Friday, 31 March 2017

உயர்கணித சார ஜோதிடத்தில் காலதாமான திருமணம் யாருக்கு?அதற்கான பாவங்கள் யாவை?அதற்கான கிரக்காரகம் யாது? ஜாதகஆய்வு 001

உயர்கணித சார ஜோதிடத்தில் காலதாமான திருமணம் யாருக்கு?அதற்கான பாவங்கள் யாவை?அதற்கான கிரக்காரகம் யாது? ஜாதகஆய்வு 001

பிறந்த தேதி  16-5-1979.
பிறந்த நேரம் 02-15( மதியம் )—
பிறந்த இடம் சென்னை TRIPLICANE
 


ஜாதகருக்கு 37 வயது 10மாதங்கள் 15 நாட்கள் ஆகிறது.ஜாதகருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
 
 


விதி 1


லக்னம் கொடுப்பினை 7ஆம் பாவத்திற்க்கு சாதகமா அல்லது பாதகமா என்று பார்பது?


லக்ன பாவம் 4,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டு 7ம் பாவத்தின் காரகத்தையும், 1,5,9ம் பாவ காரகங்களையும் அனுபவிப்பதற்கு எதிராகயுள்ளது.1ம் பாவம் என்பது சுயமுயற்சி,சுய சிந்தனை,நோய் எதிர்ப்பு தன்னை,ஆரோக்கியம், கௌரவம், பெருதன்மை, தனி தன்மை,தன்னுடைய திறமையை வெளிபடுத்துதல், கௌரவத்திற்கு முக்கியத்துவம்,விரைந்து செயல்படுதல்,சுயட்சையான செயல்கள் போன்றவை 1ம் பாவ காரகங்களுக்கு எதிராக ஜாதகரின் செயல்பாடுயிருக்கும்.4,8,12ம் பாவங்கள் என்பது 1,5,9ம் பாவங்களுக்கு 4,8,12ம் பாவங்களாக வருவமால் 5,9ம் பாவங்களின் செயல்களுக்கு எதிராக ஜாதகரின் சிந்தனை,செயல்பாடுகள் இருக்கும்.
இருதயம், பாலின ஹார்மோன்கள்காதல்,கலை, இலக்கியம், மென்மையான உணர்வுகள், மற்றவர்களிடம் மயங்குவது,நடிப்பு, பாசம்,விரும்தோம்பல்,விளையாட்டு,பொழது போக்கு,உடல் உழைப்பு இல்லாத வருமானம்,லாட்டரி,ஷேர் மார்கெட்,உடல் அழகு,கவர்ச்சி, குழந்தை,வர்ணனை,கவிதை,ஆடல்,பாடல்,இசை,ஜோதிடர்,மற்றவர்களுக்கு ஆலோசனை கூறுவது,சிற்றின்பத்தை அனுபவித்தல்,மந்திர உச்சாடனை குல தெய்வம்,கடன் அடைக்கபடுதல்,நோய் குணமாகுதல்,சமாதான உணவு, விட்டுக்கொடுத்தல், கொஞ்சல், சூதாட்டம், இயற்கை, கற்பனை,தியானம், யோகா, தவம், அரசியல். காதலில் அசிங்கம் வரும் அல்லது தோல்வி வரும், விளையாடும் போது அடிபடுதல்,யூகபேரத்தில் நஷ்டம்வருதல்,பொழதுபோக்கு விஷயங்களில் ஈடுபாட்டுஇல்லைமை அல்லது அதன் மூலமாக பிரச்சனைகள் வருவது,திருமணத்திற்கு முன்பே ரகசியமாக தாம்பத்தியம் கொள்வது மூலமாக சழூதாயத்தில் அசிங்கம்,அவமான அடையதல்,தாம்பத்தில் இயற்க்கைக்கு மாறன சிந்தனை,செயல்பாடுகளை கொண்டுயிருப்பார்.போன்ற 5ம் பாவ காரகங்களுக்கு எதிரான ஜாதகரின் சிந்தனை இருக்கும்.



விதி 2


7ஆம் பாவம் தன்னுடைய பாவத்திற்க்கும் சாதகமான அல்லது பாதகமான பாவங்களை தொடர்புகொண்டுள்ளதா?
7ம் பாவம் 4,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டுள்ளது.7ம் பாவம் என்பது மற்றொருவருடன் இணைந்து செயல்படுவதை குறிக்கும்.ஸ்பரிச சுகத்தை மற்றொருவருக்கு கொடுத்து நாம் பெறுவதைக்குறிக்கும்.இவை ஜாதகருக்கு முழுமையாக மறுக்கபட்டுள்ளது.சழூகத்தின் மூலம் ஜாதகருக்கு அசிங்கம் அவமானம் மட்டுமே வரும்,நஷ்டம்,விரையங்கள் மட்டுமே வரும்.



