Friday, 1 July 2016

யாருக்கு மனநிலை பாதிப்பு வரும் ஆய்வு ஜாதகம் 4 ?

யாருக்கு மனநிலை பாதிப்பு வரும் ஆய்வு ஜாதகம் 4 ? ADVANCED KP STELLAR ASTROLOGY (உயர் கணித சார ஜோதிட) முறையில் மிகவும் துல்லியமான ஜோதிட விளக்கம்
வரிசை எண் 5095 இவர் ஆண்,பிறந்த தேதி 10.07.1979 செவ்வாய் கிழமை பிறந்த நேரம் 06.30 பிற்பகல் பிறந்த இடம் காஞ்சிபுரம் பிறந்த நேரத்தை திருத்திய நேரம் 06.25.30 பிற்பகல் ஆளும் கிரகம் எடுத்த தேதி 03.06.2016 அன்று ஆளம் கிரகம் எடுத்த நேரம் 04.38.00 பிற்பகல் ஆளும் கிரகம் எடுத்த இடம் காஞ்சிபுரம்
யாருக்கு மனநிலை பாதிப்பு வரும் மனநிலை பாதிப்பை பற்றிய உயர் கணித சார ஜோதிட முறையில் மருத்துவ ஜோதிட புத்தகத்தில் ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ் விளக்கமான ஆய்வு கருத்துக்கள்.
3ஆம் பாவம் என்பது மாற்றங்களை குறிக்கும் பாவமாகும்,நமது மனமும் அடிக்கடி மாறக் கூடியது.
மனத்தில் தோன்றும் பல்வேறு தீவிர உணர்ச்சிகளை வெளிப்பத்தாமல்,தானே அடக்கி வைத்திருக்கும் ஒருவருக்கு மனம் பாதிப்படைகின்றது.
மனதில் உள்ள உணர்ச்சிகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் தனக்கு தானே சிந்தித்து கொண்டிருப்பது தான் மனநோய்க்கு ஆரம்பகட்டம் ஆகும்.
நம் உடலில் ஒரு குறிப்பிட் சத்து அகிமாகவும்,ஒரு குறிப்பிட்ட சத்து குறைந் தும் இருந்தால் உடலில் ஒரு சமசீரற்ற நிலை உண்டாகும்.உடல் அதை அதை நமக்கு தெரிவிக்கும் முறைக்குதான் நோய் என்று நாம் கூறுகின்றோம்.

அந்த மனம் பாதிப்படைந்த உறுப்பில் உண்டாகும் வலி,அல்லது வித்தயாச தான நிகழ்வுகள் மூலம் அந்த உறுப்பில் ஏதோ பிரச்சனை என்று நமது
மனதால் முடிவெடுத்து அதற்குண்டான சிகிச்சைகளை மேற்கொள் கின்றோம்.
மனபாதிக்கபட்டால் நாம் எதையும் சரியாக அறிவுப் பூர்வாக செயல்படுத்த முடியாது,மனநோய் என்பது ஒரு குறிப்பிட்ட சத்தி குறைவதாலும் அல்லது நோய் கிருமிகளாலும் வரக்கூடிய நோய் அல்ல.

மனசமநிலையில் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை பற்றி மட்டும், திரும்ப திரும்ப சிந்தனை செய்வதன் மூலமே ஒருவருக்கு மன்நோய்வருகின்றது.

