Saturday, 21 May 2016

4 ஆம் பாவமும் அதன் கொடூரதன்மையும்

4 ஆம் பாவமும் அதன் கொடூரதன்மையும்

     பாவகாரகங்களை மிகவும் நேர்த்தியாக கையாளுவது எப்படி என்பதை ADVANCED KP STELLAR ASTROLOGY (உயர் கணித சார ஜோதிட) முறையில் 

                    4 ஆம் பாவத்தின் காரகங்கள்


உறவினர்,நண்பர்களிடம் இயல்பாக பழகாமை, வெறுப்புணர்ச்சி,விரக்தி மனப்பான்மை, ஓய்வின்மை யால் ஏற்படும் உளவியல் குழப்பங்கள் மற்றவர்கள் மீது பயம் கொள்ளுதல்,மற்றவர்கள் மீது போட்டி, பொறாமை கொள்ளுதல்,பணத்தை அல்லது சொத்துக்களைப் பெருக்குவதில் நாட்டம்,எதிலும் திருப்தியற்ற மனோ நிலை,மாற்ற முடியாத கல்வி,செயற்க்கையான பொருட்கள்,உயிரற்றப்பொருட்களை உற்பத்தி செய்தல், எதையும் உணர்வுபூர்வமாக பார்க்காத தன்மை, அதையும் அறிவியல் பூர்வமாக பார்த்தல்,வலைக்க முடியாத பொருட்கள்,சுருக்க முடியாத பொருட்கள், விட்டுக் கொடுக்காத தன்மை,பிடிவாதம் குணம்,தன்நிலையில் உறுதி தன்மை, கற்பு,உடல் சார்ந்த ஒழக்கம்,அலிதன்மை, மெருகூட்டப்படாத மூலப்பொருட்கள், ஒப்பனை இல்லாத எளிமையான தோற்றம், பாரபட்சமற்ற நடவடிக்கை, நாத்திகம்,தொன்று தொட்டு வந்த மரவு வழிகளை ஏற்காமல் புரட்சிகரமான சிந்தனைகள், ஆய்வுகள் என்று எதையும் செய்யாமல் இருப்பதை அப்படியே பயன்படுத்துதல் (அதாவது சிந்தனை விரிவாக்கம் செய்யாமல் இருப்பதை குறிக்கும்) சிற்றின் பங்களை துறத்தல்,குழந்தை பேறு இல்லாமை,மெல்லிய நிர்பந்தம் அல்லது நெருக்கடி, உணர்ச்சிகளுக்கு அடிபணியாமை, திட்டமிட்ட கணித்தசெயல்பாடு உடையவர்,ஒரே மாதிரியான வாழ்க்கை முறை, வெளிநாடுக்கு செல்லாமல் சொந்த நாட்டிலே ஒரே இடத்தில் இருத்தல், தீவிரவாதம், தங்கள் நலன் என்ற ரீதியில் உலக கருத்துடன் ஒற்றாமல் தனக்கு என்று ஒரு கொள்கைகளை வைத்துக்கொண்டு அதுவே உண்மை என்று பேச்சும் தன்மை உடையவர்,இவர்களின் பேச்சு மற்றவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தும் விதமாக யிருக்கும், தன்னுடைய செயலில் தவறு இருந்தாலும் அதை மாற்றாமல் உறுதியாக அல்லது நிலையாக இருப்பார், இறுக்கமாக இருத்தல்,பகுத்தறிவு,ஒரு முறை செய்ததை திரும்ப திரும்ப செய்தல்,மாற்றமுடியாதவை, ஒரே மாதிரியாக இருப்பது,விரத்தி மனநிலை அல்லது திருப்தி அற்ற மனநிலை.




4ஆம் பாவம் என்பது 5,9ஆம் பாவங்களுக்கு 8,12ஆம் பாவங்கள் என்பதால் 5,9ஆம் பாவங்களின் காரகங்களுக்கு எதிரான காரகங்களை 4ஆம் பாவம் கொண்டுயிருக்கும்.




மலட்டுதன்மை உடைய பாவம் 4ஆம் பாவம் ஆகும் இதனாலே மத்தீவிரவாதம்,தனிநாடு கோரிக்கை உள்ள தீவிரவாதகுழுக்கள், நக்கலஸ் தீவிரவாதகுழுக்கள் போன்றவைகளை குறிக்கும்.




