உடலை நோய் தாக்கும் தன்மையை விளக்கம் ADVANCED KP STELLAR ASTROLOGY (உயர் கணித சார ஜோதிட) முறையில் மிகவும் துல்லியமான மருத்துவத்தை சார்ந்த ஜோதிட
விளக்கம்
பகுதி 1
லக்னம் சுய அறிவு ஒருவரது சுய(அறிவு)சிந்தனை,சுயமாக
முடிவெடுக்கும் அறிவு போன்ற்றைக்குறிக்கும்.
9ஆம் பாவம் என்பது லக்னத்திற்க்கு முன் திரிகோணமாக
உள்ளதால்,உள்ளுணர்வு,முன்யோசனை போன்றவற்றைக் குறிக்கும்.
5ஆம் பாவம் என்பது லக்னத்திற்கு பின் திரிகோணமாக உள்ளதால்
பின்யோசனை,எதிர்ப்பு வந்த பிறகு அதனை சமானிக்கும் மதி நுட்பம் போன்ற்றைக்குறிக்கும்.
லக்னம் என்பது ஒருவரின் உடல் எப்படி இயங்க வேண்டும் என்ற
உடல் இயக்கத்தின் அறிவைக் குறிக்கும்,நோய் கிருமிகள் எதாவது தாக்கினால்,உடனே
லக்னம் தன்னுடைய சுய அறிவைக்கொண்டு அந்த நோய்கிருமிகளை எதிர்ந்து போராட உடலில்
உள்ள வெள்ளை அணுக்களுக்கு உத்திரவிடும்.எனவே லக்னம் என்பது நோய் எதிர்ப்பு
சக்தியைக் குறிக்கும் பாவமாகும்.
லக்னம் பாதிக்கபட்டவர்களுக்கு உடலில் நோய் கிருமிகளின்
ஆதிக்கம் அதிகளவில் இருந்து உடலினைத் தாக்க ஆரம்பித்த பிறகும் அதனை உணராத நிலையில்
இருக்கும் போது சிறிது நேரத்திற்க்குப் பிறகு, உடலில் உள்ள அடுத்த கட்டமாக
பயன்படுத்தும் அறிவினை (பின் யோசரன) 5ஆம் பாவசம் குறிக்கும்.
அதாவது 5ஆம் பாவம் என்பது நோய் வந்த பிறகு நோய்
குயமாவதைக்குறிக்கும்.
9ஆம் பாவம் என்பது உடலுக்குள்ளாக சில கொடிய நோய் கிருமிகள்
உடலுக்கு உள்ளே வராமல் இருக்க தெய்வ அனுகிரஹ உடலுக்கு தந்த சூட்சும அறிவினை 9ஈம்
பாவத் குறிக்கும்.
6ஆம் பாவம் என்பது ஜாதகரின் உணவு பழக்கத்தையும்,நோய்
கிருமிகளையும்,அதனால் உண்டாகும் நோயையும் குறிக்கும்.
6ஆம் பாவத்திற்க்கு 8ஆம் பாவம் 3ஆம் பாவமாக வருவதால் 6ஆம்
பாவத்தின் காரகங்களை அடுத்த பரிமாணத்திற்கு 8ஆம் பாவம் எடுத்து செல்லும்,ஒன்றுக்கு
மேற்பட்ட நோய்கள் ஒரே நேரத்தில் உடலைத் தாக்குவதையும் குறிக்கும்.
ஒன்றுக்கு மேற்பட்ட நோய்கள் உடலை தாக்கினால் லக்னம் என்ற
உடல் அதை எதிர்த்து போராட முடியாமல் பலமிழந்துவிடும்.
ஒன்றுக்கு மேற்பட்ட நோய்கள் உடலில் இருந்தால் ஒவ்வொரு
நோய்க்கும் தனித்தனியே மருந்துகள் உட்கொள்ளும் போது,ஒரு நோய்க்கு உட்கொண்ட
மருந்துஇவேறு ஒரு நோய்க்கு பாதகமாக அமைந்து (Side Effect)நோயை அதிகப்படுத்தும்
அதாவது 6ஆம் பாவத்திற்கு லக்னம் 8ஆம் பாவமாக அமைவதால் 6ஆம்
பாவத்தை(நோயை)தன்னுடைய சுய அறிரவ கொண்டு அல்லது மருந்துகள் மூலம்
கட்டுப்படுத்தும்.
6ஆம் பாவம் செயல்படும் போது,அது உடலின் நோய் எதிர்ப்பு
திறனை (உடலின் அறிவினை)முழுவதுமாக தடுக்க இயலாது,அதாவது 1,5,9ஆம் பாவத்திற்கு
8,12ஆம் பாவமாக 6ஆம் பாவம் அமையவில்லை.
No comments:
Post a Comment