Sunday, 5 June 2016

யாருக்கு காதில் சீழ் வரும் மற்றும் கோபம் பிடிவாத குணம் மற்றும் பயம்வரும் ஆய்வு ஜாதகம் 1

யாருக்கு காதில் சீழ் வரும் மற்றும் கோபம் பிடிவாத குணம் மற்றும் பயம்வரும் ஆய்வு ஜாதகம் 1 ? ADVANCED KP STELLAR ASTROLOGY (உயர் கணித சார ஜோதிட) முறையில் மிகவும் துல்லியமான ஜோதிட விளக்கம்


வரிசை எண் 5091 இவர் பெண்,பிறந்த தேதி 05.12.1997 வெள்ளி கிழமை பிறந்த நேரம் 4.00.00 பிற்பகல் பிறந்த இடம் செய்யார் பிறந்த நேரத்தை திருத்திய நேரம்4.00.30 பிற்பகல் ஆளும் கிரகம் எடுத்த தேதி 23.05.2016 அன்று ஆளும் கிரகம் எடுத்த நேரம் 2.37.47 பிற்பகல் ஆளும் கிரகம் எடுத்த இடம் காஞ்சிபுரம்



எந்த விதமான குழப்பமும் இல்லாத அடிப்படை விதிகளுக்கு மாறாத தெளிவான விதிகள்விதி ஒன்று


அதற்கு நாம் ஆய்வு செய்யவேண்டிய பாவங்கள் மற்றும் கிரக காரகங்கள் பன் வருமாறு


ஒரு உறுப்பை சிதைப்பது,உருகுலையைசெய்வது,பார்பதற்கு விகாரமாக இருப்பது,சீழ்வருவது,துர்நாற்றம் வருவது போன்றவைக்கு ராகு கேது கிரக காரகம் ஆகும்.



லக்ன உப நட்சத்திரம் புதன், புதன் நின்ற நட்சத்திரம் கேது ஆகும், புதன் நின்ற உப நட்சத்திரம் குரு இருக்கிறார்.


புதன் நின்ற நட்சத்திரம் நின்ற உப நட்சத்திரம் மூலமாக 4,10ஆம் பாவ வேளையை செய்கிறார்.


லக்ன உப உப நட்சத்திரம் புதன், புதன் நின்ற நட்சத்திரம் கேது ஆகும், புதன் நின்ற உப நட்சத்திரம் குரு இருக்கிறார்.


புதன் நின்ற நட்சத்திரம் நின்ற உப நட்சத்திரம் மூலமாக 4,10ஆம் பாவ வேளையை செய்கிறார்.


1,2,5,6,7,9,11,12 ஆம் முறையே 4,10ஆம் பாவங்களை தொடர்பு கொள்கிறது.


6ஆம் பாவம் வலுபெற்றாலே அதிகமாக பிடிவாத குணம் இருக்கும். உறுதியான மனமும் இருக்கும்.



5ஆம் பாவம் 4,10ஆம் பாவங்களை தொடர்பு கொண்டு யிருந்தால் பொழது போக்கு விஷயங்களில் நாட்டம் குறைவு,உணர்வு பூர்வமாக பார்க்காமல் அனைத்தையும் அறிவியல் பூர்வமாக பார்பது, முகத்திற்க்கு பவுடர் கூட பூசமாட்டார்.



11ஆம் பாவம் 4,10ஆம் பாவங்களை தொடர்பு கொண்டு யிருந்தால் உல்லாசம், நண்பர்கள் துறந்து வேளை செய்வது. கையிருப்பது பணத்தை முதலீடு செய்வது, திருப்தி அற்ற மனநிலையில் இருப்பது.


பெருபாலன பாவங்கள் 5,11ஆம் பாவங்களுக்கு 12ஆம் பாவங்களான 4,10யை தொடர்பு கொண்டுள்ளதால் இயந்திரதனமான மனிதர்


ஜாதகர்.சுகபோகங்களை துறந்தவர்க்கு கோபம் சொந்தம் ஆகிறது.
கோபத்தை 3ஆம் பாவம் சொல்லும்.


