக்கபட்டுள்ளது,ஒவ்வொரு ராசியும் 30 டிகிரியாக பிரிக்கபட்டுள்ளது,ஒருநட்சத்திரம் என்பது 13.20 டிகிரியாக ஆகும் மற்றும் ஒருநட்சத்திரம் என்பது 9பாதங்களை கொண்டது ஒரு பாதம் என்பது 03.20 டிகிரி ஆகும்,ஒரு ராசி என்பது 9 பாதங்களாக பிரிக்கபட்டுள்ளது,12 ராசிகள் 108 பாதங்களாக பிரிக்கபட்டுள்ளது.

சூரியன் ஒரு மாதம் ஒரு ராசியில் இருப்பார்
சந்திரன் இரண்டேகால் நாட்கள் ராசியில் இருப்பார்
செவ்வாய் 1.5 மாதம் ஒரு ராசியில் இருப்பார்
புதன் 1 மாதம் ஒரு ராசியில் இருப்பார்
குரு 1 ஆண்டு ஒரு ராசியில் இருப்பார்
சுக்கிரன் 1 மாதம் ஒரு ராசியில் இருப்பார்
சனி 2.5 ஆண்டுகள் ஒரு ராசியில் இருப்பார்
ராகு 1.5 ஆண்டுகள் ஒரு ராசியில் இருப்பார்
கேது 1.5 ஆண்டுகள் ஒரு ராசியில் இருப்பார்

ஜோதிட விதிகளை உருவாக்கிய முனிவர்கள்,சித்தர்கள்,நம் முன்னோர்கள் ஒவ்வொரு ராசியிலும் உள்ள கிரகங்கள் அந்த கிரகங்களை பார்க்கும் கிரகங்கள்,அந்த கிரகங்களோடு இணைந்துள்ள கிரகங்கள்(ஒரு பாத்த்தில்) முதலியவற்றால் ஏற்படும் நன்மைகளையும்,தீமைகளையும் மிகவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.

கோச்சாரம் என்பது
1) ஒருவருடைய ஜாதகத்தில் நன்மை செய்யும் கிரகம் கோட்சாரத்தில் நன்மை செய்யும் விதத்தில் இருந்து அந்த கிரகத்தின் தசையே நடக்கும் போது அதிகமான நன்மையை ஜாதகர் அடைவார்
2) ஒருவருடைய ஜாதகத்தில் நன்மை செய்யும் கிரகம் கோட்சாரத்தில் தீமை செய்யும் விதத்தில் இருந்து அந்த கிரகத்தின் தசையே நடக்கும் போது நன்மையை குறைத்து செய்வார் ஆனால் தீமையை செய்யமாட்டார்.
3) ஒருவருடைய ஜாதகத்தில் தீமை செய்யும் கிரகம் கோட்சாரத்தில் தீமை செய்யும் விதத்தில் இருந்து அந்த கிரகத்தின் தசையே நடக்கும் போது அதிகமான தீமையை ஜாதகர் அடைவார்
4) ஒருவருடைய ஜாதகத்தில் தீமை செய்யும் கிரகம் கோட்சாரத்தில் நன்மை செய்யும் விதத்தில் இருந்து அந்த கிரகத்தின் தசையே நடக்கும் போது தீமையை குறைத்து செய்வார் ஆனால் நன்மையை செய்யமாட்டார்.


இவைகளே நம்முன்னோர்கள் வகுத்த விதிகள் ஆகும்.


ஆனால் சுமார் 15 ஆண்டுகளாக தனியார் தொலைக்காட்சிகள் மற்றும்,தினசரி பத்திரிக்களில் ராசி பலன்கள் என்ற பெயரில் பொதுவான பலன்களை அனைவருக்கும் பொருந்தும் பலன்கள் போல கூறிவருகின்றனர் இது முற்றிலும் தவறுயாகும். ஒவ்வொருக்கும் அவர் பிறந்த இடம் பிறந்த நேரம்,பிறந்த தேதி கொண்டு ஜாதகம் கணித்து அவருக்கு நடக்கும் தசையை கொண்டே பலன்களை கூறவேண்டும் என்பது நம்முன்னோர்கள் வகுத்த பலன்கள் ஆகும் ஆனால் அதற்க்கு மாறாக


தமிழ் நாட்டியின் ஜனதொகை 10கோடி என்று கொண்டால் 12 ராசிக்கு பங்கிடும் போது


ஒரு ராசிக்கு வரும் மக்கள் தொகை 83,33,333ஒரு ராசிக்கு உள்ள இத்தனை மனிதர்களுக்கும் ஒரே பலன் நடக்கிறதா என்றால் இல்லை ஒரு ராசியில் சழூதாயத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் உள்ளன அவ்வாறுயிருக்கும் அபொழது அவர்களுக்கு அனைவருக்கும் ஒரே பலனை கூறுவது எவ்வாறு பொருந்தும் என்பதே என்னுடைய கேள்வியாகும்.


