குழப்பமான மனநிலை,யாருக்கு? ADVANCED KP
STELLAR ASTROLOGY (உயர் கணித சார ஜோதிட) முறையில் மிகவும் துல்லியமான மருத்துவத்தை சார்ந்த ஜோதிட விளக்கம்
வரிசை எண் 5087 இவர் ஆண்,பிறந்த தேதி 24.08.1998 திங்கள் கிழமை பிறந்த நேரம் 07.49
பிற்பகல் பிறந்த இடம் கல்லகுறிச்சி பிறந்த நேரத்தை திருத்திய நேரம் 07.49.54
பிற்பகல் ஆளம் கிரகம் எடுத்த தேதி 19.05.2016 அன்று ஆளம் கிரகம் எடுத்த நேரம்
06.44.59 பிற்பகல் ஆளம் கிரகம் எடுத்த இடம் காஞ்சிபுரம் .
ஒரு ஆண் ஆவார் இந்த ஆண்டு +2 தேர்ச்சி பெற்றார் என்ன படிக்காலாம் என்று போனில்
கேட்டார்கள்,அப்பொழது இந்த குழப்பமான மனநிலை,மலக்குடல் பிரச்சனை,செரிமான
பிரச்சனை ஜாதகரு இந்த பிரச்சனை இருக்கும் என்று கூறினேன் ஜாதகம் பலன் போனில்கேட்டவர் அசந்து
போயிட்டார்,அதை பற்றி விளக்கத்தை பார்போம்.
குழப்பமான மனநிலை
மனநிலைக்கு 3ஆம் பாவத்தை பார்க்கவேண்டும்
அதற்க்கு கிரக காரகம் சந்திரன் ஆகும்.
3,9ஆம் பாவங்களுக்கு புதன் உப நட்சத்திரமாக இருந்து அவர்
நின்ற நட்சத்திரம் புதனே ஆகும்,புதன் நின்ற உப நட்சத்திரம் சூரியன் ஆகும்.
புதன் நின்ற நட்சத்திரம் புதன் 3,9ஆம் பாவங்களுக்கு உப
ட்சத்திரமாக இருக்கிறார்.
புதன் நின்ற உப நட்சத்திரம் சூரியன் 5,10 ஆம் பாவங்களுக்கு
உப ட்சத்திரமாக இருக்கிறார்.
புதன் தொடர்புகள் 3,5,9ஆம் பாவங்கள் ஆகும்
3ஆம் பாவ பாதிக்கபடவில்லை இதனால் விதி கொடுப்பினை மூலமாக
அதாவது பாவ மூலமாக குழப்பமான மனநிலை வராது என்பது தெளிவு ஆகிறது.
கிரக காரகம்
சந்திரன் பற்றிய ஆய்வு செய்வோம்
இரத்திற்க்கு அதிபதி,உடல் காரகன் ஆன சந்திரன் 8ஆம் பாவ உப
நட்சத்திரமாகவும் 10 ஆம் பாவம் உபஉப நட்சத்திரமாகவும் இருக்கிறார்.
சந்திரன் விரைவான செயல்களுக்கும்,மாற்றங்களுக்கும் காரகர்
ஆவார்,மூலையில் உதிக்கும் சிந்தனைக்கு சந்திரன் காரகர் ஆவார், அதனால் சந்திரன்
மனோக்காரகன் ஆவார்.
இதனால் சந்திரன் 6,8,12ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக
இருந்தால் மன நோய்,சித்த பிரமை போன்றபிரச்சனைகள் வர வாய்ப்பு உண்டு,உடலுக்கு
வருகின்ற பெரும்பான்மையான நோய்கள் இரத்தித்தில் உள்ள சத்து பற்றாக் குறை மூலமாகவே
வரும்,எனவே இரத்த அழுத்தம் சார்ந்த பிரச்சனைகள்,இரத்தம் கெட்டுபோகுதல்,
போன்றவற்றுக்கும் சந்திரனேகாரகர் ஆவார்,
சந்திரன் உடல்
காரகன் என்பதால் எந்தவிதத்திலும் 6,8,12ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாகவோ அல்லது
உபஉப நட்சத்திரமாகவோ அல்லது ஆரம்பமுனை நட்சத்திரமாகவோ வந்தால் பெரும்பாலான உடல்
பாதிப்புகள் வரும்.
கோட்சாரத்தில் சந்திரன் பங்கு முக்கியம் என்பதால் சந்திரன்
6,8,12ஆம் பாவ முனைகளை தொடர்பு கொண்டால் திரும்ப திரும்ப அது கோட்சாரத்தில் வந்து
கொண்டே இருக்கும்.(மருத்துவ ஜோதிடம் நூல் ஆசிரியர் ஜோதிட நல்ஆசிரியர் A.தேவராஜ் முதல் பதிப்பு 2013
ஆண்டு)
இந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள படி சந்திரன் 8ஆம் பாவ
உப நட்சத்திரமாக இருப்பதால் மன நோய் அல்லது குழப்பமான மனநிலை பயம்,படபடப்பு
ஜாதகருக்கு ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.
ஜாதகருக்கு சந்திர தசை 10.07.2000 முதல் 10.07.2010 வரை
நடந்து முடிந்துவிட்டது,
ஒரு கிரகம் தன்னுடைய தசையில் தான் செய்ய வேண்டியதை
முழுமையாக செய்து முடிக்கும் என்ற விதிபடி சந்திரன் தன்னுடைய கெடுதலான் பலன்களை
முழுமையாக செய்துவிட்டார்.
ஆனால் 3ஆம் பாவமும்,1ஆம் பாவமும் ஒற்றைப்படை பாவங்களை
தொடர்பால் ஜாதகருக்கு முழுமையான பாதிப்பை சந்திரனால் கொடுக்கமுடியவில்லை.
No comments:
Post a Comment