Monday, 26 June 2017

பிறந்த துல்லியமான நேரத்தை கண்டுபிடிக்கும் ஆளும் கிரஹங்களில் உப நட்சத்திரத்தையும் பயன்படுத்தும் நுணுக்கமான எளிய முறைகள்

பிறந்த துல்லியமான நேரத்தை கண்டுபிடிக்கும் ஆளும் கிரஹங்களில் உப நட்சத்திரத்தையும் பயன்படுத்தும் நுணுக்கமான எளிய முறைகள்

1) குறிப்பிட்ட நேரத்தை எந்த எந்த கிரகங்கள் ஆளுக்கின்றதோ அந்த கிரகங்களுக்கு ஆளும் கிரஹங்கள் என்று பெயர்.

2) ஒரு கிரகம் எந்த வேளை செய்யனும் என்று சொல்லுபவர் சூரியன் ஆகும்.

3) செயல்படுத்தும் கிரகம் அல்லது நடைமுறைக்கு கொண்டுவரும் கிரகம் சந்திரன் ஆகும்.

4) ஒரு கிரகத்தை செயல்படுத்தும் கிரகங்கள் சூரியன்,சந்திரன் ஆவார்.

5) விதி ஒரு சம்பவத்தை நிர்ணிக்கும் பொழுது அந்த சம்பவம் நடக்க தசை,புத்தி வரவேண்டும்.

6) எப்பொழுது ஜாதகத்தை வாங்கிறோமோ அந்த நேரத்தை ஆளும் கிரஹமாக வைத்து ஜாதகத்தை கணிக்க வேண்டும்.ஜாதகத்தை வாங்கிய நேரத்தை விட்டு வேறுஒரு நேரத்தை ஆளும் கிரஹமாக வைத்து ஜாதகத்தை கணிக்ககூடாது, வாட்ஸ்ஆப், மெஸ்ஜியில் ஜாதகம் வந்த நேரத்தை ஆளும் கிரஹமாக வைத்து ஜாதகத்தை கணிக்க வேண்டும்.

ஆர்.பி.14.07.2011 10.14.00 பிற்பகல்
லக் ராசி நட்சத்திரம் உபநட் உபஉப உபஉபஉப
சனி குரு சுக்கி குரு ராகு

லக்ன நிலையில் உள்ள உபஉபஉப ராகு தேவையில்லை

உதாரணம் சந்திரன் நிலை
சந் ராசி நட் உபநட் உபஉப உபஉபஉப
குரு சுக்கிரன் குரு புதன் ராகு

சந்திரன் நிலையில் உள்ள ராசிஅதிபதி குரு தேவையில்லை

சந்திரன் நிலையில் உள்ள நட்சத்திரம் சுக்கிரன் ஒரு மாநிலத்தின் பெயரையை குறிப்பிடும்.

சந்திரன் நிலையில் உள்ள உப நட்சத்திரம் குரு ஊரின் பெயரை குறிப்பிடும்.

சந்திரன் நிலையில் உள்ள உபஉப நட்சத்திரம் புதன் அந்த ஊரில் உள்ள ஒரு குறிப்பிட்ட தெருவை குறிக்கும்.

சந்திரன் நிலையில் உள்ள உபஉபஉப நட்சத்திரம் ராகு அந்த ஊரில் உள்ள ஒரு குறிப்பிட்ட தெருவில் உள்ள ஒரு குறிப்பிட்ட வீட்டை குறிக்கும்.
இது போல குறுகிவரும் உபஉபஉப நட்சத்திரத்தை துணைக்கொண்டு ஜாதகர் பிறந்த நேரத்தை திருத்த வேண்டும்.

ஜாதகம் வாங்கும் நேரத்தில் உள்ள ஆளும் கிரகத்தில் உள்ள சந்திரனின் நிலையை ஆராய்யும் பொழுது ஜாதகரின் கேள்விக்குரிய பாவங்களை சந்திரனின் நின்ற நட்சத்திரம்,உப நட்சத்திரம் மூலமாக தெரியவரும் அதை கொண்டு ஜாதகரின் பிரச்சனையை அறியலாம்.

ஆளும் கிரகம் 18.05.2011 காலை மணி 6.52 சென்னை போரூர்

கிரகம் நட் ராசி நட்(அ) உப.நட் உஉ.நட் உஉஉ

லக்னம் ரோ சுக் சந் புதன் ராகு சனி

சந்திரன் அனு செ சனி சூரியன் புதன் ராகு

1) சந்திரநிலையில் உள்ள உபஉபஉப நட்சத்திர கிரகத்தை (ராகு) நம்முடைய மென்பொருளில் புளூ கலரில் காட்டுபட்டுயிருக்கும் அதை பிறந்த நேர லக்னத்தில் உள்ள புளூ கலரில் காட்டுபட்டு யிருக்கும் உபஉப நட்சத்திர கிரகமாக வருமாறு செய்யவேண்டும்.

2) சந்திரநிலையில் உள்ள உபஉப நட்சத்திர கிரகத்தை பிறந்த நேர லக்னத்தில் உள்ள உபஉப நட்சத்திர கிரகமாக (புதன்) நம்முடைய மென்பொருளில் புளூ கலரில் காட்டுபட்டு யிருக்கும் அதை பிறந்த நேர லக்னத்தில் உள்ள புளூ கலரில் காட்டுபட்டுயிருக்கும் உபஉப நட்சத்திர கிரகமாக வந்தாலும் பராவில்லை (உபஉபஉப நட்சத்திர கிரகத்திற்கு முன்னாள் உபஉப நட்சத்திரம் கிரகம் வந்தாலும் பராவில்லை).

3) சந்திரநிலையில் உள்ள உபஉபஉப நட்சத்திர கிரகம், உபஉப நட்சத்திர கிரகம் இரண்டியில் ஒரு கிரகம் பிறந்த நேர லக்னத்தில் உள்ள உபஉப நட்சத்திர கிரகமாக வந்து மற்றொருகிரகம் வரவில்லை என்றாலும் பராவில்லை இரண்டு கிரகமும் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை (புதன்,ராகு இவை இரண்டியில் ஒன்று வந்தால் போதும் மற்றொன்று வரவில்லையென்றாலும் பராவில்லை).

4) சந்திர நிலையில் உள்ள உபஉபஉப நட்சத்திர கிரகத்தை பிறந்த நேர லக்னத்தில் உள்ள உபஉப நட்சத்திர கிரகமாக வந்துவிட்ட பிறகு சந்திர நிலையில் உள்ள உபஉப நட்சத்திர கிரகத்தை பிறந்த நேர லக்னத்தில் உள்ள உபஉபஉப நட்சத்திர கிரகமாக கண்டிப்பாக வரவேண்டும் என்ற கட்டாயம் இல்லை.உதாரணமாக உபஉபஉப நட்சத்திரம் கிரகம் ராகு லக்ன நிலையில் உபஉப நட்சத்திர கிரகமாக வந்தவிட்ட பிறகு சந்திரநிலையில் உள்ள உபஉப நட்சத்திர கிரகம் புதன் பிறந்த நேர லக்னத்தில் உள்ள உபஉபஉப நட்சத்திர கிரகமாக புதன் வரவேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

5) சந்திரநிலையில் உள்ள உபஉப நட்சத்திர கிரகத்தை (புதன்) பிறந்த நேர லக்னத்தில் உள்ள உபஉப நட்சத்திர கிரகமாக (நம்முடைய மென்பொருளில் புளூ கலரில் காட்டுபட்டுயிருக்கும்) அதை பிறந்த நேர லக்னத்தில் உள்ள புளூ கலரில் காட்டுபட்டுயிருக்கும் உபஉப நட்சத்திர கிரகமாக வைத்து நேரதிருத்தம் செய்யலாம்

6) சந்திரன் நிலையில் உள்ள உப நட்சத்திர கிரகம்,உபஉப நட்சத்திர கிரகம், உபஉபஉப நட்சத்திர கிரகங்களில் மூன்று இடங்களில் இரண்டு இடங்களில் ஒரே கிரகமே வந்துயிருந்தால் அந்த கிரகத்திற்க்கும் ஜாதகர் பிறப்புக்கும் ஏதே ஒருவித தொடர்பு இருக்கிறது என்பதை கடவுள் நமக்கு உணர்த்திகிறார்.அதனால் அந்த கிரகம் கண்டிப்பாக பிறந்த நேர லக்னநிலையில் உபஉப நட்சத்திர நிலையில் அல்லது உபஉபஉப நட்சத்திர கிரகமாகவோ வரவேண்டும்.

