Sunday, 13 November 2016

உடல்கூறியில் 3ம் பாவத்தின் முக்கியத்துவம் இரண்டாம் பதிப்பு



உடல்கூறியில் 3ம் பாவத்தின் முக்கியத்துவம்


                                                       இரண்டாம் பதிப்பு




3ம் பாவம் 3,7,11 அல்லது 1,5,9ம் பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது வளைய கூடிய தன்மை,தளர்ச்சியாக அதாவது நெகழ்வு தன்மையை அதிகமாக இருக்கும். தலைசுற்றுதல் இருக்காது.வேகம் மத்திம்மாக இருக்கும்,ஓட்டம் ஒரே சீராக இருக்கும்.




3ம் பாவம் 6,8,12 பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது ஜாதகர் உணர்வுகளை கட்டுபடுத்த தெரியாதவர்,உணர்வுகளை முறையாக வெளிபடுத்த தெரியாதவர்,விரத்தி மனநிலை, தாழ்வுமனபான்மை, மயக்கம் வரும்,தலை சுற்றுதல்,நிலையாக எண்ணம் இல்லாமல் இருப்பது, எப்பொழதும் புத்துணர்ச்சியில்லாமல் கலைப்பாக இருத்தல், தெளிவற்ற மனநிலையில் இருத்தல் அல்லது செயல்படுதல்,தெளிவற்ற சிந்தனை, நினையாற்றல் குறைவு அல்லது இல்லாமல் போகுதல், முறையற்ற ஓட்டம், முறை அற்ற அசுரவேகம்.




3ம் பாவம் 6,8,12 பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது ஜாதகருக்கு புதுபித்தல் இல்லாமல் இருப்பார்,விரிவுபடுத்தி செய்ய தெரியாது,ஒரு செயலையின் அப்கிரேடை பற்றிய அறிவு இல்லாமல் இருப்பது,கற்பதற் கேற்ற மனச்சார்பும்,அறிவற்றவராக இருப்பது,மனத்தில் பதியும் பதிவுகளால் பாதிப்புகள் ஏற்படுதல், தன்னுடைய எண்ணத்துக்கு ஏற்ப உடலை இயக்க முடியாத நிலையில் இருப்பது. ஒருவர் வீரம் இல்லாதவராக இருத்தல் அல்லது முரட்டுதனமான செயல்படுதல், விவேகம்யற்ற தைரியம் உடையவராக இருப்பார், தன்னம்பிக்கை இல்லாதவராக இருப்பது, மனோபலம் இல்லாதவர்,உறுதிப்பாடு மற்றும் விடாமுயற்சி இல்லாதவர்க இருப்பார்.உடலில் உள்ளே ஓடும் இரத்த ஓட்டம் கட்டுபாடுற்ற முறையில் அசுர வேகத்தில் ஓடுதல் இதை மருத்துவர்கள் உயர் இரத்த அழுத்தம் என்று கூறுவார்கள்,இரத்த ஓட்டம் மிகவும் குறைவாக இருப்பது குறைந்த இரத்த அழுத்தம் என்று கூறுவார்கள்.




லக்னம் என்னதான் வலிமையாக இருந்தாலும் லக்னத்தின் பரிமாண பாவமான 3,11ம் பாவம் கெட்டுயிருந்தால் ஜாதகர் ஒரு அளவிற்க்கு மேல் சிறப்பாக செயல்படமுடியாது ஏனெனில் லக்னத்தின் இரு தூண்கள் 3,11ம் பாவங்கள் ஆகும்,






3ம் பாவம் தன்னுடை பாவத்திற்கு 3ம் பாவமான 5ம் பாவத்தையும் தொடர்பு கொண்டால் 100 சதவீதம் இரத்த ஓட்டம் சரியாக இருக்கும்,11ம் பாவமான 1ம் பாவத்தையும் தொடர்பு கொண்டால் 200 சதவீதம் இரத்தம் ஓட்டம் ஒரே சீராகவும் அதாவது ஒரே வேகத்தில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் ஓடும்.
3ம் பாவம் தன்னுடைய பரிணாம பாவங்களான 1,5ம் பாவங்களுக்கு 12ம் பாவங்களான 4,12ம் பாவங்களை தொடர்பு கொண்டால் இரத்தம் ஓட்டம் ஒரே சீராக இல்லாமல் சீரற்ற முறையில் அதாவது கேவமாகவோ அல்லது வேகம் குறைந்தோ ஓடும்.






3ம் பாவம் லக்னத்திற்கு தீமையான 4,8,12ம் பாவங்களை தொடர்புகொண்டால் அதிகமாக கோபபடுதல்,எரிந்து, எரிந்து விழுவது,இரத்த ஓட்டம் சீராக இருக்காது, இதனால் அதிகமாககோபபடுதல்.உணர்ச்சிவசபடுதல், உணர்ச்சிகளை முறையாக வெளிபடுத்த தெரியாதவர்கள்.
காது, தோள்பட்டை, நரம்புமண்டலங்கள்,உணர்வு புலன்கள் பாதிக்கபடும்,பயம், படபடப்பு, உணர்ச்சி வசபடுவது,உடனுக்கு உடன் கோபபடுவது, திடீரென கத்துவது, சிறிய அளவில் உள்ள பிரச்சனை உணர்ச்சி வசபட்டு பெரிதாக்குவது, தாழ்வு மனப்பான்மை, எளிதில் உணர்ச்சி வசபடுதல், ஒருமுறை எடுத்த முடிவை 5நிமிடத்தில் 10 முறை மாற்றுவது,மனோதிடம் இல்லாதது,உறுதிபாடு இல்லாமல் இருப்பது,
புதன் 3ஆம் பாவ உப நட்சத்திரமாக இருந்து 8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டால், காரகோபாவநாஸ்தி யாகும். நரம்பு மண்டத்திற்கு புதன் கிரக காரகமாக இருந்து 8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டு கெட்டுவிடுவதால் அதற்கு காரகோபாவநாஸ்தி என்று பெயர்.