3ஆம் பாவம் பாதிக்கபட்ட ஜாதகர் தன்னை பற்றி மற்றவர்களைவிட அதிக மதிப்பீடுகளை(Ego) கொண்டிருப்பார்,எனவே யாராவது இவர் செய்வதை குறை கூறினால் அதை ஜாதகரால் தாங்கி கொள்ள முடியாது இது திரும்ப திரும்ப நடைபெறும்போது ஜாதகருக்கு மன அழத்தம் (Stress) உண்டாகி அது படிப்படியாக அதிகரித்து மனநோயாக மாற வாய்ப்பு உண்டு.
3ஆம் பாவம் 6ஆம் பாவம் தொடர்பு கொண்டுயிருந்தால் கோப உணர்ச்சி அதிகமாக இருக்கும்,ஜாதகர் தன்னுடைய கோபத்தை மற்றவர்களின் மீது ஆதிக்கமாக செலுத்து வார்,ஜாதகர் மற்றவர்களுக்கு கொடுமை இழைப்பதன் மூலம் மகிழ்ச்சி பெறும் நபர்களாக (Sadust) இருப்பார்கள். மற்றபடி மனநோய் பாதிப்பு இருக்காது.
3ஆம் பாவம் பாதிக்கபட்டால் ஜாகரின் சுய அறிவு சிந்தனை விரிவாக்கம் ஆகாமலே பாதிக்கபட்டு அப்படியே முடங்கிவிடும்.ஒருவரின் மனம் அல்லது மனோநிலை, அது தடுமாறாமல் பலமாக இருந்தால் தான் சிறப்பு,அதற்கு தான் மனோபலம் என்று பெயர்.
3ஆம் பாவம் 8,12ஆம் பாவம் தொடர்பு கொள்ளும் போது இது கடுமை யான மன பாதிப்பினை தருகின்றது. லக்னத்தின் சுய கௌரவம் இங்கு கடுமையாக பாதிக்கின்றது.
3ஆம் பாவம் 8,12ஆம் பாவங்களை தொடர்பு கொள்கின்ற வர்கள் தங்களை தாங்களே துன்புறுத்தி கொள்பவர்களாக இருப்பார்,தற்கொலை எண்ணங்கள் அதிகமாக இருக்கும், தாழ்வுமனபான்மை அதிகமாக உள்ளவர்களாக இருப்பார் கள்.ஜாதகர் தனக்கு தானே பிரச்சனைகளை அனுபவிப்பார்.
8ஆம் பாவம் என்பது எதிர்மறையான சிந்தனைகளையும், எதிர்மறையான கற்பனைபளையும் குறிக்கும்.

12ஆம் பாவம் என்பது தாழ்வு மனப்பான்மையையும்,தோல்வி மற்றும் மற்றவர்களுக்கு அடிபணிந்து நடக்கும் பண்புகளையும் குறிக்கும்.

3ஆம் பாவம் 8,12ஆம் பாவங்களை தொடர்பினை பெறும் போது உண்டாகும் மனநிலை கோளாறுகளை மனநோய் என்று கூறுவதை விட மன பாதிப்பு என்று கூறுவதே சிறப்பு,இதை மனநல ஆலோசனைகள்(Counselling) மூலம் குணப்படுத்த முடியாது.


மூளையில் மின் சிகிச்சை,அளவுக்கு அதிகமான மாத்திரை,வாழ்நாள் முழுவதும் நூக்கமாத்திரை சாப்பிடுதல் போன்றவற்றின் மூலம் ஓரளவுக்கு கட்டுப்படுத்த லாம்,ஆனால் அதை முற்றிலும் குணப்படுத்த முடியாது.

மனநோய்க்கு அடுத்த நிலை சித்தபிரமை சித்த பிரமை என்ற உணர்வு சார்ந்த பிரச்சனையை 5ஆம் பாவம் கொண்டு அறிய வேண்டும்.
சித்த பிரமை என்பதை சிந்திக்கும் திறன் பாதிக்கப்பட்ட நிலை அல்லது புத்தி பேதிலிப்பு என்றும் கூறலாம்.சித்த பிரமை பிடித்தவர்கள் எதையும் பேசாமல் அமைதியாக இருப்பார்கள்.
5ஆம் பாவம் 8,12ஆம் பாவங்களை தொடர்பு கொள்ளும் போது 5ஆம் பாவத்தில் உள்ள மென்மையான காரகங்கள் ஏதாவது ஒன்று ஜாதகருக்கு எதிர்பாராத விதமாக கிடைக்காமல் போய்விடும்.
இவ்வாறாக மருத்துவ ஜோதிட புத்தகத்தில் ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ் அவர்கள் இன்னும் தெளிவாக விளக்கியுள்ளார்.