7) சந்திரன் நிலையில் உபஉப நட்சத்திரமாக வரும் கிரகத்தின் ஆரம்ப கால அளவு முதல் முடியும் கால அளவு வரை உள்ள மொத்த செகண்டுகளின் மத்தியமத்தில் வைக்கவேண்டும்.

8) சந்திரன் நிலையில் உபஉப நட்சத்திர கிரகம், உபஉபஉப நட்சத்திர கிரகங்களில் பிறந்த நேர லக்னத்தில் உள்ள உபஉப நட்சத்திர கிரகமாக ஏதோயெரு கிரகம் வந்துவிட்டால் வராத கிரகத்தை வரவைத்தால் பொழுதும்.

9) ஆளும் கிரகத்தை கொண்டு பிறந்த நேரத்தை திருத்தும்பொழுது ஜாதகரு கொடுத்த நேரத்திற்கு நெருக்கமாக வரும் உபஉப நட்சத்திர கிரகத்தையோ அல்லது உபஉபஉப நட்சத்திரத்தை வைத்து நேரத்தை திருத்த வேண்டும்.

10) கேள்விக்கேட்கும் பாவத்திற்கு ஆளும் கிரகத்தைகொண்டு லக்னத்திற்கு நேரத்தம் செய்யும் முறையை கொண்டே பிறந்த நேரத்தை திருத்தினால் சரியான பலன் கிடைக்கும்.

11) சூழ்நிலைக்கு கேற்ப்ப ஆளும் கிரகத்தை பயன்படுத்தும் புதிய முறைகளை கீழே பார்போம்

ஜாதகர் ஜெனகாலம் 15.06.1973 காலை மணி 11.00 காஞ்சிபுரம்

கிரகம் நட் ராசி நட்அதி உப.நட் உஉ.நட் உஉஉ

லக்னம் மக சூரி கேது புதன் செ புதன்

சந்திரன் கே செ புதன் செ சனி செ

ஆளும் கிரகம் 18.05.2011 காலை மணி 6.52 சென்னை போரூர்

கிரகம் நட் ராசி நட்அதி உப.நட் உஉ.நட் உஉஉ

லக்னம் ரோ சுக் சந் புதன் ராகு சனி

சந்திரன் அனு செ சனி சூரி புதன் ராகு

ஜாதகர் கொடுத்த நேரத்திற்கு அருகிலே நேரதிருத்தம் செய்யவேண்டும், ஆளும்கிரத்தில் சந்திரன் நிலையில் உள்ள உபநட்சத்திரம், உபஉபநட்சத்திரம்,உபஉபஉப நட்சத்திர கிரகங்கள் ஜாதகர் பிறந்த லக்ன நிலையை குறிப்பிடும்.
அந்த கிரகங்கள் நிறைய வரும் படியாக நேரதிருத்தம் செய்வது சிறப்பு ஆகும்.

ஆளும் கிரகத்தில் சந்திரன் நிலையில் உள்ள உபநட்சத்திரம், உபஉப நட்சத்திரம்,உபஉபஉப நட்சத்திர கிரகங்களின் உப நட்சத்திரத்தில் உள்ள கிரகத்தியும் லக்னநிலையில் உபஉப நட்சத்திரமாகவோ அல்லது உபஉபஉப நட்சத்திரமாகவோ வர வைக்கலாம். சந்திரன் நிலையில் உள்ள இந்த மூன்று கிரகங்களை லக்ன நிலைக்கு கொண்டுவர நேரத்தை அதிகமாகவோ அல்லது குறைத்தாலோதான் வரும் என்றால் அப்பொழுது இந்த சூரியன்,புதன்,ராகு ஆகிய மூன்று கிரகங்களின் நட்சத்திரம்,உப நட்சத்திரத்தில் உள்ள கிரகங்களை லக்ன நிலையில் உபஉப நட்சத்திரமாகவோ அல்லது உபஉபஉப நட்சத்திரமாகவோ வர வைக்கலாம் என்பது முக்கியமான விதியாகும்.

சூரியன் உப நட்சத்திரத்தில் சுக்கிரனும்,ராகு நட்சத்திரத்தில் சுக்கிரனும் உள்ளார்,

புதனின் உப நட்சத்திரத்தில் சூரியன்,புதன்,குரு,சனி ஆகிய நான்கு கிரகங்கள் உள்ளன.

ஜாதகர் மகம் நட்சத்திரத்தில் புதனின் உப நட்சத்திரத்தில் பிறந்துள்ளார்.மகம் நட்சத்திரசந்தில் பிறந்துள்ளார்.மகம் நடசத்திரம் 4 நிமிடங்களில் முடிந்து பூரம் நட்சத்திரம் ஆரம்பம் ஆகபோகிறது.
ஜாதகர் பிறந்த நேரத்தை குறைந்து பார்போம்.

ஜாதகர் 1நிமிடம் குறைந்து 10 மணி 59 நிமிடம் என்று வைக்கும்பொழுது லக்ன உபஉப நட்சத்திரமாக சூரியன் வருகிறது.லக்ன 1,3,5,9,11ம் பாவங்களை தொடர்பு கொள்கிறது.ஜாதகர் ஒல்லியான உடல் வாகு இருக்கவேண்டும், தலையில் பிரச்சனை இல்லை என்று சொல்லும்பொழுது ஜாதகர் அதை மறுகிறார்.

ஜாதகர் பிறந்தநேரத்தை 01 நிமிடம் அதிகரிக்கும் பொழுது (11 மணி 01 நிமிடம்) லக்ன உபஉப நட்சத்திரமாக ராகு வருகிறது.லக்ன 1,7,10ம் பாவங்களை தொடர்பு கொள்கிறது.ஜாதகர் தலையில் பிரச்சனை இல்லை என்று சொல்லும்பொழுது ஜாதகர் இதையும் மறுகிறார்.

ஜாதகர் பிறந்தநேரத்தை 02 நிமிடம் அதிகரிக்கும் பொழுது (11 மணி 02 நிமிடம்)லக்ன உபஉப நட்சத்திரமாக குரு வருகிறது.லக்ன 1,7,10ம் பாவங்களை தொடர்பு கொள்கிறது.ஜாதகர் தலையில் பிரச்சனை இல்லை என்று சொல்லும்பொழுது ஜாதகர் இதையும் மறுகிறார்.

ஜாதகர் பிறந்தநேரத்தை 03 நிமிடம் அதிகரிக்கும் பொழுது (11 மணி 03 நிமிடம்) லக்ன உபஉப நட்சத்திரமாக சனி வருகிறது.லக்ன 1,7,10ம் பாவங்களை தொடர்பு கொள்கிறது.ஜாதகர் தலையில் பிரச்சனை இல்லை என்று சொல்லும்பொழுது ஜாதகர் இதையும் மறுகிறார்.
ஆக புதனின் உப நட்சத்திரத்தில் உள்ள கிரகங்களை வைக்கும் பொழுது வரும் லக்ன தொடர்பு கொண்டும் சொல்லும் பலன் ஜாதகருக்கு ஒன்றி வரவில்லை அதனால் புதனின் தவிர்த்து சூரியன்,ராகுவின் நட்சத்திர,உப நட்சத்திரத்தில் உள்ள கிரகங்களை கொண்டு நேரத்திருத்தம் செய்வோம்.

11 மணி 3 நிமிடத்திற்கு லக்ன நட்சத்திரம் மகம் (கேது)ஆகும்.கேதுவின் கடைசி உப நட்சத்திரம் புதன் ஆகும்.புதனின் கடைசி உபஉப நட்சத்திரம் சனி ஆகும்.ஆக அடுத்த 1நிமிடத்தை அதிகரிக்கும் பொழுது(11 மணி 04 நிமிடம்) சுக்கிரன் நட்சத்திரத்தில், சுக்கிரன் உபநட்சத்திரத்தில், சுக்கிரன் உபஉப நட்சத்திரத்தில் லக்ன வரும்.

சூரியன்,ராகுவின் ஏஜென்டாக சுக்கிரன் வருகிறார்.லக்ன தொடர்பு 2,4,6,8,12 என்று வருகிறது,ஜாதகருக்கு சுக்கிர தசையில் உடலில் பிரச்சனைகள் தோன்றியிருக்கும்,தலையில் பிரச்சனை இருக்கும் என்ற உடன் ஆமா என்று கூறினார்.