ஒரு பாவத்திற்கு அதிபதியாக ஒரு கிரகம் இருந்து,அதே பாவத்திற்கு கிரக காரகம் வேறுயொரு கிரகமாக இருந்து கெடுத் பொழுது வரும் பாதிப்பைவிட ஒரே கிரகமே பாவத்திற்கும்,அந்த காரகத்திற்கும் அதிபதியாக இருந்து கெடும் பொழுது அதிகமான பாதிப்பை தரும். இதுவே காரகோபாவநாஸ்தி ஆகும்.






இயற்கை அசுபர்களான ராகு,கேது,சனி போன்ற கிரகங்கள் 3ம் பாவ உப நட்சத்திரமாக இருந்து அவர்கள் நின்ற நட்சத்திரம்,உப நட்சத்திரமாக ராகு,கேது,சனி போன்ற கிரகங்கள் இருக்கும் பொழுது இரத்த புற்று நோய் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.




இரத்தம் அழுத்தம் அதிகமாக்கு மற்ற பாவ பலன்கள்.






4ம் பாவம் 4,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டு இருந்து சுக்கிரனும் 4,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டுயிருக்கும் பொழுது இரத்ததில் சக்கரையின் அளவு அதிகமாகும் பொழுது உயர் இரத்தம் அல்லது சக்கரையின் அளவு குறையும் பொழுது பொழுது குறைந்த இரத்த அழுத்தம் ஏற்படும்.


                                 

Wednesday, 19 October 2016

உடல்கூறியில் 3ம் பாவத்தின் முக்கியத்துவம்

பயணம்,மாற்றம்,இரத்தஓட்டம்,மனசு,தகவல் தொடர்பு,ஒரு மனிதனின் உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றம்,இரத்தம் நாளன்கள்,இரத்தம் பாயுவது,இரத்தம் ஓடுவது என்பது 3ம் பாவ காரகங்கள் ஆகும்.

புதுபித்தல்

தெரிந்துக்கொண்ட ஒரு விஷயத்தில் சிலவற்றை சேர்ந்து புதிய வடிவத்தில் வெளிபடுத்தலை குறிக்கும்.
 
விரிவுபடுத்துதல்

தெரிந்துக்கொண்ட ஒரு விஷயத்தில் சிலவற்றை சேர்த்து மற்றவர்களுக்கு புரியும் விதத்தில் விரிவுபடுத்தி சொல்லுவதை குறிக்கும்.
 
ஒரு செயலையின் அப்கிரேடை குறிக்கிறது

ஒரு பொருளின் அல்லது ஒரு செயலில் உள்ள பழைய கருத்துக்களை தற்கால சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றி புதியவற்றை சேர்த்து பயன்படுத்துவதைகுறிக்கும்.
 
கற்பதற் கேற்ற மனச்சார்பு அறிவு

ஒரு விஷயத்தை எளிதில் புரிந்துக்கொள்வதற்கான உள்ள தெளிவான மனநிலையை குறிக்கும்.
 
உலகில் உள்ள அனைத்துபதிவுகள்.

அனைத்துவிதமான தகவல்களையும் பதிவு செய்வதை குறிக்கும்,மனதில் பதிவு செய்வதை குறிக்கும், டாக் மெண்ட்டாக பதிவு செய்வதை குறிக்கும்.
தன்னுடைய எண்ணத்துக்கு ஏற்ப உடலை இயக்குவது
உடலில் உள்ள சக்திகள் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் ஒரே சீராக செல்வதால் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் ஒரே சீராக செயல்படும்,இதனால் ஜாதகர் உடலை தான் விருப்படி செயல்படுத்துவதை குறிக்கும்.

3ம் பாவம் 3,7,11 அல்லது 1,5,9ம் பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது மேலே குறிப்பிட்ட அகம் சார்ந்த விஷயங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கும்.

3ம் பாவம் 3,7,11 அல்லது 1,5,9ம் பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது ஒருவரது வீரத்தைநிர்ணயிப்பது ,தைரியம்,தன்னம்பிக்கை,மனோபலம்,உறுதிப்பாடு, விடாமுயற்சி இவைகள் அனைத்தும் ஒரு மனிதனின் சுய சிந்தனை மற்றும் எண்ணத்தை வெளிபடுத்தும் காரணிகள் ஆகும்,இவை மத்திம்மாக இருக்கும்,ஒருவிதத்தில் ஜாதகர் கோழையாக இருப்பார்.