விதி 3


7ஆம் பாவம் லக்ன பாவத்திற்க்கு சாதகமான அல்லது பாதகமான பாவங்களை தொடர்புகொண்டுள்ளதா?
பாதகமான பாவங்களை தொடர்புகொண்டுள்ளது.



விதி 4



களத்திர காரகன் சுக்கிரன் 7ஆம் பாவத்திற்க்கு சாதகமான அல்லது பாதகமான பாவங்களை தொடர்புகொண்டுள்ளதா?
2,10,12ம் பாவங்களை தொடர்பு கொண்டுயிருந்து நடுநிலைதன்மையுடன் உள்ளார்.





விதி 5
நடப்பு தசை மற்றும் புத்திகள் லக்னம் மற்றும் 7ஆம் பாவத்திற்கு சாதகமான அல்லது பாதகமான பாவங்களை தொடர்புகொண்டுள்ளதா?
நடப்பு தசை ராகு 4,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டுள்ளது.ராகு 3,7,11ம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக இருந்தும்,11ம் பாவத்திற்கு உபஉப நட்சத்திரமாக இருந்தும் லக்னத்திற்கு பாதகமான 4,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டுள்ளது,தன்னுடைய பாவத்திற்கு 2,6,10ம் பாவங்களை தொடர்பு கொண்டு சராசரி அளவிற்கு மட்டுத் வளர்ந்து பிறகு வளர்ச்சியை நின்றுவிடும்.
நடப்பு புத்தி 1,5,9ம் பாவங்களை தொடர்பு கொண்டுள்ளது,இவை தசைநாதன் தொடர்பு கொண்டுள்ள 4,8,12ம் பாவங்களும் மூலமாக உடைக்கபடும்.



விதி 9


7ம் பாவம் பாதிக்கபட்டுருக்கும் பொழுது 5ம் பாவம் தன்னுடைய பாவத்திற்கும், லக்னத்திற்கும் சாதகமான பாவங்களை கண்டிப்பாக தொடர்புக்கொண்டுடிருக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளபடுகிறது.ஏனெனில் 5ம் பாவத்தில் காதல் வயப்படுதல்,இன்ப உணர்வுகளை அதிகமாக நுகருதல்,எதையும் உணர்வு பூர்வமாக சிந்தித்தல்,ரசனை,சிற்றின்ம்பம் அதிகமான நாட்டம், உடலைசிறிதும் வருத்தாமல் இருத்தல்,கவர்ச்சிகளுக்கு எளிதில் மயங்குதல்,கற்பனை கலந்த உணர்வுகள், உல்லாசம்,சல்லாபம்,காமம்,தாம்பத்தியம்,கலை,தன்னை அழகுபடுத்திக்கொள்ளுதல், பொழுதுபோக்கு விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வது, ஹார்மோன், மயக்கம், மற்றவர்களிடம் மயங்குதல்,ஈர்ப்பு,விட்டுக்கொடுக்கும் குணம்,அரவணைக்கும் வாழ்க்கை,பாசம்,பாசம்,உணர்ச்சிவாய்படுதல் தமது செயல்களால் மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துதல்,கேளிக்கைகள்,சூதாட்டம்,சினிமா,நாடகம்,இசை,எதையும் அளவிற்கு அதிகமாக வர்ணணை செய்தல்,மென்மையான உணர்வுகள் போன்ற பல காரகங்களை தன்னிடத்தே கொண்டுள்ளது 5ம் பாவம் ஆகும்.




விதி 13


7ம் பாவம்,5ம் பாவம்,1ம் பாவம்,சுக்கிரன்,நடப்பு தசைகள் 7ம் பாவத்திற்கு பாதகமாக இருந்து இரண்டு புத்திகள் வலிமையாக ஒற்றைப்படை பாவங்களை தொடர்பு கொண்டு நடந்தாலும் ஜாதகருக்கு திருமணம் நடக்காது.
ஜாதகர் நகரத்தில் வசித்தால் ஆணாக இருந்தால் 40 வயிதிற்கு மேலும் திருமணம் நடக்கும்.
ஜாதகர் நகரத்தில் வசித்தால் பெண்ணாக இருந்தால் 35 வயிதிற்கு மேலும் திருமணம் நடக்கும்.
ஜாதகர் கிராமத்தில் வசித்தால் ஆணாக இருந்தால் 35 வயிதிற்கு மேலும் திருமணம் நடக்கும்.
ஜாதகர் கிராமத்தில் வசித்தால் பெண்ணாக இருந்தால் 30 வயிதிற்கு மேலும் திருமணம் நடக்கும்.
ஆனால் திருமண வாழ்க்கையில் பிரச்சனைக்குரிதாக இருக்கும்.



No comments:

Post a Comment