இவ்வாறாக ஆளும் கிரகத்தை பயன்படுத்துவதை மிகவும் எளிமையாகவும்,துல்லியமாகவும் சொல்லி கொடுக்கு ஜோதிட சக்கரவத்தி திரு.A. தேவராஜ் ஐயா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
 

Sunday, 25 June 2017

உயர்கணித சார ஜோதிடத்தில் காலதாமான திருமணம் யாருக்கு?அதற்கான பாவங்கள் யாவை?அதற்கான கிரக்காரகம் யாது? உதாரணை ஜாதகம் 3


வரிசை எண் 5263 பெயர் கோபண்ணா பிறந்த தேதி 25.03.1973 பிறந்த நேரம்  12.45.00 பிற்பகல் பிறந்த இடம் ஆற்காடு. பிறந்தநேரத்தை திருத்தி நேரம் 12.43.20 பிற்பகல் ஆளும் கிரகம் எடுத்த தேதி 28.06.2014 ஆளும் கிரகம் எடுத்த நேரம் 12.41.18 பிற்பகல் ஆளும் கிரகம் எடுத்த இடம் சென்னை,போரூர்.
விதி 1
லக்னம் கொடுப்பினை 7ஆம் பாவத்திற்க்கு சாதகமா அல்லது பாதகமா என்று பார்பது?
லக்ன உப நட்சத்திரமாக குரு இருந்து அவர் நின்ற நட்சத்திரம்,உப நட்சத்திரம் மூலமாக 4,8,10,12ம் பாவங்களை தொடர்பு கொண்டு12ம் பாவங்களில் உள்ள அகம் சார்ந்த விஷயங்களை ஜாதகர் அனுபவிப்பதற்கு எதிராக உள்ளது.
விதி 2
7ஆம் பாவம் தன்னுடைய பாவத்திற்க்கும் சாதகமான அல்லது பாதகமான பாவங்களை தொடர்புகொண்டுள்ளதா?
7ம் பாவ உப நட்சத்திரமாக குரு இருந்து அவர் நின்ற நட்சத்திரம்,உப நட்சத்திரம் மூலமாக 4,8,10,12ம் பாவங்களை தொடர்பு கொண்டு7ம் பாவத்தில் உள்ள அகம் சார்ந்த விஷயங்களை ஜாதகர் அனுபவிப்பதற்கு எதிராக உள்ளது.
விதி 3
7ஆம் பாவம் லக்ன பாவத்திற்க்கு சாதகமான அல்லது பாதகமான பாவங்களை தொடர்புகொண்டுள்ளதா?
7ம் பாவ உப நட்சத்திரமாக குருவாக இருந்து அவர் நின்ற நட்சத்திரம்,உப நட்சத்திரம் மூலமாக 4,8,10,12ம் பாவங்களை தொடர்பு கொண்டு 7ஆம் பாவம் லக்ன பாவத்திற்க்கு பாதகமான பாவங்களை தொடர்புகொண்டுள்ளது.இதனால் 7ம் பாவத்தில் உள்ள அகம் சார்ந்த விஷயங்களை ஜாதகர் அனுபவிப்பதற்கு எதிராக உள்ளது.

