Wednesday, 1 March 2017

உயர்கணித சார ஜோதிடத்தில் காலதாமான திருமணம் யாருக்கு?அதற்கான பாவங்கள் யாவை?அதற்கான கிரக்காரகம் யாது?காலதாமான திருமணத்திற்கான விதிகள் யாவை? பாகம் 2

உயர்கணித சார ஜோதிடத்தில் காலதாமான திருமணம் யாருக்கு?அதற்கான பாவங்கள் யாவை?அதற்கான கிரக்காரகம் யாது?காலதாமான திருமணத்திற்கான விதிகள் யாவை?
பாகம் 2

விதி 12

மதி என்ற தசை புத்தி விபரம்
7ம் பாவம் பாதிக்கபட்டுயிருந்து ஜாதகருக்கு பிறந்த முதலே நடக்கும் தசை இரட்டைப்படை பாவங்களை கொண்டு நடக்கும் பொழுது ஜாதகருக்கு காலதாமதமான திருமணம் நடக்கும்.அதுவும் 7ம் பாவத்திற்கு பாதகமானதுமான 2,6ஆம் பாவங்களை தொடர்பு கொண்டு தசை நடக்கும் பொழுது ஜாதகர் திருமணத்தை நிராகரிப்பார்,அதுவே லக்னத்திற் தீமையான 8,12 ஆம் பாவங்களை தொடர்பு கொண்டு தசை நடக்கும் பொழுது ஜாதகர் திருமண செய்துக்கொள்ள எவ்வளவு முயற்ச்சி செய்தாலும் மற்றவர்கால் ஜாதகர் நிராகரிக்கபடுவார் ஜாதகருக்கு திருமணம் காலதாமதம் ஆகிகொண்டே யிருக்கும்.சழூகத்தால் அசிங்கம், அவமானங்களை சந்தித்துக் கொண்டுயிருப்பார்.
ஒற்றைப்படை பாவங்கள் தொடர்பு கொண்டு தசை நடக்கும் பொழுது தன்னுடைய அணியின் பாவங்களின் பலனை இரட்டிப்பு செய்து அந்த பாவ பலன்களை வலிமையாகவும் நடந்தும், ஒற்றைப்படை பாவங்கள் தொடர்பு கொண்டு தசை நடக்கும் பொழுது அந்த தசையில் பொதுவாக இரட்டைப்படை பாவங்களின் பலன் சராசரியளவே நடக்கும்,இரட்டைப்படை பாவங்கள் தொடர்பு கொண்டு தசை நடக்கும் பொழுது தன்னுடைய அணியின் பாவங்களின் பலனை இரட்டிப்பு செய்து அந்த பாவ பலன்களை வலிமையாகவும் நடந்தும், இரட்டைப்படை பாவங்கள் தொடர்பு கொண்டு தசை நடக்கும் பொழுது அந்த தசையில் பொதுவாக ஒற்றைப்படை பாவங்களின் பலன் சராசரியளவே நடக்கும்,


விதி 13

7ம் பாவம்,5ம் பாவம்,1ம் பாவம்,சுக்கிரன்,நடப்பு தசைகள் 7ம் பாவத்திற்கு பாதகமாக இருந்து இரண்டு புத்திகள் வலிமையாக ஒற்றைப்படை பாவங்களை தொடர்பு கொண்டு நடந்தாலும் ஜாதகருக்கு திருமணம் நடக்காது.
ஜாதகர் நகரத்தில் வசித்தால் ஆணாக இருந்தால் 40 வயிதிற்கு மேலும் திருமணம் நடக்கும்.
ஜாதகர் நகரத்தில் வசித்தால் பெண்ணாக இருந்தால் 35 வயிதிற்கு மேலும் திருமணம் நடக்கும்.
ஜாதகர் கிராமத்தில் வசித்தால் ஆணாக இருந்தால் 35 வயிதிற்கு மேலும் திருமணம் நடக்கும்.
ஜாதகர் கிராமத்தில் வசித்தால் பெண்ணாக இருந்தால் 30 வயிதிற்கு மேலும் திருமணம் நடக்கும்.
ஆனால் திருமண வாழ்க்கையில் பிரச்சனைக்குரிதாக இருக்கும்.