ஒரு ராசியில் உள்ள இரண்டேகால் நட்சத்திரங்களுக்கு 83,33,33 லட்சம் மக்களை பிரிக்கும் போது ஒரு நட்சத்திரத்திக்கு வரும் 3703703 லட்சம் மக்கள் வருகிறார்கள் 

அப்பொழது ஒரு நட்சத்திரத்தில் பிறந்த அனைத்தும் மக்களுமே ஒரு பலன் நடக்கவில்லை 

அப்படியிருக்கும் போது ஒரு ராசிக்கு ஒரே பலனாக சொல்லுவது சரியா என்பது என்னுடைய கேள்வியாகும்.


நேரடியாக கேள்விக்கு வருகிறேன்
ஒரு காமாராஜர் தான் உள்ளார்
ஒரு கக்கன் தான் உள்ளார்
ஒரு கலைஞர் கருணாநிதிதான் தான் உள்ளார்
ஒரு செல்வி ஜெயலிலதா தான் உள்ளார்
ஒருசிவாஜிகணேசன்,எம்.ஆர்.ராதா,என்.ஏ.கே.கிருஷ்ணன்,பாலயா,இளையராஜ மற்றும் ஏ.ஆர்.ரகுமான் தான் உள்ளார்,
இவர்களில் தனி திறமை என்பது அவர்களின் பிறந்த ஜாதகத்தை அடிப்படையாக கொண்டது இவர்களும் ஏதாவது ஒரு ராசியில் பிறந்து இருப்பார்கள் மற்றும் ஏதாவது ஒரு நட்சத்திரத்தில் பிறந்துயிருப்பார்கள் அவர்களால் எட்ட முடிந்த உச்ச நிலை அவருடைய ராசியில் பிறந்த மற்ற மக்களால் அடைய முடியவில்லை மற்றும் அவருடைய நட்சத்திரத்தில் பிறந்த மற்ற மக்களால்அடைய முடியவில்லை ஏன்என்பதே என்னுடைய கேள்வியாகும்?

இவ்வாறு இருக்கும் போது
சனி பெயர்ச்சி பலன்
குரு பெயர்ச்சி பலன்
ராகு பெயர்ச்சி பலன்
கேது பெயர்ச்சி பலன்களுக்கு பொதுவாக கூறுவது எவ்வாறு ஏற்றுக்கொள்வது.
அனைவருக்கும் எளிதில் புரியும்படியான கேள்வி
17.03.2016 அன்று எவ்வளவு குழந்தைகள் பிறந்துள்ளனே,
1) அவர்களில் சில பேர் அரசாங்க மருத்துவமனையில் பிறந்துள்ளனர்
2) அவர்களில் சில பேர் தனியார் மருத்துவமனையில் ஒரு லட்சம் செலவு செய்து பிறந்துள்ளனர்
3) அவர்களில் சில பேர் அவர்களின் வீட்டியிலே பிறந்துள்ளனர்
4) அவர்களில் சில பேர் உடல் நலகுறைவோடு பிறந்துள்ளனர்
5) அவர்களில் சில பேர் உடல் எடை அதிகமாக பிறந்துள்ளனர்
6) அவர்களில் சில பேர் உடல் எடை குறைவாக பிறந்துள்ளனர்
7) அவர்களில் சில பேர் உடல் ஊனத்தோடு பிறந்துள்ளனர்
8) இது போல எவ்வளவோ கேள்விகளை கேட்டமுடியும் ஆனால் இதற்க்கு எல்லாம் ராசி பலனை சொல்லுபவர்களிடம் பதில் இல்லை

துல்லியமாக பலன்களை கண்டறிய வழி என்ன அடுத்த பதிவில்