விதி 4
களத்திர காரகன் சுக்கிரன் 7ஆம் பாவத்திற்க்கு சாதகமான அல்லது பாதகமான பாவங்களை தொடர்புகொண்டுள்ளதா?
களத்திர காரகன் சுக்கிரன் 9,12ம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக இருந்து அவர் நின்ற நட்சத்திரம்,உப நட்சத்திரம் மூலமாக 2,4,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டு 7ஆம் பாவத்திற்கு பாதகமான பாவங்களை தொடர்புகொண்டுள்ளார்.இதனால் 7ம் பாவத்தில் உள்ள அகம் சார்ந்த விஷயங்களை ஜாதகர் அனுபவிப்பதற்கு எதிராக உள்ளது.
விதி 5
நடப்பு தசை மற்றும் புத்திகள் லக்னம் மற்றும் 7ஆம் பாவத்திற்கு சாதகமான அல்லது பாதகமான பாவங்களை தொடர்புகொண்டுள்ளதா?
ஜாதகருக்கு திருமணம் நடந்த தேதி 06.12.2009 அப்பொழது ஜாதகருக்கு வயது 36 வயது 8 மாதம் 11 நாட்கள் ஆகும். 20.01.2011யில் பெண் குழந்தை பிறக்கிறது.
சூரிய தசையில் சந்திர புத்தியில் ராகு அந்தரத்தில்,சந்திர சூட்சமத்தில் திருமணம் நடந்தது
சூரியன் 3,6ம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக இருந்து தான் நின்ற நட்சத்திரம் மலமாக 4,8,12ம் பாவங்களை தொடர்பு கொள்கிறது.4,8,12ம் பாவங்கள் என்பது சூரியன் கையில் உள்ள 3ம் பாவத்தை கெடுத்துக்கொண்டும் 6ம் பாவத்தை பலமாக வளர்த்துக்கொண்டும் இருக்கும்.
சூரிய தசையில் சந்திர புத்தியில் திருமணம் நடந்தது
சூரிய தசையில் சந்திர புத்தியில் சந்திர நின்ற நட்சத்திரம் சூரியன் ஆகும், சந்திரன் நின்ற உப நட்சத்திரம் சந்திரன் ஆகும்.
சந்திரன் 4,8,12ம் பாவங்களுக்கு ஆரம்ப முனை நட்சத்திரமாக உள்ளார். சந்திரன் நின்ற நட்சத்திரம் சூரியன் 3,6ம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாகவும் சந்திரன் நின்ற உப நட்சத்திரம் சந்திரன் 4,8,12ம் பாவங்களுக்கு ஆரம்ப முனை நட்சத்திரமாக உள்ளார்.சந்திரன் தொடர்பு 3,6ம் பாவங்கள் ஆகும்.
விதி 6
7ஆம் பாவ உபநட்சத்திர அதிபதி தான் நின்ற நட்சத்திரம் உபநட்சத்திரம் மூலமாக 6,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டால் 7ம் பாவம் 60 சதவீதம் பாதிப்பு அடைந்துள்ளது?
7ம் பாவ உப நட்சத்திரமாக குரு இருந்து அவர் நின்ற நட்சத்திரம்,உப நட்சத்திரம் மூலமாக 4,8,10,12ம் பாவங்களை தொடர்பு கொண்டு 7ம் பாவத்தில் உள்ள அகம் சார்ந்த விஷயங்களை ஜாதகர் அனுபவிப்பதற்கு எதிராக உள்ளது.
விதி 7
7ஆம் பாவ உபஉபநட்சத்திர அதிபதி தான் நின்ற நட்சத்திரம் உபநட்சத்திரம் மூலமாக 6,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டால் 7ம் பாவம் 25 சதவீதம் பாதிப்பு அடைந்துள்ளது?
7ம் பாவ உப உப நட்சத்திரமாக சுக்கிரன் இருந்து அவர் நின்ற நட்சத்திரம்,உப நட்சத்திரம் மூலமாக 2,4,8,10ம் பாவங்களை தொடர்பு கொண்டு 7ம் பாவத்தில் உள்ள அகம் சார்ந்த விஷயங்களை ஜாதகர் அனுபவிப்பதற்கு எதிராக உள்ளது.
விதி 8
7ஆம் பாவ ஆரம்பமுனை நட்சத்திர அதிபதி தான் நின்ற நட்சத்திரம் உபநட்சத்திரம் மூலமாக 6,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டால் 7ம் பாவம் 15 சதவீதம் பாதிப்பு அடைந்துள்ளது?
7ம் பாவ ஆரம்பமுனை நட்சத்திரமாக சுக்கிரன் இருந்து அவர் நின்ற நட்சத்திரம்,உப நட்சத்திரம் மூலமாக 2,4,8,10ம் பாவங்களை தொடர்பு கொண்டு 7ம் பாவத்தில் உள்ள அகம் சார்ந்த விஷயங்களை ஜாதகர் அனுபவிப்பதற்கு எதிராக உள்ளது.
விதி 9
7ம் பாவம் பாதிக்கபட்டுருக்கும் பொழுது 5ம் பாவம் தன்னுடைய பாவத்திற்கும், லக்னத்திற்கும் சாதகமான பாவங்களை கண்டிப்பாக தொடர்புக்கொண்டுடிருக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளபடுகிறது.ஏனெனில் 5ம் பாவத்தில் காதல் வயப்படுதல்,இன்ப உணர்வுகளை அதிகமாக நுகருதல்,எதையும் உணர்வு பூர்வமாக சிந்தித்தல்,ரசனை,சிற்றின்ம்பம் அதிகமான நாட்டம், உடலைசிறிதும் வருத்தாமல் இருத்தல்,கவர்ச்சிகளுக்கு எளிதில் மயங்குதல்,கற்பனை கலந்த உணர்வுகள், உல்லாசம்,சல்லாபம்,காமம்,தாம்பத்தியம்,கலை,தன்னை அழகுபடுத்திக்கொள்ளுதல், பொழுதுபோக்கு விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வது, ஹார்மோன், மயக்கம், மற்றவர்களிடம் மயங்குதல்,ஈர்ப்பு,விட்டுக்கொடுக்கும் குணம்,அரவணைக்கும் வாழ்க்கை,பாசம்,பாசம்,உணர்ச்சிவாய்படுதல் தமது செயல்களால் மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துதல்,கேளிக்கைகள்,சூதாட்டம்,சினிமா,நாடகம்,இசை,எதையும் அளவிற்கு அதிகமாக வர்ணணை செய்தல்,மென்மையான உணர்வுகள் போன்ற பல காரகங்களை தன்னிடத்தே கொண்டுள்ளது 5ம் பாவம் ஆகும்.
7ம் பாவம் பாவம் என்பது ஒருவருடன் இணைந்து செயல்படுவதை குறிக்கும்,ஜாதகர் ஸ்பரிச சுகத்தை மற்றொருவருக்கு கொடுத்து அவரிடம் இருந்து பெறுவதை குறிக்கும்.தம்மிடம் உள்ளதை மற்றவர்களிடம் பகிர்ந்துக்கொள்வதை குறிக்கும்.தனக்கு சமமானவர்களுடன் பழவதைகுறிக்கும்.
ஏனெனில் 7ம் பாவம் பாதிக்கபட்டுருக்கும் பொழது மேலே குறிப்பிட்டுள்ள 7ம் பாவ காரகத்தை ஒருவரல் அனுபவிப்பதில் பிரச்சனைகள் ஏற்படும் அதை ஈடுகட்டவே 5ம் பாவம் தன்னுடைய பாவத்திற்கும லக்னத்திற்கும சாதகமான பாவங்களை தொடர்பு கொண்டுயிருந்தால் ஜாதகருக்கு 7ம் பாவத்தால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து ஒரளவுக்கு மீளமுடியும்.
5ம் பாவ உப நட்சத்திரமாக குரு இருந்து அவர் நின்ற நட்சத்திரம்,உப நட்சத்திரம் மூலமாக 4,8,10,12ம் பாவங்களை தொடர்பு கொண்டு 5ம் பாவத்தில் உள்ள அகம் சார்ந்த விஷயங்களை ஜாதகர் அனுபவிப்பதற்கு எதிராக உள்ளது.
விதி 10
7ஆம் பாவ உபநட்சத்திர அதிபதி தான் நின்ற நட்சத்திரம் உபநட்சத்திரம் மூலமாக 6,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டால் 7ம் பாவம் 60 சதவீதம் பாதிப்பு அடைந்து ள்ளது?இவ்வாறு 7ம் பாவம் பாதிக்கபட்டுயிருக்கும் பொழுது,கண்டிப்பாக சுக்கிரன் 7ம் பாவம் தொடர்பு கொண்ட பாவங்களுக்கு 12ம் பாவங்களை தொடர்பு கொண்டால் தான் 7ம் பாவத்தில் உள்ள சுக்கிரனின் காரகங்களை முழுமையாக அனுபவிக்கமுடியும், 5,7,11ம் பாவங்களை தொடர்பு கொண்டுயிருக்கவேண்டும்.பாவம் என்பது புறம் சார்ந்தவையாகும்.கிரக காரகம் என்பது அகம் சார்ந்தவை ஆகும்.தெளிவாக சொல்வத னால் பாவம் என்பது பகல் பொழுதை குறிக்கும்.கிரக காரகம் என்பது இரவுபொழுதை குறிக்கும்.அதாவது பகல்யெல்லாம் சண்டைபோட்டாலும் தன்னுடைய காம சேவையை பூர்த்தி செய்துக்கொள்வதற்காகவாது இரவு நேரத்தில் விட்டுக்கொடுத்துபோவார்கள் என்பதற்காவே சுக்கிரன் 7ம் பாவம் தொடர்பு கொண்ட பாவங்களுக்கு 12ம் பாவங்களை தொடர்பு கொள்ளவேண்டும்.
சுக்கிரன்9,12ம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக இருந்து நின்ற நட்சத்திரம்,உப நட்சத்திரம் மூலமாக 2,4,8,10ம் பாவங்களை தொடர்பு கொண்டு 7ம் பாவத்தில் உள்ள அகம் சார்ந்த விஷயங்களை ஜாதகர் அனுபவிப்பதற்கு எதிராக உள்ளது.பொதுவாக உலகில் உள்ள அனைத்துவிதமான சிற்றின்பங்களுக்கு அதிபதியான சுக்கிரன் கடுமையாக பாதிக்கபட்டுள்ளது.
விதி 12
மதி என்ற தசை புத்தி விபரம்
7ம் பாவம் பாதிக்கபட்டுயிருந்து ஜாதகருக்கு பிறந்த முதலே நடக்கும் தசை இரட்டைப்படை பாவங்களை கொண்டு நடக்கும் பொழுது ஜாதகருக்கு காலதாமதமான திருமணம் நடக்கும்.அதுவும் 7ம் பாவத்திற்கு பாதகமானதுமான 2,6ஆம் பாவங்களை தொடர்பு கொண்டு தசை நடக்கும் பொழுது ஜாதகர் திருமணத்தை நிராகரிப்பார்,அதுவே லக்னத்திற் தீமையான 8,12 ஆம் பாவங்களை தொடர்பு கொண்டு தசை நடக்கும் பொழுது ஜாதகர் திருமண செய்துக்கொள்ள எவ்வளவு முயற்ச்சி செய்தாலும் மற்றவர்களால் ஜாதகர் நிராகரிக்கபடுவார். ஜாதகருக்கு திருமணம் காலதாமதம் ஆகிகொண்டேயிருக்கும்.சழூகத்தால் அசிங்கம்,அவமானங்களை சந்தித்துக் கொண்டுயிருப்பார்.
ஒற்றைப்படை பாவங்கள் தொடர்பு கொண்டு தசை நடக்கும் பொழுது தன்னுடைய அணியின் பாவங்களின் பலனை இரட்டிப்பு செய்து அந்த பாவ பலன்களை வலிமை யாகவும் நடந்தும், ஒற்றைப்படை பாவங்கள் தொடர்பு கொண்டு தசை நடக்கும் பொழுது அந்த தசையில் பொதுவாக இரட்டைப்படை பாவங்களின் பலன் சராசரி யளவே நடக்கும்,இரட்டைப்படை பாவங்கள் தொடர்பு கொண்டு தசை நடக்கும் பொழுது தன்னுடைய அணியின் பாவங்களின் பலனை இரட்டிப்பு செய்து அந்த பாவ பலன் களை வலிமையாகவும் நடந்தும், இரட்டைப்படை பாவங்கள் தொடர்பு கொண்டு தசை நடக்கும் பொழுது அந்த தசையில் பொதுவாக ஒற்றைப்படை பாவங்களின் பலன் சராசரியளவே நடக்கும்,
ஜாதகருக்கு திருமணம் நடந்த தேதி 06.12.2009 அப்பொழது ஜாதகருக்கு வயது 36 வயது 8 மாதம் 11 நாட்கள் ஆகும்.ஜாதகருக்கு 16 வயது முதல் சுக்கிர தசை நடக்கிறது.
சுக்கிரன்9,12ம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாகவும்,1,2,7ம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாகவும்,3,7,11ம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாகவும் உள்ளார், சுக்கிரன் நின்ற நட்சத்திரம்,உப நட்சத்திரம் மூலமாக 2,4,8,10ம் பாவங்களை தொடர்பு கொள்கிறார்.
சுக்கிரன் தொடர்பு கொண்டுள்ள 2,4,8,10ம் பாவங்கள் சுக்கிரன் கையில் உள்ள 12,2ம் பாவங்களுக்கு சாதகமாகவும் பாவங்களாக உள்ளதால் 2,12ம் பாவங்கள் வலிமைபெறும்,சுக்கிரன் கையில் உள்ள 1,3,7,9,11ம் பாவங்களில் உள்ள அகம் சார்ந்த விஷயங்களை கெடுத்துக்கொண்டு அந்த பாவங்களில் உள்ள புறம் சார்ந்த காரகங்களை ஜாதகர் அனுபவிப்பார்.
சுக்கிரன் 7ம் பாவத்திற்கு உபஉப நட்சத்திரமாகவும்,7ம் பாவத்திற்கு ஆரம்பமுனை நட்சத்திரமாகவும் ,இருந்து2,4,8,10ம் பாவங்களை தொடர்பு கொண்டுள்ளதால் 7ம் பாவத்தின் விதி கொடுப்பினை பாதிக்கபட்டுள்ளது.அந்த விதிக்கொடுப்பினையே மதி என்ற தசையாதக ஜாதகருக்கு 16 வயதில் இருந்து நடந்தால் ஜாதகருக்கு சுக்கிர தசையில் திருமணம் நடக்கவில்லை என்பது தெளிவாகிறது.
ஒரு பாவத்தில் உள்ள காரக கிரகம் அந்த பாவத்திற்கே உப நட்சத்திரமாகவோ அல்லது உபஉப நட்சத்திரமாகவோ அல்லது ஆரம்பமுனை நட்சத்திரமாகவோ இருந்து அந்த பாவத்திற்கு 8,12ம் பாவங்களையோ அல்லது லக்னத்திற்கு 8,12ம் பாவங்களையோ தொடர்பு கொண்டால் அந்த பாவ காரகங்களை ஜாதகர் அனுபவிப்பதற்கு முழுமையாக மறுக்கும்.இதுவே காரகோபாவநாசி என்று கூறுவர்.
7ம் பாவத்தில் உள்ள அகம் சார்ந்த விஷயங்களை ஜாதகர் அனுபவிப்பதற்கு எதிராக உள்ளது.பொதுவாக உலகில் உள்ள அனைத்துவிதமான சிற்றின்பங்களுக்கு அதிபதியான சுக்கிரன் கடுமையாக பாதிக்கபட்டுள்ளது.
விதி 13
7ம் பாவம்,5ம் பாவம்,1ம் பாவம்,சுக்கிரன்,நடப்பு தசைகள் 7ம் பாவத்திற்கு பாதகமாக இருந்து இரண்டு புத்திகள் வலிமையாக ஒற்றைப்படை பாவங்களை தொடர்பு கொண்டு நடந்தாலும் ஜாதகருக்கு திருமணம் நடக்காது.
ஜாதகர் நகரத்தில் வசித்தால் ஆணாக இருந்தால் 40 வயிதிற்கு மேலும் திருமணம் நடக்கும்.
ஜாதகர் நகரத்தில் வசித்தால் பெண்ணாக இருந்தால் 35 வயிதிற்கு மேலும் திருமணம் நடக்கும்.
ஜாதகர் கிராமத்தில் வசித்தால் ஆணாக இருந்தால் 35 வயிதிற்கு மேலும் திருமணம் நடக்கும்.
ஜாதகர் கிராமத்தில் வசித்தால் பெண்ணாக இருந்தால் 30 வயிதிற்கு மேலும் திருமணம் நடக்கும்.
ஆனால் திருமண வாழ்க்கையில் பிரச்சனைக்குரிதாக இருக்கும்.
ஜாதகருக்கு திருமணம் நடந்த தேதி 06.12.2009 அப்பொழது ஜாதகருக்கு வயது 36 வயது 8 மாதம் 11 நாட்கள் ஆகும்.ஜாதகருக்கு 16 வயது முதல் சுக்கிர தசை நடக்கிறது.
விதி 16
7ஆம் பாவ உபநட்சத்திர அதிபதி தான் நின்ற நட்சத்திரம் உபநட்சத்திரம் மூலமாக 6,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டால் 7ம் பாவம் 60 சதவீதம் பாதிப்பு அடையும்.
ஒரு பாவத்தை உடனே துண்டிக்கும் அதனுடைய 12ம் பாவம் வலிமையை பொறுத்து, ஆய்வுக்குரிய பாவத்தின் பாதிப்பின் தன்மையை ஆராய வேண்டும்.
ஆய்வுக்குரிய பாவம் பாதிக்கபட்டுள்ள போது அந்த பாவத்தின் 8,12ம் பாவங்கள் வலிமையாக இருக்ககூடாது என்பது சிறப்புவிதியாகும்.
இதன்பொருள் ஒரு பாவம் வலிமையாக இருக்கும்பொழது அது தன்னுடைபாவத்திற்கு 2,6ம் பாவங்களை பாதிக்கும் செயலை செய்யும்.
6ம் பாவம் 4,6,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டுயிருக்கு பொழுது 6ம் பாவ தசையில் 6ம் பாவம் தன்னுடைய பாவத்திற்கு 2,6ம் பாவங்களான 7,11(7,11ம் பாவங்களுக்கு 8,12ம் பாவங்களாக 6ம் பாவம் வரும்)அதனால் 7,11ம் பாவங்களை கெடுக்கும் வேளையை செய்யும்.
ஏற்கனவே 7ம் பாவம் பாதிக்கபட்டுள்ளபொழுது 6ம் பாவம் வலிமையாகயிருக்கும் பொழுது 7ம் பாவத்தின் மீது கூடுதலாக பாதிப்பை 6ம் பாவம் தரும்.
இந்த ஜாதகத்தில் 3,6ம் பாவங்களுக்கு சூரியன் உப நட்சத்திரமாக இருந்து நின்ற நட்சத்திரம் மற்றும் உப நட்சத்திரம் மூலமாக  8,4,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டுள்ளது.சூரியன் தன்னுடைய கையில் உள்ள 3ம் பாவத்தில் அகம் சார்ந்த காரகங்களுக்கு முழுமையான தீங்கையும்,3ம் பாவத்தில் உள்ள புறம் சார்ந்த காரகங்களான தைரியம்,பராகர்மம்,அகன்ற தோள்பட்டைகள், கைகள் மூலமாக தாக்குதல் தொடுத்தல் போன்ற பலவற்றை 8,4,8,12ம் பாவங்கள் என்பது பெரியளவில் வளர்க்கும்,சூரியன் வைத்துள்ள மற்றொரு பாவமான6ம் பாவத்திற்கு 8,4,8,12ம் பாவங்கள் பரிமாணபாவங்களாக இருப்பதால் 6ம் பாவத்தில் உள்ள அகம் சார்ந்த விஷயங்களில் ஜாதகருக்கு முழுமையான தீங்கை தரும்,புறம் சார்ந்த காரகங்களான வேளையில் பிரச்சனைகள்,குறைந்தபட்ச ஊதியம்,வழக்கு,கடன்,எதிரிகள் ஏற்படும், ஜாதகர் யாருமனும் இணைந்து வாழமாட்டார்.