காமம் குறைவாக உள்ளவனே காடு மலைகளில் பதுங்கி இருந்து அரசுக்கு எதிராக செயல்படமுடியும்,இவர்களின் கொள்கைக்கு எதிராக உள்ளவர்களை கொள்ளுவார்கள்.மற்றவர்களின் மீது கொடூரமான அடக்குமறையை செய்யவதற்க்கு கொள்கையை விட்டுக்கொடுக்காத உறுதியான மனம் வேண்டும்.




விட்டுக்கொடுப்பது 5ஆம் பாவம் என்றால் எதையும் விட்டுக் கொடுக்காமல் தானே அனுபவிப்பது 4ஆம் பாவ காரகம் ஆகும்.




இயற்க்கை என்பது 5,9ஆம் பாவ காரகங்கள் என்றால் அதற்க்கு 8,12 ஆம் பாவமான 4ஆம் பாவம் செயற்க்கையைகுறிக்கும்.செயற்க்கை என்பது உடலுக்கு தீங்கு போல அன்பும்,பாசமும்,இரக்கம்,ரசிப்பு தன்மை போன்றவை இல்லாமல் இருக்கும் குணத்தை 4ஆம் பாவம் குறிக்கும்.





8,12ஆம் பாவங்கள் வலிமையடைந்தால் ஜாதகர் துன்பத்தை அனுபவிப்பார்,ஆனால் 4ஆம் பாவம் வலிமையடைந்தால் ஜாதகர் மற்றவர்களின் மீது அடக்குமுறையை ஏவிப்பார்,கொத்தடிமைகள் என்பது




4ஆம் பாவத்தில் இருப்பர்கள் நிலசுவர்ந்தார்கள்,செங்கல் சூலைகள்,பண்னைகள்,எஸ்டேட்டுகள் போன்றவற்றில் மக்களை கும்பலாக தங்கவைத்து அடக்குமறை மேற்கொண்டு வேளை வாங்குவது 4ஆம் பாவ வேளை ஆகும்.





4ஆம் பாவம் வலிமையாக உள்ளவர்கள் கடுமையாக வேளை செய்து பல வீடுகளை,நிலங்களையும் சம்பாதித்து சிக்கனமாக வாழ்வார் இதை போலவே அவருடைய குடும்ப உறுப்பினர்களையும் வாழ வேண்டும் சொல்லுவார்,அவர்களின் எண்ணங்களுக்கு மதிப்புஅளிக்கமாட்டார், சொத்துக்களை பிரித்துக் கொடுக்கமாட்டார், தனிகுடுத்தினமும் போகவிடமாட்டார்.





4ஆம் பாவம் என்றும்மாறாத நிலையான தன்மையை குறிக்கும்.ஜாதகர் தன்னுடைய குணத்தில் அல்லது கொள்கையில் எவ்வித மாற்றத்தையும் செய்யாமல் எப்பொழதும் நிலையான கொள்கையோடு கடைசிவரைக்கும் இருப்பார்.




4ஆம் பாவம் என்பது மற்றவர்களுக்காக விட்டுக் கொடுக்காமல் அவர்களுடன் போட்டிப்போட்டு கொண்டு அறிவு பூர்வமாக ஜாதகர் செயல்படுவதைக் குறிக்கும்.





4ஆம் பாவம் என்பது அடிக்கடி மாற்றாமல் நிலையான என்றும் மாறாத(அல்லது நீண்ட காலம் மாறாத)விஷயங்களைக் குறிக்கும்.





4ஆம் பாவம் என்பது ஜாதகரால் எளிதில் சுமக்க முடியாத  அளவுக்கு உள்ள கனமானப்பொருட்களையும், உடனடியாகப் பணமாக மாற்ற முடியாதப் பொருட்களையும் குறிக்கும்.




4ஆம் பாவம் என்பது இயற்க்கையை அழித்து மனிதர்களால் உருவாக்கபட்ட செயற்க்கையை அனைத்தையும் குறிக்கும். (செயற்க்கையான குணம் உடையவர்)





4ஆம் பாவம் என்பது மென்னையான உணர்ச்சிகளுக்கு (Sentument) இடம் தராமல், எதையும் அறிவுப் பூர்வமாக அல்லது ஆக்கப் பூர்வமாக சிந்தித்துக் செயல்படுவதைக் (Logiuc)குறிக்கும்.





4ஆம் பாவம் என்பது எதையும் இலவசமாக தராமல் அதற்க்கும் ஒரு விலையை நிர்ண்ம் செய்து தருவதைக் குறிக்கும்.