எந்த விதமான குழப்பமும் இல்லாத அடிப்படை விதிகளுக்கு மாறாத தெளிவான விதிகள்விதி ஒன்று
அதற்கு நாம் ஆய்வு செய்யவேண்டிய பாவங்கள் மற்றும் கிரக காரகங்கள் பின் வருமாறு
3ஆம் பாவம் புதுபித்தல் மற்றும் விரிவுபடுத்துதல்,புதிய முயற்சிகள், ஒருவிஷயத் தை விரிவுபடுத்தி செய்தல், உலகில் உள்ள அனைத் துபதிவுகளும், உறுப்பாடு, விடா முயற்சி,தைரியம்,நினைவாற்றல், கற்பதற்கான மனசார்பு, அறிவு,தோள் பட்டை,கைகள்,தன்னம்பிக்கை, மனோபலம், கற்பதற் கேற்ற மனச்சார்பு, அறிவு, மனக்குழப்பம்,புத்தி பேதலித்தல்,உணர்வுகளை கட்டுபடுத்துதல்,உணர்வுகளை கட்டுபடுத்த தெரியாதவர்கள்,உணர்வுகளை முறையாக வெளிபடத்த தெரியாத வர்கள், விரத்தி மனநிலை,தாழ்வுமன பான்மை.
3ஆம் பாவம் என்பது லக்னத்தின் பரிமாணபாவம் ஆகும்,லக்னம் நன்றாக இருந்து அதாவது லக்னம் 3,7,11ஆம் பாவங்களையோ அல்லது 2,4,6,10ஆம் பாவங்களை தொடர்பு கொண்டுயிருந்து 3ஆம் பாவம் 8,12ஆம் பாவங்களை தொடர்பு கொண்டுயிருந்தால் ஜாதகரின் சிந்தனை விரிவாக்கம் ஆகாமாலே இருக்கும்.
எனவே ஆய்வுக்குரிய பாவத்தின் பரிமாண பாவங்களான3,11ஆம் பாவங்கள் நன்றாக இருந்தால் தான் ஆய்வுக்குரிய பாவம் நல்ல பலனை தரும்.
1) மனோகாரகன் சந்திரன், சிறிய அளவு குழப்பமான மனநிலைக்கு சனி.பெரிய அளவில் குழப்பமான மன நிலைக்கு ராகு கிரக காரகம் ஆகும்.

2)நரம்பு பாதிப்பு அதற்க்கு கிரக காரகம் புதன்(நரம்பு மண்டலம் பாதிப்பு உணர்ச்சிகளை கட்டுபடுத்த தெரியாதவர் அல்லது முறைபயாக வெளிபடுத்த தெரியாதவர் அதனால் மனநிலை பாதிப்பை அதிகரிக்கும்)

3)லக்னம் கொடுப்பினை

4) தசை கொடுப்பினை

5)1,3ஆம் பாவங்களுக்கு ஒரே கிரகமே உப நட்சதிதரமாக வோ அல்லது உபஉப நட்சதிதரமாகவோ இருப்பது

8) 1,3ஆம் பாவத்திற்க்கு சந்திரன் உப நட்சத்திரமாகவோ அல்லது உபஉப நட்சத்திரமாகவோ இருப்பதுஅல்லது 3,8ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாகவோ அல்லது 3,8ஆம் பாவங்களுக்கு உப உப நட்சத்திரமாகவோ இருப்பது

9) 5ஆம் பாவம் பாதிப்பு சித்தபிரமையை குறிக்கும்
லக்ன உப நட்சத்திரம் குரு,குரு நின்ற நட்சத்திரம் புதன் ஆகும்,குரு நின்ற உப நட்சத்திரம் கேது ஆகும்.
குரு நின்ற நட்சத்திரம் நின்ற உப நட்சத்திரம் மூலமாக 1ஆம் பாவத்தை கெடுத்துக்கொண்டு2,6,8,12ஆம் பாவ வேளையை செய்கிறார்.
லக்ன உப உப நட்சத்திரம் சுக்கிரன்,சுக்கிரன் நின்ற நட்சத்திரம் ராகு ஆகும், சுக்கிரன் நின்ற உப நட்சத்திரம் சனி இருக்கிறார்.
சுக்கிரன் நின்ற நட்சத்திரம் நின்ற உப நட்சத்திரம் மூலமாக 4,6,10,12 ஆம் பாவ வேளையை செய்கிறார்.1ஆம் பாவம் வலிமை அடைகிறது,ஜாதகர் உறுதியான மன படைத்தவராகவும்,மற்றவர்கள் மேல் ஆதிக்கம் செலுவராகவும் இருப்பார்.
1 ஆம் பாவத்திற்கு ஆரம்பமுனை நட்சத்திரமாக சுக்கிரன் உள்ளார்,சுக்கிரன் நின்ற நட்சத்திரம் ராகு ஆகும், சுக்கிரன் நின்ற உப நட்சத்திரம் சனி இருக்கிறார். சுக்கிரனின் தொடர்பை பற்றி மேலே பார்த்தோம்
ஜாதகருக்கு தலையில் அடிபடுதல்,மயக்கம்,தலை சுற்றுதல்,தலையில் நீர்கோத்துக்கொள்ளுதல்,தலைவலி போன்ற பிரச்சனைகள் இருக்க வாய்ப்புள்ளது,
மனநிலை பாதிப்பு உள்ளவர்களுக்கு இது போல லக்னம் 6,8,12ஆம் பாவங்களை தொடர்பு கொள்ளும் போது மனநிலை பாதிப்பு இன்னும் அதிகபடுத்தும்.
லக்னம் 6ஆம் பாவ தொடர்பு மற்றவர்களில் ஜாதகர் தன்னுடைய கோபத்தை மற்றவர்களின் மீது ஆதிக்கமாக செலுத்துவார்,ஜாதகர் மற்றவர்களுக்கு கொடுமை இழைப்பதன் மூலம் மகிழ்ச்சி பெறும் நபர்களாக (Sadust) இருப்பார்கள்.
லக்னம் 8ஆம் பாவ தொடர்பு குழப்பமான மனநிலையை குறிக்கும்,எதிர்மறை யான சிந்தனையை குறிக்கும் இது மனநிலை பாதிப்பை அதிகரிக்கும்.
1ஆம் பாவ கொடுப்பினை மனநிலை பாதிப்பை இன்னும் அதிகமாக்கும் நிலையில் உள்ளது,ஜாதகரால் அதிகமாக பாதிப்பு மற்றவர்களுக்கு உண்டாகும்,ஜாதகரை கட்டுபடுத்த முடியாது.