சூரிய தசை ஜாதகருக்கு 36 வயதி முதல் நடந்தது. ஜாதகருக்கு திருமணம் நடந்த தேதி 06.12.2009 அப்பொழது ஜாதகருக்கு வயது 36 வயது 8 மாதம் 11 நாட்கள் ஆகும்.ஜாதகருக்கு சூரிய தசையில் சந்திர புத்தில் ராகு அந்திரத்தில் திருமணம் நடந்த்து.ஜாதகரின் விதிக்கொடுப்பினையும் பாதிக்கபட்டு,சுக்கிரனும் பாதிக்கபட்டு,1ம் பாவமும் பாதிக்கபட்டு இருந்து நடப்பு தசையும் முழுமையாக பாதிக்கபட்டுயிருந்தால் ஜாதகரால் திருமண வாழ்க்கை ஒன்றரை ஆண்டுகள் மேல் வாழ்முடியவில்லை 2011ஆண்டு முதல் இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள்.
விதி 21
1,3,5,7,9,11ம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக இருந்து 4,6,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டுயிருக்கும்பொழுது 1ம் பாவம் என்பது ஜாதகர் அனுபவிக்கும் ஒட்டுமொத்த இன்பத்தை குறிக்கும்,3ம் பாவம் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மற்றவர்களுடன் வளைந்து கொடுத்தல்,விட்டுகொடுத்தல்,அப்கிரேடு,5ம் பாவம் என்பது ஜாதகரின் பொழுதுபோக்கு விஷயத்தில் ஈடுபாட்டை குறிக்கும்,சிற்றின்பத்தை குறிக்கும்,ரசனை,காதல், உல்லாச, சல்லாபத்தை குறிக்கும்,7ம் பாவம் மற்றவர்களுடன் இணைந்து செயல்படுதல், பரிமாறிக்கொள்வது,ஸ்பரிச சுகத்தை நாம் மற்றவர்களுக்கு கொடுத்து அவரிடம் பெறுதலை குறிக்கும்,9ம் பாவம் என்பது தெய்வ அனுகிரகத்தையும்,இரண்டாவதாக ஒரு பெண்ணுடன் உள்ள தொடர்பை குறிக்கும், 11ம் பாவம் என்பது திருப்தி, நண்பர்கள்,கேளிகை,உல்லாசத்தை குறிக்கும் இந்த பாவங்கள் இரட்டைப்படை பாவங்களை தொடர்பு கொள்ளும்பொழுது இந்த பாவங்களில் உள்ள அகம் சார்ந்த காரகங்களை கெடுத்துக்கொண்டு புறந்த சார்ந்த காரங்களையில் ஜாதகர் அதிகமாக ஈடுபடுவார்.
இந்த ஜாதகத்தில் 1,3,5,7,9,11ம் பாவங்கள் முழுமையாக பாதிக்கபட்டதால் ஜாதகரின் திருமண வாழ்க்கை துன்பங்கள் நிறைந்த்தாகவே இருந்தது. ஒன்றரை ஆண்டுகள் மேல் வாழ்முடியவில்லை 2011ஆண்டு முதல் இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள்.
விதி 23
7ம் பாவத்தின் உப நட்சத்திரம், உப உப நட்சத்திரம்,7ம் பாவத்தின் ஆரம்பமுனை நட்சத்திரம் மூன்று 6,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டுயிருந்தால்,7ம் பாவம் 100 சதவீதம் பாதிக்பட்டுள்ளது.7ம் பாவத்திற்கு சாதகமான ஒற்றைப்படை பாவ தசை நடந்தாலும் 35 வயதிற்கு மேலே திருமணம் நடக்கும்.விதிக்கொடுப்பினை மறுத்த விஷயத்தை தசையால் கொடுக்கமுடியாது. ஜாதகரால் சரியான பருவத்தில் அனுபவிக்கமுடியாது.விதிக்கொடுப்பினை மறுத்த விஷயத்தை மதி என்ற தசையால் ஒரளவிற்கே அனுபவிக்க முடியுமே ஒழிய நீண்ட காலத்திற்கு பிற பாவ விளைவு மூலமாகவும்,தசை மூலமாகவும் அனுபவிக்க முடியாது.
இந்த ஜாதகத்தில் 7ம் பாவம் 100 சதவீதம் முழுமையாக பாதிக்கபட்டுள்ளதால் ஜாதகருக்கு 36 வயிதில் திருமணம் ஆயிற்று ஆனால் அவரால் ஒன்றரை ஆண்டுகள் மேல் அவருடைய வாழ்க்கை துணையோடு இணைந்து வாழமுடியவில்லை.


