Wednesday, 1 June 2016

யாருக்கு மனநிலை பாதிப்பு வரும் ஆய்வு ஜாதகம் 3



யாருக்கு மனநிலை பாதிப்பு வரும் ஆய்வு ஜாதகம் 3 ? ADVANCED KP STELLAR ASTROLOGY (உயர் கணித சார ஜோதிட) முறையில் மிகவும் துல்லியமான ஜோதிட விளக்கம்
வரிசை எண் 5088 இவர் ஆண்,பிறந்த தேதி 23.09.1964 புதன் கிழமை பிறந்த நேரம் 10.30 பிற்பகல் பிறந்த இடம் செய்யார் பிறந்த நேரத்தை திருத்திய நேரம் 10.29.05 பிற்பகல் ஆளும் கிரகம் எடுத்த தேதி 23.05.2016 அன்று ஆளம் கிரகம் எடுத்த நேரம் 1.21.40 பிற்பகல் ஆளும் கிரகம் எடுத்த இடம் காஞ்சிபுரம்
யாருக்கு மனநிலை பாதிப்பு வரும் மனநிலை பாதிப்பை பற்றிய உயர் கணித சார ஜோதிட முறையில் மருத்துவ ஜோதிட புத்தகத்தில் ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ் கருத்துக்கள்
3ஆம் பாவம் என்பது மாற்றங்களை குறிக்கும் பாவமாகும்,நமது மனமும் அடிக்கடி மாறக் கூடியது.
மனத்தில் தோன்றும் பல்வேறு தீவிர உணர்ச்சிகளை வெளிப்பத்தாமல்,தானே அடக்கி வைத்திருக்கும் ஒருவருக்கு மனம் பாதிப்படைகின்றது.
மனதில் உள்ள உணர்ச்சிகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் தனக்கு தானே சிந்தித்து கொண்டிருப்பது தான் மனநோய்க்கு ஆரம்பகட்டம் ஆகும்.
நம் உடலில் ஒரு குறிப்பிட் சத்து அகிமாகவும்,ஒரு குறிப்பிட்ட சத்து குறைந் தும் இருந்தால் உடலில் ஒரு சமசீரற்ற நிலை உண்டாகும்.உடல் அதை அதை நமக்கு தெரிவிக்கும் முறைக்குதான் நோய் என்று நாம் கூறுகின்றோம்.

அந்த மனம் பாதிப்படைந்த உறுப்பில் உண்டாகும் வலி,அல்லது வித்த யாசதான நிகழ்வுகள் மூலம் அந்த உறுப்பில் ஏதோ பிரச்சனை என்று நமது மனதால் முடிவெடுத்து அதற்குண்டான சிகிச்சைகளை மேற்கொள் கின்றோம்.

மனபாதிக்கபட்டால் நாம் எதையும் சரியாக அறிவுப் பூர்வாக செயல்படுத்த முடியாது,மனநோய் என்பது ஒரு குறிப்பிட்ட சத்தி குறைவதாலும் அல்லது நோய் கிருமிகளாலும் வரக்கூடிய நோய் அல்ல.

மனசமநிலையில் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை பற்றி மட்டும்,திரும்ப திரும்ப சிந்தனை செய்வதன் மூலமே ஒருவருக்கு மன்நோய்வருகின்றது.

3ஆம் பாவம் பாதிக்கபட்ட ஜாதகர் தன்னை பற்றி மற்றவர்களைவிட அதிக மதிப்பீடுகளை(Ego Stress) கொண்டிருப்பார்,எனவே யாராவது இவர் செய்வதை குறை கூறினால் அதை ஜாதகரால் தாங்கி கொள்ள முடியாது இது திரும்ப திரும்ப நடைபெறும்போது ஜாதகருக்கு மன அழத்தம் (Stress) உண்டாகி அது படிப்படியாக அதிகரித்து மனநோயாக மாற வாய்ப்பு உண்டு.


3ஆம் பாவம் 6ஆம் பாவம் தொடர்பு கொண்டுயிருந்தால் கோப உணர்ச்சி அதிகமாக இருக்கும்,ஜாதகர் தன்னுடைய கோபத்தை மற்றவர்களின் மீது ஆதிக்கமாக செலுத்துவார்,ஜாதகர் மற்றவர்களுக்கு கொடுமை இழைப்பதன் மூலம் மகிழ்ச்சி பெறும் நபர்களாக (Sadust) இருப்பார்கள். மற்றபடி மனநோய் பாதிப்பு இருக்காது.