3ம் பாவ ஆரம்பமுனை நட்சத்திரம், ஆரம்பமுனை உப நட்சத்திரம்,ஆரம்பமுனை உப உப நட்சத்திரம் ஆகிய இவ்மூன்றும் இயற்க்கை சுபர்களான புதன்,குரு, சுக்கிரனாக இருந்து இவர்கள் நின்ற நட்சத்திரம், உப நட்சத்திரம் சந்திரன்,புதன்,குரு,சுக்கிரனாக இருந்துதொடர்பு கொண்ட 3,7,11 அல்லது 1,5,9ம் பாவங்களை தொடர்பு கொண்டால் ஜாதகர் கோழையாக இருப்பார்.
ஓதும்மூன்று உடையோன் பாவர் உடன்கூட மூன்றில் பாவர்
போதுற உதயந் தொட்டுப் புகல் ஆறு இராசிக்கு அப்பால்
ஓதுவாம் இராசி மூன்றுக்கு இறைவரில் ஒருவர் நீசம்
மீதுஉறின் வீரியம் தான் விழந்துபோம் தரணிமீதே

போகம் எட்டு வகையை குறிக்கும்.வெற்றி எட்டு வகையை ஆகும்.அரசருக்கு வெற்றி,மற்றவர்களுக்கு காரியத்தை இனிது முடித்தலாகும். பரக்கிரகமாவது வீரத் தன்மைக் காட்டுதல் என்க.6ஆம் பாவம் சத்துருக்களை வெற்றி பெறும் ஸ்தானமாக மென்க,தைரியம் என்பது எந்த விஷயத்தையும் பயமின்றி துணிவாக செய்து முடித்தல் என்க.ஜெயத்தைக் பெறுதல் அதாவது வெற்றியை குறிக்கும்.
.
எனவே 3ம் பாவ ஆரம்பமுனை நட்சத்திரம், ஆரம்பமுனை உப நட்சத்திரம், ஆரம்பமுனை உப உப நட்சத்திரம் ஆகிய இவ்மூன்றும் இயற்க்கை அசுபவர்களான செவ்வாய்,சனி,ராகு,கேது ஆகிய கிரகங்கள் இருந்து அவை 2,4,6,10ம் பாவங்களை தொடர்பு கொண்டால் ஜாதகர் அதிகமான தைரியம்,தன்னம்பிக்கை உடையவராக இருப்பார்.

Sunday, 17 July 2016

கண்ணில் பிரச்சனை யாருக்கு

பழனி(திருவாடுதுறை சைவசிந்தாந்த மற்றும் திருமுறை அமைப்பாளார்) பிறந்த தேதி 04.07.1947 பிறந்த ஊர் காஞ்சிபுரம், பிறந்த நேரம் 09.30.00 பிற்பகல் ,பிறந்த நேரத்தை திருத்திய நேரம் 09.31.08 பிற்பகல், ஆளும் கிரம் எடுக்கபட்ட தேதி நேரம் 10.04.2012 அன்று பிற்பகல் 03.00.00 பிற்பகல் இடம் காஞ்சிபுரம்.
கண் அழுத்த நோய்(EYE PRESSURE)
கண்ணில் படும் தூசு மற்றும் இதர அழுக்குகளை வெளியேற்றவும்,இமைகள் மூலம் ஏற்படும் உராய்வைக் குறைக்கவும் கண்களில் சுரக்கும் நீர் கண் நாளங்கள் வழியே தொடர்ச்சியாக வெளியேற்றப் படுகிறது.கண்களில் சுரக்கம் நீரைவிட வெளியேற்றப் படும் நீரின் அளவு குறையும்போது அந்நீர் கண்ணிலே யே தங்கிவிடுவதால் அழுத்தம் காரணமாக வீக்கம் ஏற்பட்டு கண் பந்து போன்று விரிவடைய ஆரம்பிக்கும்.

இதனால் கண் நரம்புகள் அழுத்தத்துக்குள்ளாகி தேசம்டைந்து பார்வையிழப்புடன் கடுமையான வலியும் ஏற்படும்.

இந்த நோய்காரணமாக நீர்வடியும் நாளங்கள் சரியாணகோணத்தில் வளராத்து, கண்ணின் லென்ஸ் இடம் மாறுவது,கண் திசுக்களின் வீக்கம்,கண்ணில் ஏற்படும் கட்டி,கண்ணில் அடிபடும் போது ஏற்படும் ரத்த சேகரம் போன்ற காரணங்களால் இந்த நோய்ஏற்படுகிறது.
3ஆம் பாவம்
உடலில் உள்ள சிறிய நரம்பு மண்டலங்கள்,ரத்த நாளங்கள், உணர்வுபுலன்கள்,தகவல் தொடர்பு களையும்,கடத்திகளையும் குறிக்கும்.3ஆம் பாவம் பாதிக்கும் போது ஒவ்வொரு உறுப்பிலும் உள்ள நரம்புகள் பாதிக்கும்.எந்த பாவமும் கிரக காரகமும் பாதிக்கபட்டுள்ளது அந்த உறுப்பில் உள்ள நரம்புகளில் பிரச்சனை வரும்.
இந்த நோய்க்கு மூல காரணம் 3ஆம் பாவம் பாதிப்பும்,புதன் பாதிப்பும் உள்ளவர்களுக்கு கண்ணில் அழுத்த நோய் (EYE PRESSURE) வருவதற்க்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
1ஆம் பாவ உப நட்சத்திரம் கேது ஆகும்,1ஆம் பாவத்திற்ககு உப நட்சத்திரம்,10ஆம் பாவத்திற்கு உபஉப நட்சத்திரம்,3ஆம் பாவத்திற்கு ஆரம்பமுனை நட்சத்திரமாக உள்ளது சிறப்பான அமைப்புயாகும் அதாவது கேது எந்த விதத்திலும் 8,12ஆம் பாவங்களுக்கு அதிபதியாக வரவில்லை என்பதே சிறப்புயாகும்.