Monday, 5 June 2017

இராணுவம்,போலீஸ்,தீவிரவாதமும் மற்றும் ரவுடிசமும்,தர்மத்துக்கு புறம்பாக செயல்படுவர்களை செயல்படுத்தும் பாவங்கள் யாது? பகுதி 2

இராணுவம்,போலீஸ்,தீவிரவாதமும் மற்றும் ரவுடிசமும்,தர்மத்துக்கு புறம்பாக செயல்படுவர்களை செயல்படுத்தும் பாவங்கள் யாது? பகுதி 2


ஒரு ஜாதகத்தில் ஏற்படும் பாதிப்புகளை பற்றிய முழுமையான உயர்கணித சார ஜோதிட விதிகளை பார்போம்.


ஜாதகத்தில் 4,8,12ம் பாவங்களே ஜாதகருக்கு முழுமையான தீமையை தரும்.

1ம் பாவம் என்பது சுய அறிவு,சுயசிந்தனை குறிக்கும்.

5ம் பாவம் என்பது ஒரு பிரச்சனை வந்த பிறகு அதில் இருந்தும் மீளும் அறிவை குறிக்கும்,ஆழ்ந்த அறிவு,ஸ்பெஷல் அறிவு(பண்முகம் தன்மை கொண்ட அறிவு) குறிக்கும்.

9ம் பாவம் என்பது ஒரு பிரச்சனை வருவதற்கு முன்னாலே அதை பற்றி முழுமையாக ஆய்வு செய்து செயல்படுவதை குறிக்கும்.


இந்த மூன்று பாவங்களுக்கு 4,8,12ம் பாவங்கள் முழுமையாக பாதிப்பை தரும்.ஒரு மனிதனின் சிந்தனையில் ஏற்படும் மாற்றமே அனைத்துவிதமான பிரச்சனைகளுக்கும் மூல கரகமாக அமைகிறது என்று மனநல மருத்துவம் கூறுகிறது.


உதாரணமாக குடிகாரகளை பற்றி மன நல மருத்துவம் கூறுவதை பார்ப்போம்.மூளையில் உள்ள ஒரு அமிலத்தில் ஏற்படும் ஏற்ற தாழ்வே அவர் மிகபெரிய குடிகாராக இருப்பதற்கு காரணம் என்று கூறுகிறது.சுய அறிவும்,சுயமாக சிந்திக்கும் குணம் உள்ளவர்கள் (தன்னுடைய கட்டுபாட்டியில் இருப்பவர்கள்) குடிபழகத்திற்கு அடிமையாகமாட்டார்கள்.சுய அறிவை இழந்து,தன்னை மறந்த நிலையில் ஆடைகள் இல்லாமல் நடுரோட்டில் மயக்கத்தில் இருப்பதை லக்னம் பாதிப்பால் வரும் பாதிப்பாக நான் பார்க்கிறேன்.


நடுரோட்டில் விழந்துயிருக்கும் ஜாதகரின் சுய அறிவு,சுய கௌரவம் முழுமையாக பாதிப்புயடைக்கிறது என்பதை இதன் மூலமாக நாம் அறியலாம்.
நம் உடலில் இயக்கத்திற்கு முழுமையான காரணங்களாக இருப்பதது,பல்வேறு அமிலங்கள், வேதிபொருட்கள்,உமிழ் நீர்சுரப்பிகள், நாளமில்லா சுரப்பிகள் இன்னும் பல உள்ளன இவற்றில் ஏற்படும் ஏற்றதாழ்வுகளால் ஒவ்வொரு மனிதனின் குணநலங்கள்,உடல் நலன்களின் மாற்றம் வருகிறது என்று மருத்துவம் கூறுகிறது.


உடலின் சமநிலையை,சழூகம்,வாடிக்கையாளர்கள், வாழ்க்கை துணையை குறிக்கும் 7ம் பாவம் பாதிப்பு அடைவதால் இந்த மாதிரியான பிரச்சனைகள் வருவதற்கு காரணமாகிறது.சழூகத்தின் மீது வரும் கோபத்தினாலே தீவிரவாதிகள், சழூகவிரோதிகள் உருவாகிறார்கள் என்பது இதன் மூலமாக விளங்கிறது.



4,8,12ம் பாவங்களுக்கு 6ம் பாவம் 3,7,11ம் பாவங்களாக வருகிறது, அதிலும் குறிப்பாக 4ம் பாவத்திற்கு 3ம் பாவமாக 6ம் பாவம் வருவதால் 4ம் பாவ காரகங்களை 100 சதவீதம் வளர்க்கும் பாவம் 6ம் ஆகும்.


அதே நேரத்தில் 6ம் பாவத்திற்கு 4ம் பாவம் 11ம் பாவமாக வருவதால் 6ம் பாவ காரகங்களை 4ம் பாவம் 200 சதவீதம் வளர்க்கும்.


6ம் பாவத்திற்கு 3ம் பாவமாக 8ம் பாவம் வருவதால் 6ம் பாவத்தின் காரகங்களை 8ம் பாவம் அடுத்த பரிணாம நிலைக்குகொண்டு செல்லும்.


