Thursday, 21 April 2016

தசையை புத்தி வெல்லுமா



            தசையை புத்தி வெல்லுமா
பாவம் என்பதற்கு பொருள் உள்ளே அமைந்து இருப்பதை குறிக்கும்.

கிரகம் என்பதற்கு பொருள் வெளியே அமைந்து இருக்கும் அலங்காரத்தை குறிக்கும்.

ஒரு கிரகம் தன்னுடைய தசை நடத்தும் போது தன்னுடைய பாவத்தின் வலிமையை முழுவதுதையும் அந்த தசையில் அந்த கிரகம் செயல்படுத்தும்.

ஒரு கிரகம் தன்னுடைய பாவத்தின் மூலமாக தான் நின்ற நட்சத்திரம்,உப நட்சத்திரம் முலமாக தான் என்ன என்ன செய்ய நினைக்குமோ எல்லாவற்றையும் அந்த கிரகம் 
தன்னுடைய தசையில் செயல்படுத்தும்.

தசை என்பது வலிமையானது
தசை என்பது DIRECTION /இலக்கு/நோக்கம்

தசை அல்லது திசை சரியில்லை என்றால் தன்னுடைய இலக்கை நோக்கி பயணம் செய்ய முடியாது,தன்னுடைய எண்ணத்தை நிறைவேடற்றமுடியாது.

தசை நாதன் 6யை காட்டி புத்தி நாதன் 5யை காட்டினால் புத்தி நாதன் செயல்படும் தசை நாதன் செயல்படாது ஆனால் அந்தரநாதன் 4யை காட்டினால் தசையும்,அந்திரமும் செயல்படும் அப்பொழது புத்திநாதன் செயல்படாது.

அதாவது தசை என்பது செயல்படுத்துவதற்க்கு காத்துகொண்டுயிருக்கும்.
                       
                     புத்தி

புத்தி என்பது (அறிவு) தசையோடு சேர்ந்து செயல்படுத் போது புத்தி வலிமையாக செயல்படும்.
தசைக்கு எதிராக செயல்படும் போது வலிமை இல்லாமல் 
புத்தி செயல்படும்.

தசை ஆதரவு இருந்தால் அதிக அளவு நன்மை 
கிடைக்கும்.

தசை ஆதரவு இல்லாமல் இருந்தால் நன்மை குறைவு.
தசையால் மறுக்கும் விஷயத்தை புத்தியால் பெரியள வில்லை  செயல்படுத்தமுடியாது.
      
நிலையான பாவங்கள் நிலையற்றபாவங்கள்
1,2,6,7,10ஆம் பாவங்கள் நிலையான பாவங்கள்யாகும்
மற்ற பாவங்களான 3,4,5,8,9,11,12 நிலையற்ற பாவங்கள்யாகும்.

நிலையான பாவங்கள் என்பதற்க்கு பொருள் என்னவெனில் ஒரு மனிதனுக்கு காலமுழுவதும் (வாழ்நாள் முழுவதும்) தேவையான காரகங்களை அந்த பாவங்கள் கொண்டுள்ளன என்பதால்

1ஆம் பாவம் சுய அறிவு,கௌரவம்,தனி திறமை, தன்னம்பிக்கையை கொண்டுள்ளது,

2ஆம் பாவம் தனம்,தானியம்,பேச்சு, காரகங்களை கொண்டுள்ளது,

6ஆம் பாவம் என்பது அடிமை வேளையை குறிக்கும் அதாவது மாதசம்பளம் வாங்குவது, மற்றவர்களை அடக்கிஆளுவதை குறிக்கும்,மற்றவர்களை வெற்றிக் கொள்வது,போட்டி,பொறாமை போன்றகாரகங்களை குறிக்கும்,

7ஆம் பாவம் சழூகம்,வியாபாரம், கூட்டாளி, மனைவியை போன்ற காரகங்களை குறிக்கும்,

10ஆம் பாவம் தொழியில் அந்தஸ்சான  நிலையை குறிக்கும்,அதிகாரகம் மிக்க பதவியை குறிக்கும் இவைகள் ஜாதகருக்கு நீண்ட காலங்களுக்கு தேவையானவை என்பதால் இவை நிலையான பாவங்கள் ஆகும்.
நிலையான பாவங்களுக்கு விதி கொடுப்பினை மிகவும் முக்கியம் ஆகும்.

நிலையற்ற பாவங்களான 3,4,5,8,9,11,12 இவைகளில் காரகங்களை ஜாதகர் நீண்டகாலத்திற்க்கு அனுப்பிக்க போவது இல்லை.
             

4ஆம் பாவம் வீடு கட்டுவது என்பது 5 மாதத்தில் முடியும் காரியம் என்பதால் 4ஆம் பாவம் 3,7,11ஆம் பாவங்களை தொடர்பு கொண்டுயிருந்தாலும் ஒரு புத்தி 4,6,10ஆம் பாவங்களை தொடர்பு கொண்டுநடக்கும் போதே ஜாதகரால் ஒரு வீடு கட்டமுடியும் என்பதால் விதி கொடப்பினை முக்கியம் இல்லை என்று கூறபடுகிறது.