விதி 14

7ஆம் பாவ உபநட்சத்திர அதிபதி தான் நின்ற நட்சத்திரம் உபநட்சத்திரம் மூலமாக 6,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டால் 7ம் பாவம் 60 சதவீதம் பாதிப்பு அடைந்துஇருந்தாலும்.
7ஆம் பாவ உபஉபநட்சத்திர அதிபதி தான் நின்ற நட்சத்திரம் உபநட்சத்திரம் மூலமாக 1,3,5,7,9,11ம் பாவங்களை தொடர்பு கொண்டால் 7ம் பாவம் 25 சதவீதம் நன்றாக இருந்தாலும்.
7ஆம் பாவ ஆரம்பமுனை நட்சத்திர அதிபதி தான் நின்ற நட்சத்திரம் உபநட்சத்திரம் மூலமாக 1,3,5,7,9,11ம் பாவங்களை தொடர்பு கொண்டால் 7ம் பாவம் 15 சதவீதம் இருந்தாலும்.
7ம் பாவ விதிகொடுப்பினையை நிர்ணையம் செய்ததில் 100 சதவீதத்திற்கு 40 சதவீதம் நன்றாகவும்,மீதி 60 சதவீதம் பாதிக்கபட்டுயிருக்கும் இருக்கும்?
7ம் பாவ விதி கொடுப்பினை எடுத்து நடந்தும் அதிகாரம் 7ம் பாவ முனைகளான உப நட்சத்திரம், உப உப நட்சத்திரம், ஆரம்பமுனை நட்சத்திரம் ஆகிய மூன்றுக்குமே சம உரிமை உள்ளது.
நடக்கும் தசை 7ம் பாவ உப உப நட்சத்திரம், ஆரம்பமுனை நட்சத்திர கிரகங்களாக இருந்து,அந்த கிரகங்கள் 7ம் பாவத்திற்கு சாதகமான பாவங்களான 1,3,5,7,9,11ம் பாவங்களை தொடர்பு கொண்டுயிருந்தால் ஜாதகருக்கு திருமணம் நடக்கும். ஆனால் நடக்கும் தசையில் 7ம் பாவ உப நட்சத்திர கிரகத்தின் புத்தியில் திருமண வாழ்க்கியில் ஜாதகருக்கு பெரிய பிரச்சனை உண்டாகும்.


விதி 15

7ஆம் பாவ உபநட்சத்திர அதிபதி தான் நின்ற நட்சத்திரம் உபநட்சத்திரம் மூலமாக 6,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டால் 7ம் பாவம் 60 சதவீதம் பாதிப்பு அடைந்துஇருந்தாலும்.
7ஆம் பாவ உபஉபநட்சத்திர அதிபதி தான் நின்ற நட்சத்திரம் உபநட்சத்திரம் மூலமாக 6,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டால் 7ம் பாவம் 25 சதவீதம் பாதிப்பு அடைந்துள்ளது?
7ஆம் பாவ ஆரம்பமுனை நட்சத்திர அதிபதி தான் நின்ற நட்சத்திரம் உபநட்சத்திரம் மூலமாக 6,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டால் 7ம் பாவம் 15 சதவீதம் பாதிப்பு அடைந்துள்ளது?


ஜாதகருக்கு 45 வயது வரைக்கும் ஒற்றைப்படை பாவ தசையே நடந்த பிறகே 7ம் பாவ தசை நடக்கும் பொழுது திருமண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படும் என்று கூற கூடாது.கால தேச,வர்த்மானத்தை பார்த்து பலனை கூறவேண்டும்,அதாவது சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்படும் என்று கூறவேண்டும்.வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படும்,உடலின் சமநிலை பாதிக்கபடும் என்று கூறவேண்டும்.

No comments:

Post a Comment