8ம் பாவத்திற்கு 6ம் பாவம் 11ம் பாவமாக வருவதால் 8ம் பாவ காரகங்களை 6ம் பாவம் 200 சதவீதம் வளர்க்கும்.


4,8,12ம் பாவங்கள் ஒரே திரிகோணங்கள் என்பதால் 4ம் பாவத்தை விட 8ம் பாவ தன்மை வலிமையானது ஆகும்,8ம் பாவத்தை விட 12ம் பாவம் வலிமையானது ஆகும்.ஒரு திரிகோணத்தை விட மற்றொரு திரிகோணம் வலிமையானது ஆகும்.திரிகோண பாவங்கள் ஒரே தன்மைய உடையது ஆகும்.
4,8,12ம் பாவங்கள் 4,8,12ம் பாவங்களை தொடர்பு கொள்வது பெரும் தீமையை தரும்.



4,8,12ம் பாவங்கள் 4,6,8,12ம் பாவங்களை தொடர்பு கொள்வதும் இன்னும் தீமையை அதிகரிக்கும்.



4,8,12ம் பாவங்கள் ஒரு ஜாதகத்தில் வலிமை யடைந்து  இருக்கும்  பொழுது 1,5,9ம் பாவங்களுக்கு எதிராகவே ஜாதகரின் செயல்பாடு இருக்கும். ஜாதகரின் குணநலங்கள் சராசரி மனிதர்களின் குணநலன்களில் இருந்து முழுமையாக மாறுபட்டது இருக்கும்.


4,8,12ம் பாவங்கள் ஒரு ஜாதகத்தில் 4,6,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டுயிருக்கும் பொழுது,1,5,6,9ம் பாவங்களும் 4,6,8,12ம் பாவங்களை தொடர்பு கொள்ளும்பொழுது இன்னும் சிந்தனையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு பெரும் தீங்கை ஏற்படுத்தும்.


எந்த ஒரு பாவமும் தனித்து செயல்படாது,மற்ற பாவங்களோடு இணைந்து செயல்படும் பொழுதே வலிமையாக நன்மையோ அல்லது தீங்கையோ செய்ய முடியும்.


திரிகோண பாவங்கள் ஒரே தன்மை வாய்தவை அவைகளால் ஒரு குறிப்பிட்ட அளவிற்க்கு மேலாக வலிமையாக செயல்பட முடியாது.ஆனால் பரிமாண பாவங்கள் என்பது இரண்டு திரிகோணங்களை சார்ந்தவை என்பதால் அவற்றை உடைப்பதற்கு இன்னுயொரு பரிமாண பாவங்களே முடியும்,


அதனால் பரிமாண பாவங்களுக்கு ஒரு கிரகம் உப நட்சத்திரமாக வந்து தான் நின்ற நட்சத்திரம்,உப நட்சத்திரம் மூலமாக தன்னுடைய பாவங்களுக்கு சாதகமான பாவங்களை தொடர்பு கொள்ளும்போது அந்த கிரகம் அதிகபடியாக வலிமை செயல்படும்.



6,8க்கு ஒரே கிரகம் உபநட்சத்திரம்மாக இருந்து 6,8,12ம் பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது ஏற்படும் பாதிப்பு அதிகமாக இருக்கும்.


6,12க்கு ஒரே கிரகம் உபநட்சத்திரம்மாக இருந்து 6,8,12ம் பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது ஏற்படும் பாதிப்பு அதிகமாக இருக்கும்.


8,12க்கு ஒரே கிரகம் உபநட்சத்திரம்மாக இருந்து 6,8,12ம் பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது ஏற்படும் பாதிப்பு அதிகமாக இருக்கும்.


6,8,12ம் உப நட்சத்திரம்மாக ஒரே கிரகமே இருந்து 4,6,8,12ம் பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது ஏற்படும் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கும்.


4,6,8,12ம் உப நட்சத்திரம்மாக செவ்வாய்,ராகு,கேது, சனி போன்ற இயற்க்கை பாவிகள் இருந்து அவர்கள் நின்ற நட்சத்திரம்,உப நட்சத்திரமாக செவ்வாய், ராகு, கேது,சனி இருந்து 4,6,8,12ம் பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது ஏற்படும் பாதிப்பு மிகவும் மோசமான பாதிப்பை தரும்.


ஒரு கிரகம் தன்னுள்ளாக 12ம் பாவ காரகங்களை வைத்துள்ளது.ஒரு பாவ உப நட்சத்திரமாக உள்ள ஒரு கிரகம் அந்த பாவத்தில் உள்ள தன்னுடைய காரகம் மற்றும் அந்த பாவ காரகத்தை முன்னுறுத்தி தான் நின்ற நட்சத்திரம்,உப நட்சத்திரம் கிரகங்களின் பாவ காரகங்கள் மூலமாக தன்னுடைய பாவ காரகத்திற்கு சாதகமாக வளர்த்துக்கொண்டோ அல்லது,பாதகமாக தன்னுடைய பாவ காரகத்தை கெடுத்துக்கொண்டோ அல்லது தன்னுடைய பாவ காரகத்தை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு வளர்த்து பிறகு துண்டித்துக்கொண்டு நடுநிலை பலனை செய்வார்.


இந்த விதி படி உதாரணமாக 6ம் பாவம் 8ம் பாவத்தை தொடர்பு கொள்வதாக கொள்வோம்,6ம் பாவத்தில் உள்ள மறைமுக எதிரிகள்,பகை என்ற காரகத்தை முன்னுறுத்தி 8ம் பாவத்தை தொடர்பு கொள்ளும் பொழுது 8ம் பாவ காரகங்களாக 6ம் பாவம் மாறி தன்னுடைய காரகத்தை செயல்படுத்தும், தாக்கபடுதல்,கொலை செய்யபடுதல், எதிர்பாராத வகையில் ஏற்படும் விபத்து, அசிங்கம்,அவமானம், வலி, வேதனை ஏற்படும்.



6ம் பாவத்தில் உள்ள கடன் என்ற காரகம் 8ம் பாவத்தை தொடர்பு கொள்ளும் பொழுது 8ம் பாவ காரகமான பெரும் கடனாக மாறும்.



6ம் பாவம் 4ம் பாவத்தை தொடர்பு கொள்ளும் பொழுது சொத்துக்களின் மூலமாக வங்கியில் குறைந்த வட்டிக்கு கடன் கிடைப்பதை குறிக்கும்.


6ம் பாவம் தன்னுடைய காரகத்தை தொடர்பு கொண்ட பாவ காரகங்களாக மாறி செயல்படுகிறது என்பதை பார்தோம்.


6ம் பாவ உப நட்சத்திர கிரகம் இயற்கை பாவிகளான செவ்வாய்,ராகு,கேது,சனி போன்றவற்றில் ஒரு கிரகமாக இருந்து அவர் நின்ற நட்சத்திரம், உப நட்சத்திரம் கிரகங்கள் செவ்வாய்,ராகு,கேது,சனி இவற்றில் இருந்தால் மேற் கண்ட பாதிப்புக்களின் கொடூர தன்மை,அருஅருப்பாக இருத்தல், நமைபெறும் சம்பவங்கள் பாயங்கரமாக இருக்கும்.


இதுபோலதான் ஒரு பாவத்தினால் ஏற்படும் நன்மை அல்லது தீமை அளவீட படுகிறது.


ஒரு பாவத்தின் நன்மையோ அல்லது தீமையோ ஜாதகர் முழுமையாக அனுபவிப்பதற்கு அந்த கிரகத்தின் தசை வரவேண்டும்.ஒரு தசையில் நடக்கும் சம்பவங்களே நீண்ட காலத்திற்கு ஜாதகர் அனுபவிக்கும் சம்பவங்களாக இருக்கிறது.


இதை உதாரணம் மூலமாக பார்போம் முன்னாள் தமிழக முதல்வர் அம்மா அவர்கள் இறந்தபோது நடைபெற்ற தசை குரு ஆகும்.நமைபெற்ற புத்தி சனி ஆகும்.சனி கிரகமே அம்மா அவர்கள் இறப்பதற்கு காரணம் என்றால் சனி ஏன் ராகு தசை,செவ்வாய் தசை,சந்திர தசை போன்ற தசைகளில் தன்னுடைய புத்தியில் மரணத்தை தரவில்லை என்பதை யோசிக்கும் பொழுது தசை நாதன் சொல்லும் வேளைகளைதான் புத்திநாதன் செய்கிறார்கள் என்பது தெளிவாகிறது.