கேது தான் நின்ற நட்சதிதரம் உப நட்சத்திரம் மூலமாக 3,6,9,12ஆம பாவங்களை தொடர்பு கொள்கிறார்.3,9ஆம் பாவங்கள் சம சப்தம பாவங்கள் ஆகும், 6,12ஆம் சம சப்தமபாவங்கள்யாகும்,இவை 3,9ஆம் பாவங்கள் 6,12ஆம் பாவங்களுக்கு முறையே 4ஆம் பாவங்களாக வருவதால் 3,9ஆம் பாவங்கள் 30 சதவீத செயல்பட்டு கட்டு ஆயிடும் பிறகு 6,12ஆம் பாவங்கள் 70 சதவீதமும் செயல்படும் என்று கொள்ளலாம் அல்லது 3,9ஆம் பாவங்கள் படிபடியாக நீர்த்துபோயிடும் பிறகு முழுமையாக 6,12ஆம் பாவங்கள் செயல்படும் என்று.
ராகு 1,4க்கு உபஉப நட்சத்திரமாகவும்,1,5,9ஆம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாகவும் இருந்து தான் நின்ற நட்சதிதரம் உப நட்சத்திரம் மூலமாக 1,4ஆம் பாவங்களை தொடர்பு கொள்கிறார்
லக்னத்தில் 12 இருப்பது மட்டுமே ஒரு குறை ஆகும்,அதுவும் 12யை கட்டுபடுத்த 6 உள்ளது மற்றும் 6,12யை வலிமையாக செயல்படவிடலாமல் 3,9ஆம் பாவங்களும் கட்டுபடுத்தும் அதனால் 12ஆல் 15 சதவீதம் அளவிற்கு பாதிப்பு வரும்.
1ஆம் பாவ விதி கொடுப்பினை 85 சதவீதம் நன்றாக உள்ளது அதனால் 1ஆம் பாவம் குறிக்கும் மூளையில் பிரச்சனை இல்லை.
1ஆம் பாவம் ஆய்வு எதற்காகதான் என்றால் 1ஆம் பாவத்தில் மூளை உள்ளது மூலையில் இருந்துதான் அனைத்து உறுப்புக்களுக்கும் தொடர்பு போகிறது,1ஆம் பாவம் நன்றாக இருந்தால் மூளை நன்றாக உள்ளது என்று பொருள் கொள்ளலாம்,1ஆம் பாவ உப நட்சத்திரம் கிரகம் மற்றொரு பாவத்திற்கும் உப நட்சத்திரமாக இருந்தால், ஒன்றாம் பாவம் பாதிக்கும் போது மற்றொரு பாவத்திற்கும் உப நட்சத்திரமாக அதே கிரகம் இருப்பதால் அந்த பாவத்தில் உள்ள அகம் சார்ந்த உறுப்புகளில் 1ஆம் பாவத்தில் இருந்து வரும் தொடர்பில் பிரச்சனை என்று பொருள் கொள்ளவேண்டும் இந்த பாதிப்பை சரிசெய்வது சிரம்மம் ஆகும்.
சூரியன் 2ஆம் பாவ நட்சத்திரம் ஆகும்,சூரியன் 3,5ஆம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாகவும் உள்ளார் சூரியன் நின்ற நட்சதிதரம் ராகு ஆகும்,சூரியன் நின்ற உப நட்சத்திரம் சந்திரன் ஆகும்.
ராகு 1,4க்கு உபஉப நட்சத்திரமாகவும்,1,5,9ஆம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாக ராகு உள்ளார்.
ராகுக்கு சாதகம் பாதகம் நடுநிலை என்பதை சந்திரன் சொல்லுவார்.
சந்திரன் 4,8க்கு உப நட்சத்திரமாகவும்,12ஆம் பாவத்திற்கு உபஉப நட்சத்திரமாகவும், 4,8,12ஆம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாக சந்திரன் உள்ளார்.
ஒரு கிரகம் தான் நின்ற நட்சதிதரம் மற்றும் உ நட்சத்திரம் மூலமாக 1ஆம் பாவத்தை கெடுத்து கொண்டு8,12ஆம் பாவத்தை செயல்படுத்தும் போது அந்த பாவத்தில் உள்ள அகம் சார்ந்த உறுப்புகளுக்கு பாதிப்பு உண்டாகும்.எந்த கிரகங்கள் கெட்டுபோயிள்ளதோ அந்த பாவத்தில் உள்ள அந்த கிரக காரகங்கள் மூலமாக வலி வேதனை ஜாதகர் அனுபவிப்பார்.
சூரியன் 1ஆம் பாவத்தை 40 சதவீதம் கெடுத்துக் கொண்டும்,
சூரியன் 4ஆம் பாவத்தை 100 சதவீதம் செயல்படுத்தும்.
சூரியன் 8ஆம் பாவத்தை 75 சதவீதம் செயல்படுத்தும்.
சூரியன் 12ஆம் பாவத்தை 40 சதவீதம் செயல்படுத்தும்.
சூரியன் 2ஆம் பாவத்திற்கு உப நட்சத்திரமாக இருந்து காரக்கோபாவநாசி ஆகிறார்,ஒரு பாவம் கெட்டு அதனுடைய காரக கிரகமும் கெட்டு அதனுடைய தசை நடக்கும் போது அந்த பாவத்தின் அகம் மற்றும் புறம் சார்ந்த காரகங்களை முழுவதையும் ஜாதகர் அனுபிக்கமுடியாத நிலைஉண்டாகும்.
சூரியன்8,12ஆம் பாவங்களை தொடர்பு கொண்டு தன்னுடைய மூல பாவங்களான 2ஆம் பாவத்திற்கு 60 சதவீதம் தீமையும்,3,5ஆம் பாவங்களுக்கு 25 சதவீதம் தீமையும் தன்னுடைய திசையில் செய்வார்.
2ஆம் பாவத்தின் புறம் சார்ந்த காரகங்களை எதையும் ஜாதகரால் அனுபவிக்கமுடியாது.
இந்த ஜாதகருக்கு புதன் பாதிப்பு அடையவில்லை மற்றும் 3ஆம் பாவம் 75 சதவீதம் நன்றாக உள்ளது.
1) கண்ணீர் நீர் எடுத்தல்(குளுக்கோமா என்பது கண்ணில் ஏற்படும் (PRESSURE குறிப்பது) 1994ஆண்டியில்
2) கண்ணில் புறை எடுத்தல்1997ஆண்டியில்
3) கண்ணில் கருவிழி மாற்றுவது2000ஆண்டியில்
கண்ணீர் நீர் எடுத்தல்(குளுக்கோமா என்பது கண்ணில் ஏற்படும் (PRESSURE குறிப்பது) 1994ஆண்டியில் நடைபெற்றது அப்பொழது ஜாதகருக்கு சுக்கிர தசையில் சந்திர புத்தி நடைபெடற்றது.
சுக்கிர தசையில் சூரிய புத்தியில் கண்ணியில் பாதிப்புக்கள் ஆரம்ப ஆனது,அதனுடைய பாதிப்புக்கு அறுவைசிகிச்சைகள் சுக்கிர தசையில் சந்திர மற்றும் ராகு புத்திகளில் செய்யபட்டது.மற்ற புத்திகளில் கண்ணியில் தொடர்ந்து பாதிப்புகள் அதிகமானது.
சுக்கிர தசையை தொடர்ந்து வந்த சூரிய தசை பாதிப்பை அதிகமாக்கி முழுமையான பாதிப்பை உண்டாக்கியது.
இடது கண் முழுவதும் பார்வை இல்லை இடது கண்ணில் கருவழி(பாப்பா) பக்கத்தில் நரம்பு சிகப்பாக மாறுகிறது தூக்கம் குறைவு,அலர்ஜி போன்றவற்றால் இதுபோல உருவாகிறது வலி அதிகமாக இருக்கும் 5 வருடங்களாக.
ஜாதகர் கிராம கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணி செய்து ஒய்வுபெற்றவர்,ஓய்வுஊதியம் இல்லை, சூரிய தசை வந்தவுடன் கடன்கள் அதிகமாகியது,சம்பளம் இல்லாமல் வேளை செய்வது,பல இடங்களில் சண்டையால் உறவு பாதிக்கபட்டு வேளைவிட்டு நின்றுவிடுவார்.
சந்திர தசையில் சந்திர புத்தியில் சைவசிந்தாந்த அமைப்புயாளார் பதிவி பரிபோனது.

