உயர்கணித சார ஜோதிடத்தில் காலதாமான திருமணம் யாருக்கு?அதற்கான பாவங்கள் யாவை?அதற்கான கிரக்காரகம் யாது?காலதாமான திருமணத்திற்கான விதிகள் யாவை?
பாகம் 3
விதி 16
7ஆம் பாவ உபநட்சத்திர அதிபதி தான் நின்ற நட்சத்திரம் உபநட்சத்திரம் மூலமாக 6,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டால் 7ம் பாவம் 60 சதவீதம் பாதிப்பு அடையும்.
ஒரு பாவத்தை உடனே துண்டிக்கும் அதனுடைய 12ம் பாவம் வலிமையை பொறுத்து, ஆய்வுக்குரிய பாவத்தின் பாதிப்பின் தன்மையை ஆராய வேண்டும்.
ஆய்வுக்குரிய பாவம் பாதிக்கபட்டுள்ள போது அந்த பாவத்தின் 8,12ம் பாவங்கள் வலிமையாக இருக்ககூடாது என்பது சிறப்புவிதியாகும்.
இதன்பொருள் ஒரு பாவம் வலிமையாக இருக்கும்பொழது அது தன்னுடைபாவத்திற்கு 2,6ம் பாவங்களை பாதிக்கும் செயலை செய்யும்.
6ம் பாவம் 4,6,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டுயிருக்கு பொழுது 6ம் பாவ தசையில் 6ம் பாவம் தன்னுடைய பாவத்திற்கு 2,6ம் பாவங்களான 7,11(7,11ம் பாவங்களுக்கு 8,12ம் பாவங்களாக 6ம் பாவம் வரும்)ம் பாவங்களை கெடுக்கும் வேளையை செய்யும்.
ஏற்கனவே 7ம் பாவம் பாதிக்கபட்டுள்ளபொழுது 6ம் பாவம் வலிமையாகயிருக்கும் பொழுது 7ம் பாவத்தின் மீது கூடுதலாக பாதிப்பை 6ம் பாவம் தரும்.
விதி 17
1,7ம் பாவங்களுக்கு ஒரு கிரகமே உப நட்சத்திரமாக இருந்து 4,6,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டுயிருக்கும் பொழுது வலிமையான திருமண தடையை தரும்.
விதி 18
6,7ம் பாவங்களுக்கு ஒரு கிரகமே உப நட்சத்திரமாக இருந்து 4,6,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டுயிருக்கும் பொழுது வலிமையான திருமண தடையை தரும்.இதில் 7ம் பாவத்தை கெடுத்துக்கொண்டு 6ம் பாவத்தை அந்த கிரகமே வலிமையாக செயல்படுத்தும்.
விதி 19
7ம் பாவத்திற்கு உப நட்சத்திரமாக சுக்கிரன் இருந்து 4,6,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டுயிருக்கும் பொழுது வலிமையான திருமண தடையை தரும்.
விதி 20
7ம் பாவத்திற்கு உப நட்சத்திரமாக புதன்,குரு,சுக்கிரன்,சனி,ராகு இருந்து 4,6,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டுயிருந்து இவர்களின் தசை ஆணுக்கு 22 வயது முதலும் பெண்ணுக்கு 18 வயது முதல் நடக்கும்பொழுது வலிமையான திருமண தடையை தரும்.விதி மதி வழியாக நடக்கும்பொழுது அந்த பாவத்தின் செயல் வலிமை செயல்படும் என்ற விதிபடி.
விதி 21
1,3,7,11ம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக இருந்து 4,6,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டுயிருக்கும்பொழுது 1ம் பாவம் என்பது ஜாதகர் அனுபவிக்கும் ஒட்டுமொத்த இன்பத்தை குறிக்கும்,3ம் பாவம் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மற்றவர்களுடன் வளைந்து கொடுத்தல்,விட்டுகொடுத்தல்,அப்கிரேடு,7ம் பாவம் மற்றவர்களுடன் இணைந்து செயல்படுதல்,பரிமாறிக்கொள்வது,ஸ்பரிச சுகத்தை நாம் மற்றவர்களுக்கு கொடுத்து பெறுதலை குறிக்கும்,11ம் பாவம் என்பது திருப்தி, நண்பர்கள்,கேளிகை,உல்லாசத்தை குறிக்கும் இந்த பாவங்கள் இரட்டைப்படை பாவங்களை தொடர்பு கொள்ளும்பொழுது இந்த பாவங்களில் உள்ள அகம் சார்ந்த காரகங்களை கெடுத்துக்கொண்டு புறந்த சார்ந்த காரங்களையில் ஜாதகர் அதிகமாக ஈடுபடுவார்.