3ஆம் பாவம் பாதிக்கபட்டால் ஜாகரின் சுய அறிவு சிந்தனை விரிவாக்கம் ஆகாமலே பாதிக்கபட்டு அப்படியே முடங்கிவிடும்.ஒருவரின் மனம் அல்லது மனோநிலை, அது தடுமாறாமல் பலமாக இருந்தால் தான் சிறப்பு, அதற்கு தான் மனோபலம் என்று பெயர்.

3ஆம் பாவம் 8,12ஆம் பாவம் தொடர்பு கொள்ளும் போது இது கடுமை யான மன பாதிப்பினை தருகின்றது. லக்னத்தின் சுய கௌரவம் இங்கு கடுமையாக பாதிக்கின்றது.
3ஆம் பாவம் 8,12ஆம் பாவங்களை தொடர்பு கொள் கின்றவர்கள் தங்களை தாங்களே துன்புறுத்தி கொள் பவர்களாக இருப்பார்,தற்கொலை எண்ணங்கள் அதிகமாக இருக்கும்,தாழ்வுமனபான்மை அதிகமாக உள்ளவர்களாக இருப்பார் கள்.ஜாதகர் தனக்கு தானே பிரச்சனைகளை அனுபவிப்பார்.
8ஆம் பாவம் என்பது எதிர்மறையான சிந்தனைகளையும், எதிர்மறையான கற்பனைபளையும் குறிக்கும்.

12ஆம் பாவம் என்பது தாழ்வு மனப்பான்மையையும், தோல்வி மற்றும் மற்றவர்களுக்கு அடிபணிந்து நடக்கும் பண்புகளையும் குறிக்கும்.


3ஆம் பாவம் 8,12ஆம் பாவங்களை தொடர்பினை பெறும் போது உண்டாகும் மனநிலை கோளாறுகளை மனநோய் என்று கூறுவதை விட மன பாதிப்பு என்று கூறுவதே சிறப்பு,இதை மனநல ஆலோசனைகள்(Counselling) மூலம் குணப்படுத்த முடியாது.


மூளையில் மின் சிகிச்சை,அளவுக்கு அதிகமான மாத்திரை, வாழ்நாள் முழுவதும் நூக்கமாத்திரை சாப்பிடுதல் போன்றவற்றின் மூலம் ஓரளவுக்கு கட்டுப்படுத்தலாம்,ஆனால் அதை முற்றிலும் குணப்படுத்த முடியாது.
-------இவ்வாறாக மருத்துவ ஜோதிட புத்தகத்தில் ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ் அவர்கள் இன்னும் தெளிவாக விளக்கியுள்ளார்.----------


எந்த விதமான குழப்பமும் இல்லாத அடிப்படை விதிகளுக்கு மாறாத தெளிவான விதிகள்விதி ஒன்று
அதற்கு நாம் ஆய்வு செய்யவேண்டிய பாவங்கள் மற்றும் கிரக காரகங்கள் பன் வருமாறு
1) 3ஆம் பாவம் மற்றும் மனோகாரகன் சந்திரன், சிறிய அளவு குழப்பமான மனநிலைக்கு சனி.பெரிய அளவில் குழப்பமான மன நிலைக்கு ராகு கிரக காரகம் ஆகும்.
2) நரம்பு பாதிப்பு அதற்க்கு கிரக காரகம் புதன்(நரம்பு மண்டலம் பாதிப்பு மனநிலை பாதிப்பை அதிகரிக்கும்)
3)லக்னம் கொடுப்பினை
4) தசை கொடுப்பினை
லக்ன உப நட்சத்திரம் கேது,கேது நின்ற நட்சத்திரம் கேது ஆகும்,கேது நின்ற உப நட்சத்திரம் சந்திரன் இருக்கிறார்.
கேது நின்ற நட்சத்திரம் நின்ற உப நட்சத்திரம் மூலமாக 1ஆம் பாவத்தை கெடுத்துக்கொண்டு 6,8ஆம் பாவ வேளையை செய்கிறார்.
லக்ன உப உப நட்சத்திரம் சனி, சனி நின்ற நட்சத்திரம் செவ்வாய் ஆகும்,சனி நின்ற உப நட்சத்திரம் சந்திரன் இருக்கிறார்.
சனி நின்ற நட்சத்திரம் நின்ற உப நட்சத்திரம் மூலமாக 1ஆம் பாவத்தை கெடுத்துக்கொண்டு 6,8ஆம் பாவ வேளையை செய்கிறார்.
1,5,9ஆம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாக சந்திரன் உள்ளார் இதனால் 1,5,9ஆம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரத்தின் 15 சதவீதபங்கு பலன் நடப்பு தசை மற்றும் புத்தி பொறுத்து மாறும்.
ஜாதகருக்கு தலையில் அடிபடுதல்,மயக்கம்,தலை சுற்றுதல்,தலையில் நீர்கோத்துக்கொள்ளுதல்,தலைவலி போன்ற பிரச்சனைகள் இருக்க வாய்ப்புள்ளது,
மனநிலை பாதிப்பு உள்ளவர்களுக்கு இது போல லக்னம் 6,8ஆம் பாவங்களை தொடர்பு கொள்ளும் போது மனநிலை பாதிப்பு இன்னும் அதிகபடுத்தும்.
லக்னம் 6ஆம் பாவ தொடர்பு மற்றவர்களில் ஜாதகர் தன்னுடைய கோபத்தை மற்றவர்களின் மீது ஆதிக்கமாக செலுத்துவார்,ஜாதகர் மற்றவர்களுக்கு கொடுமை இழைப்பதன் மூலம் மகிழ்ச்சி பெறும் நபர்களாக (Sadust) இருப்பார்கள்.
லக்னம் 8ஆம் பாவ தொடர்பு குழப்பமான மனநிலையை குறிக்கும்,எதிர்மறை யான சிந்தனையை குறிக்கும் இது மனநிலை பாதிப்பை அதிகரிக்கும்.
1ஆம் பாவ கொடுப்பினை மனநிலை பாதிப்பை இன்னும் அதிகமாக்கும் நிலையில் உள்ளது,ஜாதகரால் அதிகமாக பாதிப்பு மற்றவர்களுக்கு உண்டாகும்,ஜாதகரை கட்டுபடுத்த முடியாது.