Thursday, 14 July 2016

யாருக்கு கண்ணில் அறுவைசிகிச்சை செய்யபடும்(கண்ணியில் பாதிப்பு வரும்) ஆய்வு ஜாதகம் 1 ?

யாருக்கு கண்ணில் அறுவைசிகிச்சை செய்யபடும்(கண்ணியில் பாதிப்பு வரும்) ஆய்வு ஜாதகம் 1 ?
ADVANCED KP STELLAR ASTROLOGY (உயர் கணித சார ஜோதிட) முறையில் மிகவும் துல்லியமான ஜோதிட விளக்கம்
வரிசை எண் 5088 இவர் ஆண்,பிறந்த தேதி 11.07.1950 செவ்வாய் கிழமை பிறந்த நேரம் 01.00 பிற்பகல் பிறந்த இடம் புனே மகாராஷ்டிரா பிறந்த நேரத்தை திருத்திய நேரம் 01.01.53 பிற்பகல் ஆளும் கிரகம் எடுத்த தேதி 12.12.2011 அன்று ஆளம் கிரகம் எடுத்த நேரம் 05.34.20 பிற்பகல் ஆளும் கிரகம் எடுத்த இடம் காஞ்சிபுரம்

2ஆம் பாவம் 8ஆம் பாவ தொடர்பினை பெறும் போது ஜாதகரின் கண் அமைப்பு மாறுதல் என்ற நிலை வருவதற்கு வாய்ப்பு உண்டு.
ஒருவரது கண்ணின் உட்பகுதியில் அமைந்திருக்கும் விழித்திரை இருக்க வேண்டிய இடத்திலி இல்லாமல் வேறு இடத்தில் சற்று ஒதுங்கி இருந்தால் அல்லது இயற்கையாக உள்ள அளவைவிட சற்று மாறுபட்டு இருத்தால் அவருக்கு கிட்டப்பார்வை அல்லது தூரபார்வை கோளாறு உண்டாகும் இதை கண்ணாடிமூலம் சரி செய்யலாம்.இதைதான் உறுப்பு மாறுதல் என்று சொல்லபடுகிறது.

கண்ணில் படும் தூசு மற்றும் இதர அழுக்குகளை வெளியேற்றவும்,இமைகள் மூலம் ஏற்படும் உராய்வைக் குறைக்கவும் கண்களில் சுக்கும் நீர் கண் நாளங்கள் வழியே தொடர்ச்சியாக வெளியேற்றப் படுகிறது.கண்களில் சுரக்கம் நீரைவிட வெளியேற்ற ப்படும் நீரின் அளவு குறையும்போது அந்நீர் கண்ணிலே யே தங்கிவிடுவதால் அழுத்தம் காரணமாக வீக்கம் ஏற்பட்டு கண் பந்து போன்று விரிவடைய ஆரம்பிக்கும்.