விதி 22
6,7ம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக ஒரு கிரகம் இருந்து 6,8,12ம் பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது மிகவும் காலதாமத திருமண தடையை தரும்.இங்கே 7ம் பாவம் 6,8ம் பாவங்களுக்கு நடுவில் நசுக்கபடுகிறது,இதை பாரம்பரியத்தில் பாவகத் திரியோகம் என்று கூறுவர்.ஜாதகருக்கு இரண்டாவது திருமணமும் நடப்பது சிம்ம்ம் ஆகும்
விதி 23
7ம் பாவத்தின் உப நட்சத்திரம், உப உப நட்சத்திரம்,7ம் பாவத்தின் ஆரம்பமுனை நட்சத்திரம் மூன்று 6,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டுயிருந்தால்,7ம் பாவம் 100 சதவீதம் பாதிக்பட்டுள்ளது.7ம் பாவத்திற்கு சாதகமான ஒற்றைப்படை பாவ தசை நடந்தாலும் 35 வயதிற்கு மேலே திருமணம் நடக்கும்.விதிக்கொடுப்பினை மறுத்த விதியை ஜாதகரால் சரியான பருவத்தில் அனுபவிக்கமுடியாது.
விதி 24
7ம் பாவத்தின் உப நட்சத்திரம், உப உப நட்சத்திரம்,7ம் பாவத்தின் ஆரம்பமுனை நட்சத்திரம் மூன்று 6,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டுயிருந்தால்,7ம் பாவம் 100 சதவீதம் பாதிக்பட்டுள்ளது.7ம் பாவத்திற்கு சாதகமான ஒற்றைப்படை பாவ தசை நடந்தாலும் 35 வயதிற்கு மேலே திருமணம் நடக்கும்.விதிக்கொடுப்பினை மறுத்த விஷயத்தை தசையால் கொடுக்கமுடியாது. ஜாதகரால் சரியான பருவத்தில் அனுபவிக்கமுடியாது.
விதி 25
7ம் பாவத்தின் உப நட்சத்திரமாக சுக்கிரன் இருந்து. சுக்கிரனே 2,8,10,12ம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாக இருந்து தான் நின்ற நட்சத்திரம் உப நட்சத்திரம் மூலமாக 2,8,12ம் பாவங்களை தொடர்பு கொள்ளும்பொழுது,தன்னுடைய கையில் உள்ள 7ம் பாவத்தை கெடுத்துக்கொண்டு,தன்னுடைய கையில் உள்ள 2,8,10,12ம் பாவங்கள் மூலமாக 2,8,12ம் பாவங்களை செயல்படுத்தும் பொழுது ஜாதகருக்கு 40 வயதிற்க்கு மேலே திருமணம் ஆகும்.
விதி 26
7,12ம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக ஒரு கிரகம் இருந்து தான் நின்ற நட்சத்திரம் உப நட்சத்திரம் மூலமாக 4,6,12ம் பாவங்களை தொடர்பு கொள்ளும்பொழுது, தன்னுடைய கையில் உள்ள 7ம் பாவத்தை கெடுத்துக்கொண்டு,தன்னுடைய கையில் உள்ள 12ம் பாவத்தை செயல்படுத்தும்.12ம் பாவம் என்பது லக்னத்திற்கு தீமையான பாவம் என்பதால் திருமணம் தள்ளி போகும்
விதி 27
1,7ம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக ஒரு கிரகம் இருந்து தான் நின்ற நட்சத்திரம் உப நட்சத்திரம் மூலமாக 6,12ம் பாவங்களை தொடர்பு கொள்ளும்பொழுது, தான் நின்ற நட்சத்திரம் உப நட்சத்திரம் கிரகங்கள் 7ம் பாவத்திற்கு உபஉப நட்சத்திரமாகவோ அல்லது 7ம் பாவத்திற்கு ஆரம்பமுனை நட்சத்திரமாக இருந்து தன்னுடைய கையில் உள்ள 7ம் பாவத்தை கெடுத்துக்கொண்டு, தான் நின்ற நட்சத்திரம் உப நட்சத்திரம் கிரகத்தின் 7ம் பாவத்தின் கெடுத்துக்கு கொண்டு தன்னுடைய கையில் உள்ள 12ம் பாவத்தை செயல்படுத்தும்.12ம் பாவம் என்பது லக்னத்திற்கு தீமையான பாவம் என்பதால் திருமணம் தள்ளி போகும்
No comments:
Post a Comment