3 ஆம் பாவ உப நட்சத்திரம் செவ்வாய், செவ்வாய் நின்ற நட்சத்திரம் சனி ஆகும், செவ்வாய் நின்ற உப நட்சத்திரம் சந்திரன் இருக்கிறார்.
செவ்வாய் நின்ற நட்சத்திரம் நின்ற உப நட்சத்திரம் மூலமாக 3ஆம் பாவத்தை கெடுத்துக்கொண்டு 6,8,10ஆம் பாவ வேளையை செய்கிறார்.

3ஆம் பாவம் 6 ஆம் பாவத்தை கோப உணர்ச்சி அதிகமாக இருக்கும், ஜாதகர் தன்னுடைய கோபத்தை மற்றவர்களின் மீது ஆதிக்கமாக செலுத்துவார், ஜாதகர் மற்றவர்களுக்கு கொடுமை இழைப்பதன் மூலம் மகிழ்ச்சி பெறும் நபர்களாக (Sadust) இருப்பார்கள். மற்றபடி மனநோய் பாதிப்பு இருக்காது.

3ஆம் பாவம் 8 ஆம் பாவத்தை தொடர்பு கொள்கின்றவர் கள் தங்களை தாங்களே துன்புறுத்தி கொள்பவர்களாக இருப்பார்,தற்கொலை எண்ணங்கள் அதிகமாக இருக்கும், தாழ்வுமனபான்மை அதிகமாக உள்ளவர்களாக இருப்பார் கள்.ஜாதகர் தனக்கு தானே பிரச்சனைகளை அனுபவிப்பார்.
3ஆம் பாவம் 100 சதவீதமும் 6,8ஆம் பாவங்களை தொடர்பு கொண்டுள்ளது.இது ஒரு முழுமையான மனநிலை பாதிப்பு உள்ள ஜாதகர் ஆவார்.
கிரக காரகம் சந்திரன் 6,8ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக இருப்பது குழப்பமான மனநிலையை குறிக்கும்.
சந்திரன் 1,5,9ஆம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாக இருப்பது குழப்பமான மனநிலையை குறிக்கும்.
சந்திரன் எந்த வித்த்திலும் 3ஆம் பாவம் சம்பந்தம்படவில்லை அதனால் மனநிலை பாதிப்பு முழுமையான அளவிற்க்கு பாதிப்பை தரவில்லை.
நரம்பு மண்டலத்தை குறிக்கும் புதன் பாதிப்பு அடைவில்லை அதனால் மனநிலை பாதிப்பு அதிகமாகவில்லை.
சந்திர தசையின் இறுதி பகுதில் 2004 முதல் தொழியில் பெரிய நஷ்டம் ஏற்பட்டது இதனால் ஜாதகருக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டது 4ஆண்டுகள் மருத்துவம் பார்த்து சரியானதாக சொன்னார்கள்.

No comments:

Post a Comment