இதனால் கண் நரம்புகள் அழுத்தத்துக் குள்ளாகி தேசம்டைந்து பார்வையிழப்புடன் கடுமையான வலியும் ஏற்படும்.

இந்த நோய்காரணமாக நீர்வடியும் நாளங்கள் சரியாணகோணத்தில் வளராத்து, கண்ணின் லென்ஸ் இடம் மாறுவது,கண் திசுக்களின் வீக்கம்,கண்ணில் ஏற்படும் கட்டி,கண்ணில் அடிபடும் போது ஏற்படும் ரத்த சேகரம் போன்ற காரணங்களால் இந்த நோய்ஏற்படுகிறது.

2ஆம் பாவம் 12ஆம் பாவ தொடர்பினை பெறும் போது ஜாதகரின் கண் செயல்திறன் இல்லாத நிலையை குறிக்கும்.இதை குணப்படுத்துவது சற்று சிரம்ம்,கண்ணின் விழித்திரைக்கு இரத்தம் சரிவர செல்லாத நிலை என்று சொல்லலாம்.
2ஆம் பாவம் 8,12ஆம் பாவ தொடர்பினை பெற்றவர்களுக்கு கண்ணில் பாதிப்பு ஏற்படவாய்ப்பு உண்டுகண் பார்வைக்கு கிரக காரகம் சூரியன் ஆவார்.

2ஆம் பாவ முனையின் உப நட்சத்திர அதிபதி மற்றும் சூரியன் 8,12ஆம் பாவ தொடர்பு பெற்று,இரண்டில் ஒன்று,தசாநாதனாக பிறக்கும் போதே வந்தால் ஜாதகருக்கு பிறவிலேயே கண்ணில் பாதிப்பு வருவதற்கு வாய்ப்பு உண்டு.

2ஆம் பாவ முனையின் உப நட்சத்திர அதிபதி மற்றும் சூரியன் இந்த இரண்டில் ஏதாவது ஒன்று மட்டும் 8,12ஆம் பாவ தொடர்பு பெற்று,மற்றது எந்த வகையிலும் 8,12ம் பாவ தொடர்பினை பெறாமல் இருந்தால் கண்ணில் பிரச்சனை உடனடியாக (இளம்வயதில்) வராது 40 வயதிற்கு மேல் தான் பிரச்சனை வரும்.

2ஆம் பாவ முனையின் உப நட்சத்திர அதிபதி மற்றும் சூரியன் இந்த இரண்டில் ஏதாவது ஒன்று மட்டும் 8,12ஆம் பாவ தொடர்பு பெற்று,மற்றது வலுவான வகையில் 7ஆம் பாவத்தினை (எந்த வகையிலும் 8ஆம் பாவ தொடர்பினை பெறாமல்)தொடர்பு பெற்றால் ஜாதகருக்கு கண் பார்வை சார்ந்த பிரச்சனை வராது,வயது முதிர்த்த காலத்தில் சுமார் 60 வயதிற்கு மேல் கண் பார்வையில் பிரச்சனை வரலாம்.
லக்ன பாவ உப நட்சத்திரமும்,28,12ம் பாவ உபநட்சத்திரமும் ஒரே கிரகமாக இருந்து இதன் நட்சத்திரம்,உப நட்சத்திரத்தில் சுமார் 4 கிரகங்கள் இருந்து ஜாதகர் பிறக்கும் போதே லக்ன உப நட்சத்திரத்தின் திசை நடைபெற்றால் ஜாதகர் பிறக்கும் போதே கண்ணில் குணப்படுத்த முடியாத குறைபாடுகளுடன் பிறப்பார்.
மேற்கண்ட அமைப்பில் சூரியன் 8,12ம் பாவத் தொடர்பினை பெறாமல் இருந்தாலும் கூட கண்ணில் பாதிப்பு அல்லது பேசுவதில் பாதிப்பு என்பதை தவிர்க்க முடியாது.
1,2,8,12ஆம் பாவங்கள் ஒரே கிரகமாக இருந்தால் லக்னத்திலிருந்து (மூளையிலிருந்து) 2ம் பாவ உறுப்புகளுக்கு சரியான கண்காணிப்பு இல்லை என்று பொருள்யாகும்.
1,2ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக சந்திரன் வந்தாலும் கண்ணியில் பாதிப்பு வரும்.

1,5,9ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக 6,8,9ஆம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாகவும் புதன் உள்ளார்,புதன் நின்ற நட்சத்திரம் குரு 12ஆம் பாவத்திற்கு உப நட்சத்திரமாக,5ஆம் பாவத்திற்கு உபஉப நட்சத்திரமாக, 2,6,10ஆம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாகவும் உள்ளார்,புதன் நின்ற உப நட்சத்திரம் புதன் இருக்கிறார். புதன் தொடர்பு 9,12,6,8,10ஆம் பாவங்கள் ஆகும்.
இதில் 12ஆம் பாவம் 70 சதவீதம் செயல்பட்ட பிறகே 9ஆம் பாவம் 30 சதவீதம் செயல்படும்
லக்னம் உபஉப நட்சத்திரமாக சந்திரன் உள்ளார் நடக்கும் தசை,புத்தி, அந்திரங்களுக்கு ஏற்ப சந்திரனின் நட்சத்திரம் உப நட்சத்திரம், மற்றும் உப உபநட்சத்திரம் மாறும் இதனால் லக்னத்தின் 25 சதவீத பலன்கள் மாறும்.