5ஆம் பாவம் 4,8,12ஆம் பாவங்களை தொடர்பு கொண்டுயிருந்தாலும் 3,7,11ஆம் பாவங்களை தொடர்பு கொண்டு 1 வருடம் கொண்ட புத்தி நடக்கும் போது எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் குழந்தை பிறப்பு வாய்ப்பு உள்ளது.

9ஆம் பாவத்தின் உயர்கல்வி என்பது 3 வருடங்களில் முடிக்கபடுகிறது என்பதால் 3,7,11ஆம் பாவங்களை தொடர்பு கொண்ட இரு புத்திகள் படிக்கும் காலங்களில் நடந்தால் போதும்.

11ஆம் பாவம் ஆராய்ச்சி(P.hd) படிப்பு படிப்பதற்க்கு 4 வருடங்களில் முடிக்கபடுகிறது என்பதால் 3,7,11ஆம் பாவங்களை தொடர்பு கொண்ட இரு புத்திகள் படிக்கும் காலங்களில் நடந்தால் போதும்


இந்த மாதிரியாக ஒரு துணை விதி ஏன் எதற்க்காக கூறபட்டது என்றால் வழி தெரியாமல் இருப்பற்க்களுக்கு காகதான்,அவர்களுக்கு விதி கொடுப்பினை கெட்டுவிட்டது,கிரக காரகம் கெட்டுவிட்டது அதனால் அந்த பாக்கியம் இல்லை என்று கூறிவிட கூடாது அதற்க்குகான வழிமுறைகள் இருக்கிறது என்று இந்த நிலையான பாவங்கள்  மற்றும் நிலை அற்ற பாவங்கள் என்று பிரித்து இதற்க்கு விதி கொடப்பினை முக்கியம் இதற்க்கு முக்கியம் இல்லை என்று வரைமுறைகள் கூறபட்டுள்ளது.

       விதி கொடுப்பினையின் முக்கியத்துவம்
ஒரு கிரகம் தான் நின்ற நட்சத்திரம் மற்றும் உப நட்சத்திரமாக மாறி அவர்கள் செய்ய வேண்டிய வேளையை இந்த கிரகம் தன்னுடைய கிரக காரகம் மற்றும் பாவ காரகம் மூலமாக  அந்த பாவ வேளையை செய்யும்.


ஒரு கிரகம் தான் நின்ற நட்சத்திரம் மற்றும் உப நட்சத்திரம் மூலமாக தொடர்பு கொண்ட பாவங்கள் தன்னுடைய பாவங்களுக்கு சாதகமாக இருந்தால் தொடர்பு கொண்ட பாவ காரகங்களை தன்னுடைய பாவ காரகங்கள் மூலமாக செயல்படுத்தும்.

ஒரு கிரகம் தான் நின்ற நட்சத்திரம் மற்றும் உப நட்சத்திரம் மூலமாக தொடர்பு கொண்ட பாவங்கள் தன்னுடைய பாவங்களுக்கு பாதகமாக இருந்தால் தன்னுடைய பாவங்களின் காரகங்களை கெடுத்துக்கொண்டு தன் பாவத்துக்கு முதலில் கெடுதலை செய்யும் கிரகமாக தன்னையை மாற்றி கொள்ளும்,தான் தொடர்பு கொண்ட பாவங்களின் காரகங்கள் மூலமாக தன் பாவ காரகங்களுக்கு கெடுதலை செய்யும்.

எந்த பாவங்கள் 8ஆம் பாவத்தை தொடர்பு கொண்டால் அந்த கிரகம் தன் பாவகாரகங்கள் மூலமாக தன் பாவத்துக்கு கெடுதலையை செய்யும்



             விதி கொடுப்பினை பாதிக்கபட்ட பாவங்களின் காரகங்களை ஜாதகரால் அவ்வளவு எளிதில் அனுபவிக்க முடியாது,மிகவும் கஷ்டபட்டு,சிரம்மபட்டு, கடுமையான மயற்ச்சியின் மூலமாக காலம்கடந்து அனுபவிப்பார், அவ்வாறு அனுபவிக்கும் போது சுவாரஸ்யம் இருக்காது.
                

விதி கொடுப்பினை பாதிக்கபட்ட பாவங்களின் காரகங்களை மூலமாக ஜாதகர் பல அசிங்கம், அவமானங்களையும், வெறுப்பு,தேவையில்லாத மன உளைச்சளையும் அடைவார்.
              

விதி கொடுப்பினை பாதிக்கபட்ட பாவங்களின் காரகங்களை செயல்படுத்த தசை கடுமையாக போராட வேண்டும்.






No comments:

Post a Comment