3 ஆம் பாவ உப நட்சத்திரம் உப நட்சத்திரம் சுக்கிரன், சுக்கிரன் நின்ற நட்சத்திரம் ராகு ஆகும், சுக்கிரன் நின்ற உப நட்சத்திரம் சனி இருக்கிறார்.
சுக்கிரன் நின்ற நட்சத்திரம் நின்ற உப நட்சத்திரம் மூலமாக 4,6,10,12 ஆம் பாவ வேளையை செய்கிறார். 3ஆம் பாவம் வலிமை அடைகிறது,ஜாதகர் உறுதியான மன படைத்தவராகவும்,மற்றவர்கள் மேல் ஆதிக்கம் செலுவராகவும் இருப்பார்.
3 ஆம் பாவ உபஉப நட்சத்திரம் உப நட்சத்திரம் சுக்கிரன்,சுக்கிரன் நின்ற நட்சத்திரம் ராகு ஆகும், சுக்கிரன் நின்ற உப நட்சத்திரம் சனி இருக்கிறார்.
3ஆம் பாவம்75 சதவீதம் வலிமையாக உள்ளது,மேலே 3ஆம் பாவம் 6ஆம் பாவ தொடர்பால் ஏற்படும் பலன்களை விளக்கியுள்ளேன் அதை படித்து தெரிந்துக்கொள்ளுக்கள்.
3ஆம்பாவம் 4ஆம் பாவ தொடர்பு நிலையாக ஒரு எண்ணத்தில் அல்லது ஒரு விஷயத்தில் அழமான சிந்தனையில் ஜாதகர் இருத்தலை குறிக்கும்.
3ஆம்பாவம் 12ஆம் பாவ தொடர்பு நினையாற்றலை இழத்தலை குறிக்கும்.
3 ஆம் பாவத்திற்கு ஆரம்பமுனை நட்சத்திரமாக குரு உள்ளார், குரு நின்ற நட்சத்திரம் புதன் ஆகும், குரு நின்ற உப நட்சத்திரம் கேது இருக்கிறார். குரு தொடர்பு 2,5,6,8,12 3ஆம் பாவ ஆரம்பமுனை நட்சத்திரம் மூலமாக 15 சதவீதம் பாதிக்கபட்டுள்ளது.
5 ஆம் பாவ உப நட்சத்திரம் செவ்வாய், செவ்வாய் நின்ற நட்சத்திரம் சந்திரன் ஆகும், செவ்வாய் நின்ற உப நட்சத்திரம் சனி இருக்கிறார்.
செவ்வாய் நின்ற நட்சத்திரம் சந்திரன் 8ஆம் பாவ உப நட்சதிதரமாக இருந்து செவ்வாய் நின்ற உப நட்சத்திரம் சனி 4,10ஆம் பாவங்களை காட்டுவதால் நட்சத்திரம் காட்டிய 8ஆம் பாவம் தொடர்ந்து வலிமையாக வளர்கிறது.
5 ஆம் பாவ உபஉப நட்சத்திரம் புதன், புதன் நின்ற நட்சத்திரம் புதன் ஆகும், புதன் நின்ற உப நட்சத்திரம் கேது இருக்கிறார்.
புதன் நின்ற நட்சத்திரம் புதன் 5,6,8,12 ஆம் பாவ உபஉப நட்சதிதரமாக இருந்து புதன் நின்ற உப நட்சத்திரம் கேது 2ஆம் பாவங்களை காட்டுவதால் நட்சத்திரம் காட்டிய 5,6,8,12ஆம் பாவம் தொடர்ந்து வலிமையாக வளர்கிறது.
5ஆம் பாவத்திற்கு ஆரம்பமுனை நட்சத்திரமாக சூரியன் உள்ளார், சூரியன் நின்ற நட்சத்திரம் குரு ஆகும், சூரியன் நின்ற உப நட்சத்திரம் புதன் இருக்கிறார். சூரியன் தொடர்பு 2,5,6,8,12
5ஆம் பாவ 100 சதவீதம் பாதிக்கபட்டுள்ளது.
5ஆம் பாவம் என்பது பின் அறிவை குறிக்கும் ஒரு பிரச்சனை நடந்த முடிந்த பிறகு அந்த பிரச்சனை ஏன் ஏற்பட்டது என்று ஆய்வு செய்து அதில்யிலிருந்து இருந்து ஜாதகர் மீள்வதைகுறிக்கும்,ஆழ்ந்த அறிவு,நுட்பமாண அறிவை குறிக்கும் மற்றும் ஒருவரின் தனிபட்ட சிறப்பு அறிவு(ஸ்பெஷல் அறிவு)அதவாது அவரால் மட்டுமே செய்யகூடிய அறிவை குறிக்கும்,புத்தி கூர்மையை.
மேற்கூறிய காரகங்கள் 5ஆம் பாவம் 8,12ஆம் பாவம் தொடர்பு கொள்ளும் போது முழுமையாக பாதிக்படுகிறது.
திரிகோண பாவங்களில் ஒன்றோடு மற்றொன்று வலிமையானது,1ஆம் பாவம் பாதிக்கபடும் போது சுய அறிவு பாதிக்கபடும்,5ஆம் பாவம் பாதிக்கபடும் போது ஆழ்ந்தஅறிவு,கற்பனைதிறன்,ஞானம்போன்றவைபாதிக்கபடுவம்.