லக்னம் ஆரம்பமுனை நட்சத்திரமாக செவ்வாய் உள்ளார்,செவ்வாய் நின்ற நட்சத்திரம் சந்திரன் ஆவார், செவ்வாய் நின்ற உபநட்சத்திரம் கேது ஆகும்.

செவ்வாய் 11ஆம் பாவத்திற்கு உபஉப நட்சதிதர மாகவும், 1,5,9ஆம் பாவத்திற்கு நட்சத்திரமாக உள்ளார், சந்திரன் 2,10ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக வும், 1ஆம் பாவத்திற்க்கு உபஉப நட்சத்திரமாகவும் சந்திரன் உள்ளார்.கேது 3ஆம் பாவத்திற்கு உப நட்சத்திரமாகவும்,4ஆம் பாவத்திற்கு உபஉப நட்சத்திரமாகவும், 3,7,11ஆம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமா கவும் உள்ளார் செவ்வாய் 3,7,11ஆம் பாவங்களை கெடுத்துக்கொண்டு 1,4,10 என்று வேளையை செய்வார்.
லக்ன உப நட்சத்திரம் வலிமையாக 1,5,9ஆம் பாவங்களை கெடுத்துக்கொண்டு 9,12,6,8,10ஆம் பாவங்களின் வேளையை செய்கிறது.லக்னம் பாதிக்கபட்டால் தலையில் மூலையில் பிரச்சனை உள்ளது அதாவது நரம்புமண்டலத்தில் பாதிப்பு இருக்கவாய்ப்புள்ளது,நரம்பு மண்டல அதிபதி புதனே இருந்து 1ஆம் பாவ பாதிகபடுவது காரகோபாவநாசி ஆகும்.
நரம்புக்கு அதிபதியான புதனே 1ஆம் பாவ உப நட்சத்திரமாக இருந்து 9,6,8,10,12 என்று தொடர்பு கொண்டு பாதிக்கபட்டுள்ளதால் ஜாதகருக்கு நரம்பு மண்டலம் பாதிப்புள்ளாகியிருக்கும்,தலையில் ஓட்டுமொத்த நரம்புகளும் மூலையில் இருந்துதான் ஆரம்பிக்கிறது இதானல் நரம்புகளில் பாதிப்பு உள்ளது ஜாதகருக்கு.
3ஆம் பாவம் சிறிய நரம்பு மண்டலங்களையும், ரத்த நாளங்களையும்,உணர்வு புலன்களையும்,தகவல் தொடர்பு சாதனங்களையும் குறிக்கும்,3ஆம் பாவமும் 75 சதவீதம் பாதிக்பட்டுள்ளது, மூளையில் இருந்து(1ஆம் பாவத்தில் இருந்து)அனுப்படும் தகவல்கள்,3ஆம் பாவமும் பாதிக்கபட்டுள்ளதால் எந்த எந்த பாவங்கள் 6,8,12ஆம் பாவங்களை தொடர்பு கொள்கிறோதோ அந்த பாவங்களுக்கு மூளையில் இருந்து அனுப்படும் தகவல்கள் இந்த உறுப்புகளுக்கு சேரவில்லை அல்லது இந்த உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புக்கள் மூளைக்கு(1ஆம் பாவத்திற்கு)சென்று சேருவதுயில்லை.

இடது கண் கூசுவதாக சொன்னார் இதற்க்காக பரிதோனை செய்தபோது கண்களில் உட்புறமாக ஓட்டை உள்ளது இந்த ஓட்டை வழியே நேரடியாக வெளிச்சம் ஊடுறவும் போது கண் கூசுவதாக டாக்டர்கள் கூறினார்கள், 20.10.2010 இதனால் இந்த ஓட்டையை சரி செய்ய லேசர் சிகிச்சை செய்யபட்டது, இரண்டு கண்களில் புரை நீக்கபட்டது,கண்களில் இருந்து நீர் வடிதல் உள்ளது,25 ஆண்டுகளாக கண்ணாடி அணிந்துள்ளார்.

2,10ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக சந்திரன் உள்ளதால் அறுவைசிகிச்சை 20.10.2010 அன்று நடைபெற்ற போது நடைபெற்ற சந்திரன் நின்ற நட்சத்திரமாகவும்,நடப்பு புத்திநாதன் சந்திரன் நின்ற உப நட்சத்திரமாகவும்,நடப்பு அந்தரநாதன் சந்திரன் நின்ற உபஉப நட்சத்திரமாகவும் இருக்கும்,இதே போலவே 1ஆம் பாவ உபஉப சந்திரன் இருப்பதால் அந்த பாவ பலன்கள் 25 சதவீதம் இதே போலவே மாறும்.

மேலே குறிப்பிட்ட விதிகள் இந்த ஜாதகருக்கு பொருந்தி வருவதால் கண்ணியில் இவ்வளவு பிரச்சனைகள் வந்தது.
அறுவைசிகிச்சை 20.10.2010 அன்று நடைபெற்ற போது நடைபெற்ற தசை, புத்தி,அந்திரம் பின் வருமாறு.
சனி தசையில் சூரிய புத்தியில் சந்திர அந்தரத்தில் கண்ணியில் அறுவை சிகிச்சை செய்யபட்டது
சனி தசை 7,11 ஆம் பாவ தொடர்பு கொள்கிறது
சூரிய புத்தி 9,12ஆம் பாவ தொடர்பு கொள்கிறது
சந்திர அந்தரத்தில் 2,4,6,8,10ஆம் பாவ தொடர்பு கொள்கிறது