4ஆம் பாவம் என்பது மற்றவர்களுக்கு தன்னுடைய கருத்தினை புரியும்படி மற்றவர்களுக்கு விளக்கமாக சொல்லமாட்டார்,மற்றும் மெருகுயேற்றி சொல்ல மாட்டார்,வர்ணனைப் படுத்தாமல் மற்றவர்கள் மகிழ்ச்சியுற வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் செயல்படுவார்.




4ஆம் பாவ முனையின் 8,12ஆம் பாவ தொடர்பு இளமையிலேயே உடன் தேவைக்கு அதிகமான சக்தியால் சர்க்கரை நோய்,இதய நோய்,இரத்த அழத்த நோய்கள் வருவதற்கு அதிக வாய்ப்பினைதரும்.



4ஆம் பாவத்தை எந்த பாவங்கள் தொடர்பு கொள்கிறோத அந்த பாவத்தின் காரகங்களை ஜாதகர் எவ்வித மாற்றமும் இல்லாமல் நிலையாக தொடர்ந்து அனுபவிக்க முடியும்.




4ஆம் பாவத்தை 5,9ஆம் பாவங்கள் தொடர்பு கொண்டால் 5ஆம் பாவத்தில் உள்ள அகம் சார்ந்த காரகங்களை ஜாதகரால் அனுபவிக்க முடியாது ஆனால் 5ஆம் பாவத்தில் உள்ள புறம் சார்ந்த காரகங்கள் நிலைத்துயிருக்கும்.



5ஆம் பாவம் என்பது நடிப்பினை குறிக்கும் 4ஆம் பாவம் என்பது எல்லா வாடிக்கையாளரிடமும் ஒரே மாதிரியானஅணுகு முறையை கையாளாமல் ஒவ்வொரு நபருக்கும் வேவ்வேறு அணுகுமுறையை கையாளாமல் அனைவரிடமும் ஒரே மாதிரியான அணுகு முறையை பயன்படுத்துவாறு.
4ஆம் பாவம் என்பது அனைவரிடமும் ஒரே மாதிரியான கட்டணத்தை நிர்ணையம் செய்வார் இதனால் வாடிக்கையாளர்கள் குறைவாக இருப்பார்.



ஒரு விஷயத்தை மனதில் ஒருநிலைப்படுத்தி கூர்ந்து கவனித்தல் என்பது 4ஆம் பாவம் ஆகும்,ஒன்றினை பற்றிக்கொண்டு அதிலிருந்து மாதிரியை (TEMPLATE)உருவாக்குவது என்பதையும் 4ஆம் பாவம் குறிக்கும்.ஒரு முறையை கூர்ந்து கவனித்து அதிலிருந்து தனக்கென ஒரு பாணியை வகுத்து கொள்ளும் நபர்களாக இவர்கள் இருப்பார்கள்.தங்களுடைய கருத்துக்களை மற்றவர்களுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களாகவும் இருப்பார்கள்.



5ஆம் பாவம்4ஆம் பாவத்தை தொடர்பு கொண்டால் 5ஆம் பாவ காரகங்களை முழுமையாக இவர்களால் செயல்படுத்த முடியாது,5ஆம் பாவத்தில் உள்ள புறம் சார்ந்த காரகங்களை சார்ந்த கலைத்துறைகளில் ஜாதகர் அதை உணர்பூர்வமாக அணகாமல் அதை அறிவுபூர்வமாக அணுகக்கூடியவர் களாகவும், நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் கலைத்துரையை பயன்படுத்துவார்கள்.




4ஆம் பாவம் என்பது என்றும் மாறாத நிலையான தன்மையைக் கொண்டது என்பதால் ஒரே இடத்தில் தொழியில் செய்வதையை குறிக்கும் மற்றும் 4ஆம் பாவம் என்பது குடியிருக்கும் இருப்பிடத்தை குறிப்பதால் தன்னுடைய வீட்டிற் அருகிலேயே அல்லது தன்னுடைய வீட்டிலேயே தனது அலுவலகத்தையோ அல்லது உற்பத்தி நிறுவனத்தையோ வைத்திருப்பார்.இவர்கள் ஒரே இடத்தில் நிலையாக தொழியில் செய்வதால் இவர்கள் அதே இடத்தில் நிலையான இருக்கும் மற்றவர்களுடன் போட்டிப்போட்டு தன்னுடைய தொழிலைச் செய்வார்கள்.

No comments:

Post a Comment