மற்றுயொரு உதாரணம் அமெரிக்கா வரலாற்றிலே அதிபர் ஒருவர்க்கு 70 வயிதிற்கு மேல் உள்ளவராக டிரம்ப் அவர்கள் வந்துள்ளார்.அவர் அதிபராக வந்த்துக்கு இப்பொழுது நடைபெற்ற புத்தி என்றால் இதுவரைக்கு பல தசைகளில் அந்த புத்திநாதன் ஏன் இவரை அதிபராக ஆக்கவில்லை என்று யோசிக்கும் பொழுது புரிகிறது.



ஒரு கிரகம் ஒரே பலனை செய்யும் என்றால் ஒரு ஜாதகரின் வாழ்க்கையில் எல்லா தசையிலும் ஒரே பலனை அந்த கிரகம் செய்வில்லை என்பதை ஆழ்ந்து சிந்திக்கவேண்டும்.அப்பொழுது தசைக்கு ஏற்ப புத்திநாதன் தன்னுடைய செயல்பாட்டை மாற்றிக்கொள்கிறது என்பது இதன் மூலமாக நமக்கு புலன் ஆகிறது.


தீவரவாத்தில் ஈடுபடுவர்கள்,கட்டபஞ்சாய்த்தில் ஈடுபடுவர்கள் ஆயுளை ஆராய்யும் பொழுது அற்ப ஆயுளாகவே உள்ளது.யாரும் 45 வயதை தாண்டவில்லை.கத்தி எடுத்தவனுக்கு கத்தியாலே மரணம் வரும் என்ற தமிழ்யில் ஒரு பழமொழி உள்ளது.


மேற்கண்ட ஆய்வின்படி 4,8,12ம் பாவங்கள் 4,8,12ம் பாவங்களை தொடர்பு கொள்வதாலும்,1,5,6,9ம் பாவங்கள் 4,8,12ம் பாவங்களோ அல்லது 4,6,8,12ம் பாவங்களை தொடர்பு கொள்வதாலே திடீரென ஏற்படும் மாற்றத்தாலே சட்ட விரோத அமைப்புகளில் இணைவதும் அதனாலே மறைந்து வாழ்தல்,உடல் சிதைக்கபட்டு இறத்தல், மற்றும் அற்ப ஆயுள் ஏற்படுகிறது என்பது புலன் ஆகிறது.



பகுதி 2 முடிவுற்றது பகுதி 3 தொடரும்

Saturday, 3 June 2017

இராணுவம்,போலீஸ்,தீவிரவாதமும் மற்றும் ரவுடிசமும்,தர்மத்துக்கு புறம்பாக செயல்படுவர்களை செயல்படுத்தும் பாவங்கள் யாது? பகுதி 1

இராணுவம்,போலீஸ்,தீவிரவாதமும் மற்றும் ரவுடிசமும்,தர்மத்துக்கு புறம்பாக செயல்படுவர்களை செயல்படுத்தும் பாவங்கள் யாது? பகுதி 1
8ம் பாவம் தர்மத்துக்கு புறம்பாக செயல்படுவதை நியாபடுத்துவது,சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவது, தன்னுடைய இன, மதம் சார்பாக சட்டங்களை கடுமையாக பின்பற்றுமாறு தன்னுடைய மக்களை துன்புறுத்துவது, மற்றவர்களின் மீது அதிகமாக கட்டுபாடுகளை விதிப்பது, மற்றவர்களின் சுதந்தரத்தை நசுக்குவது, மற்றவர்களின் பேச்சு சுதந்திரத்தை மறுபது, மற்றவர்களின் உரிமைகளை பரிப்பது,மற்றவர்களின் மீது அத்துமீறல்கள் செய்வது, மற்றவர்களை துன்புறுத்துவது,பொது மக்கள் முன்னிலையில் கொடூரமான முறையில் கொலைகள் செய்வது அவற்றை சழூக வளைதளங்களில் வெளியீடுவது, தன்னுடைய கொள்கைக்கு எதிரானவர்களை பொது இடத்தில் கொலை செய்வது அதன் மூலமாக மற்றவர்களை பயமுறுத்துவது, மற்றவர்களை சித்திரவதை செய்வது, அசட்டு தைரியத்தை தருவது, ஒரு மதத்துக்கு உள்ளே உள்ள பிரிவினர்கள் தாக்கிக்கொள்வது, இவர்கள் வழிபாட்டு தலத்திற்கு மற்றொரு பிரிவினர் தாக்குவது,ஒரு மத பிரிவினர் வேறுயொரு மத பிரிவினரை தாக்குவது, அவர்களுடைய வழிபாட்டு தலத்தை அழிப்பது,
9ம் பாவம் இயற்க்கையை குறிக்கும் இயற்க்கைக்கு மாறாக குண்டு வைத்து பொது மக்களை கும்பலாக கொல்வதை 8ம் பாவம் குறிக்கும்,பொதுமக்களின் மீது கண்மூடிதனமான துப்பாக்கியால் சுட்டு கொல்வதை குறிக்கும், மற்றவர்களின் உடமைகளை கைபற்றுவது, தன்னுடைய இன,மொழி, மதம் சார்பாக மக்களை திசை திருப்பது,மற்ற இன,மத மக்களுக்கு எதிராக தாக்குதல் தொடுப்பது. தன்னுடைய கொள்கைக்காக மற்றவர்களை மூளை சலவை செய்வது,தீடிரென எழச்சி பெறுவது,தீடிரென வீழச்சி பெறுவது,அற்ப ஆயுள்,இயற்க்கைக்கு மாறான மரணம்,கடுமையான வேதனைகள் அடைந்து மரணம் அடைவது,உடலை விட்டு உடனே உயிர் பிரியாது, உடல் சிதைக்கபட்டு மரணம் அடைவது, சித்திரவதை செய்படுதல்,தலைமறைவாக வாழ்தல்,கடவுள் அருள் இல்லாதவர்கள்,கடவுளால் தண்டிக்கபட்டவர்கள், உண்மையான மத கொள்கை இல்லாதவர்கள்,



8ம் பாவம் என்பது 1,5,9ம் பாவத்திற்கு 4,8,12ம் பாவங்களாக வருவதால் லக்னம் என்ற ஜாதகருக்கு இவருடைய செயல்களால் பிரச்சனைகள் ஏற்படுவது,ஜாதகர் ஏற்படும் அனைத்துவித துன்பங்களுக்கும், வலி,வேதனைகள்,பிரச்சனைகள் அவற்றுக்கு மூல காரணமாக ஜாதகரே காரணமாக இருப்பார்.திருமணம் செய்து கொள்வது இல்லை,குழந்தை இல்லை,தன்னுடைய குடும்பத்தை விட்டு வெளியேறுதல்,அன்பு,பாசம் இல்லாதவர்கள், எல்லோருக்கும் உள்ள பொதுவான கருத்திலிருந்து அல்லது சிந்தனையிலிருந்து மாறுபட்டு வித்தியாசமான கருத்துக்களை அல்லது சிந்தனைகளை கொண்டிருப்பது.மேற்கண்ட சிந்தனைகளை அர்த்த முள்ளதாக மாற்றுவது. ஒருவருடைய வீழ்ச்சியை தனக்கு சாதகமாக்கி கொண்டு தன்னை வளர்த்துக்கொள்வது, ஜாதகர் தன்னுடைய வலியையும், வேதனைகளையும், எதிர்மறையான சம்பவங்களையும் அனுபவங்களாகக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறுதல். சட்ட விரோத நடவடிக்கை மூலம் தனது பொருளாதாரத்தை உயர்த்தி கொள்வது, பாவ புண்ணியத்தினை கருத்தில் கொள்ளாமல் தனது கொள்கையில் உறுதியாக இருத்தல்,உயிருக்கும் உடலுக்கும்ஆபத்தான விஷயங்களில் ஈடுபட்டு அதன் மூலம் பொருளாதாரத்தினை பொருளாதாரத் தினை உயர்த்துவது,இறந்தவர்களின் பணம்,சொத்து, தொழில், மற்றவர்களை நிர்பந்தபடுத்தி தனது பொருளாதாரத்தை உயர்த்தி கொள்வது.

பகுதி 1 முடிவுற்றது தொடரும்