Tuesday, 12 July 2016

அகில இந்திய சார சோதிடர்கள் சங்கத்தின் 10-ஆம் ஆண்டு மாநாடு


அகில இந்திய சார சோதிடர்கள் சங்கம்
All India Association of Stellar Astrologers
www.astro devaraj.com  சங்க நிறுவனர் ஜோதிடநல்லாசிரியர் தேவராஜ் தொடர்பு கொள்ளவும் விளம்பரங்கள் வரவேற்க்கபடுகிறது

அகில இந்திய சார சோதிடர்கள் சங்கத்தின் 10-ஆம் ஆண்டு மாநாடு வருகின்ற 11-9-2016 ஞாயிறு அன்று நடைபெறவிருக்கின்றது, இந்த10-ஆம் ஆண்டு மாநாடு, அகில இந்திய சார சோதிடர்கள் சங்கத்தின் மாபெரும் சிறப்பான மாநாடு ஆகும்.

நடைபெறுமிடம்;-
ஸ்ரீ காமாட்சி திருமண மண்டபம், எண்.3, இந்திரா காந்தி குறுக்குத் தெரு, ராதா நகர் மெயின் ரோடு, குரோம்பேட்டை, சென்னை-600044.

இந்த சிறப்பு மாநாடு காலை. 10-00 மணி முதல் மாலை 6-00 மணி வரை. தொடர்ச்சியாக நடைபெரும்.
இந்த மாநாட்டில் அனுபவமிக்க ஜோதிடர்கள் சார சோதிடத்தின் அடிப்படையில், பல்வேறு தலைப்புக்களில் உரையாற்றவிருக்கின்றார்கள். வளரும் சோதிடர்களுக்கும், அனுபவ சோதிடர்களுக் கும், இது ஒரு அரிய வாய்ப்பாகும். சோதிடச் சிந்தனைகளைத் தூண்டும் அரியகருத்துக்கள் செவிக்கு விருந்தாக இருக்கும்.அதுமட்டுமில்லாமல், அருமையான பத்து நூல்கள், சார சோதிடத்தின் அடிப்படையில், வெவ்வேறு தலைப்புக்களில், அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களால் எழுதப்பட்டு வெளியிடப்படவிருக்கின்றது. இந்த நூல்கள் அருமையான சாரசோதிட விளக்களைக் கொண்ட அரிய பொக்கிஷங்களாகும்.அனைவரும் வாங்கிப் பயனடைய வேண்டியவையாகும்.மாநாட்டின் இறுதியில் பார்வையாளர்கள், சோதிடத்தின் அடிப்படையில் கேட்கப்படும் ஞாயமான கேள்விகளுக்கு, சாரசோதிட அடிப்படையில்,சங்க ஸ்தாபகர், சோதிட நல்லாசிரியர், திரு தேவராஜ் அவர்களால் பதில் அளிக்கப்படும்.இந்த அரிய வாய்ப்பை, பயன்படுத்திக் கொள்ளுமாறு சோதிடர் களையும், சோதிட ஆர்வளர்களையும், சோதிடப்புர வளர்களையும்,கேட்டுக்கொள்கின்றோம்.இந்த மாநாட்டிற்கு,அனுமதிகட்டணம். ரூபாய்.200/- மட்டுமே.
அனுமதிகட்டணம்.ரூபாய்.200/- செலுத்தி மாநாட்டில் கலந்துக்கொள்ளும் அன்பர்களுக்கு ரூபாய்.250/- மதிப்பிடத்தக்க, அரிய கருத்துக்களும், கட்டுரைகளும், நிரம்பிய 10-ஆம் ஆண்டு மாநாட்டு மலர் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.

அன்றுவெளியிடவிருக்கும் புத்தகங்களின் விலையில் 10% கழிவு தரப்படும்
முற்பகல் 11.00, மணிக்கு பிஸ்கட்டுடன் தேனீர்.
நண்பகல் 1-00 மணிக்கு அறுசுவை உணவு.
பிற்பகல் 4-00 பிஸ்கட்டுடன் தேனீர். வழங்கப்படும்.

தமிழகம் மட்டுமல்லாது, இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும்,சிங்கப்பூர்,மலேசியா,அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் அகில இந்திய சார சோதிடர்கள் சங்க மாநாட்டு மலர் விரும்பிவாங்கிப் படிக்கப் படுகின்றது. ஆகவே சிறிய, பெரிய நிறுவனங் கள் நடத்துபவர்கள், தொழிலதிபர்கள், வியாபாரிகள், கடைக்காரர்காரர்கள், சோதிடத்தைத் தொழிலாகக் கொண்டிருப்பவர்கள், இந்த மாநாட்டு மலரில் விளம்பரக்கள் கொடுத்தும் பயனடையலாம். அது மாநாட்டு மலருக்கு பொருளுதவியாக இருக்கும்.
மாநாட்டுக்கு உதவும் நல்ல எண்ணம் கொண்ட அன்பர்கள் நன்கொடைகள் கொடுத்தும் ஆதரிக்கு மாறும் கேட்டுக்கொல்கின்றோம்.

விபரங்களுக்குதொடர்பு கொள்ளவேண்டிய செல் எண்கள்.9382339084., 9444111564., 8056046588., 9843504457
மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள். நன்றி, வணக்கம்.
www.astro devaraj.com  சங்க நிறுவனர் ஜோதிடநல்லாசிரியர் தேவராஜ் தொடர்பு கொள்ளவும் விளம்பரங்கள் வரவேற்க்கபடுகிறது