3,8ஆம் பாவங்களுக்கு சந்திரன் உப நட்சத்திரமாக இருப்பதால்3ஆம் பாவத்தில் உள்ள மனநிலை,உணர்வு புலன்கள்,நரம்பு மண்டலம்,தைரியம் போன்றவை பாதிக்கபடும்.


இவை பாதித்தவர் உடனுக்கு உடன் கோப்படகூடியவராக இருப்பார்.எளிதில் உணர்ச்சிவசபடுவராக இருப்பார்,படபடப்பானவர்.



மற்ற பாவங்கள் வலுமையாக உள்ளதால் ஜாதகர் பயத்தை காட்டமால் மற்ற வர்களின் மீது கோபத்தையும், ஆதிக்கத்தை செலுத்தி துன்புறுத்துவார்.

ஜாதகரின் தயார் ஜாதகர் பயபட மாட்டார் என்று கூறினார் அதற்க்கு நான் ஜாதகர் அமைதியான சூழ்நிலையில் தனிமையாக இருக்கும் போது திடீரென அவரை சத்தமாக கூப்பிட்டால் ஜாதகர் என்ன செய்வார் என்று நான் கேட்டதற்க்கு அதிகமாக கோப்படுவார் என்று கூறினார் இவர்கள் பயத்தை மற்றவர்களின் மீது கோபமாக செலுத்துவார்கள் என்று கூறினேன்.


 3,8ஆம் பாவங்கள் சந்திரனாக இருப்பதால் பயம், குழப்பமான மனநிலை இருக்கும் மற்றும் 3ஆம் பாவத்தில் உள்ள காது,தோள்பட்டை,கைகளில் பிரச்சனைகள் இருக்கும்.



ஜாதகருக்கு ராகு தசையில் ராகு புத்தி காலங்களில் காதில் சீழ் அதிகமாக வந்துள்ளது.


3,8ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக சந்திரன் உள்ளார்.
சந்திர நின்ற நட்சத்திரம் நடப்பு தசை நாதனும்,சந்திர நின்ற உபநட்சத்திரம்
 நடப்பு புத்தி நாதனுமாக இருப்பார்.



ராகு தசையில் 3,8ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக உள்ள சந்திரன் நின்ற நட்சத்திரம் ராகுவாகவும் சந்திர நின்ற உபநட்சத்திரம் நடப்பு புத்தி நாதன் ராகு வாக இருப்பார்


ராகு 9ஆம் பாவத்திற்க்கு உப நட்சத்திரமாகவும்,3,8,9ஆம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாகவும்,3,11ஆம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாகவும் உள்ளார்.



சந்திரன் 3ஆம் பாவ மூலமாக தொடர்பு 9,3,8,9,3,11ஆம் பாவங்களை தொடர்பு கொள்கிறது.


சந்திரன் 8ஆம் பாவ மூலமாக தொடர்பு 9,3,8,9,3,11ஆம் பாவங்களை தொடர்பு கொள்கிறது.


8ஆம் பாவம் எந்த பாவங்களை தொடர்பு கொள்கிறதோ அந்த பாவங்களில் எதிர்பாரத நன்மை அல்லது தீமை நடக்கும் அப்பொழது உறுப்பு அமைப்பில் மாறுதல் அல்லது உறுப்பு இயக்கத்தில் மாறுதல் வரும்,இயல்பாக அனைவரு க்கு காதில் சீழ் வராது இதைதான் உறுப்பு அமைப்பில் மாறுதல் அல்லது உறுப்பு இயக்கத்தில் மாறுதல் என்று கூறுகிறோம்.


9ஆம் பாவம் என்பது இயற்க்கையாக இருக்கும் உறுப்பு அமைப்பை குறிக்கும்,9ஆம் பாவ உப நட்சத்திரம் 8ஆம் பாவத்திற்க்கும் உபஉப நட்சத்திரமாக இருக்கும் போது அந்த உறுப்பில் மாறுதல்கள் வரும் என்பதை இதன் மூலமாக நாம் அறிய முடிகிறது.

No comments:

Post a Comment