சந்திரன் 8ஆம் பாவ உப நட்சத்திரமாக இருப்பது,மற்றும் 3ஆம் பாவம் 15 சதவீதம் பாதிக்கபட்டுள்ளதால் இன்னும் மனநிலை பாதிப்பு அதிகமாக்கிறது.
ராகு தசை 03.04.1999 முதல் 03.04.2017 வரை நடைபெறுகிறது,6,12ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக, 4,9,10 உப உப நட்சத்திரமாக இருந்து ராகு நின்ற நட்சத்திரமாக சுக்கிரன் ஆகும், ராகு நின்ற உபநட்சத்திரமாக செவ்வாய் ஆகும்.
சுக்கிரன் 3ஆம் பாவ உப நட்சத்திரமாகவும் உள்ளார், செவ்வாய் 5ஆம் பாவ உப நட்சத்திரமாகவும் உள்ளார்.
ராகு 3,5ஆம் பாவ வேளையை செய்கிறார், இந்த பாவங்கள் அல்லது தசை 1,3,5,7,9,11ஆம் பாவங்களுக்கு சாதகமான தசையாகும்.இவ்வளவு சாதகமான தசையாக இருந்தும் ஜாதகரின் மனநிலை பாதிப்பு குணம்யாக வில்லை, ஏனெனில் அகம் சார்ந்த பாதிப்புக்கு தசை கொடுப்பினையால் ஒரு நன்மையும் வராது உதாரணமாக ஒருவரு மைனஸ் 4க்கு கண்ணாடி அணிந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம் 2ஆம் பாவத்தில் அகம் சார்ந்த விஷயத்திற்க்கு சாதகமான 1,5,9 அல்லது 3,7,11ஆம் பாவ தசை நடந்தாலும் கண்ணின் பார்வை கோளாறு அதிகமாகாமல் இருக்குமே ஒழிய கண்ணாடியில்லாமல் படிக்கும் நிலை வராது அதுபோலவே ஜாதகருக்கு மனநிலைக்கு பாதிப்பை சரி செய்யும் சாதகமான தசை நடந்தாலும் மனநிலை பாதிப்பு சரியாக வில்லை.
ஜாதகர் எப்பொழதும் எதையாவது யோசித்துக் கொண்டு ள்ளார்,நிலைவாற்றல் குறைவு,கடைக்கு போய் எதாவது பொருளை வாங்கி வர சொன்னால் அதை மறுந்து விடுவது மற்றும் சரியான மீதி பணத்தை வாங்கிவருவது இல்லை, ஞாபக மறைதி உள்ளது.ஆனால் ஜாதகருக்கு தொழியில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளது அதற்காக வீட்டியில் சண்டைபோடுகிறார்.

No comments:

Post a Comment