Thursday, 21 April 2016

குழந்தை பிறப்பை பற்றிய விதிகளும் விளக்கமும்



    குழந்தை பிறப்பை பற்றிய விதிகளும் விளக்கமும்


உயர் கணித சார ஜோதிடம் முறையில் ADVANCED  KP STELLAR ASTROLOGY (விளக்கம் காட்டுபாக்கம் ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ்)

எந்த விதமான குழப்பமும் இல்லாத அடிப்படை விதிகளுக்கு மாறாத தெளிவான விதிகள்விதி ஒன்று
லக்னம் பாவம் தான் நின்ற நட்சத்திரம் மற்றும் உப நட்சத்திரம் மூலமாக 8,12ஆம் பாவங்களை தொடர்பு கொள்ள கூடாது.
விதி இரண்டு
லக்னம் பாவம் தான் நின்ற நட்சத்திரம் மற்றும் உப நட்சத்திரம் மூலமாக 5ஆம் பாவத்திற்க்கு 8,12ஆம் பாவங்களான 4,12ஆம் பாவங்களை தொடர்பு கொள்ள கூடாது.
விதி மூன்று
5ஆம் பாவம் தான் நின்ற நட்சத்திரம் மற்றும் உப நட்சத்திரம் மூலமாக 8,12ஆம் பாவங்களை தொடர்பு கொள்ள கூடாது
விதி நான்கு
5ஆம் பாவம் தான் நின்ற நட்சத்திரம் மற்றும் உப நட்சத்திரம் மூலமாக 5ஆம் பாவத்திற்க்கு 8,12ஆம் பாவங்களான 4,12ஆம் பாவங்களை தொடர்பு கொள்ள கூடாது.
விதி ஜந்து
குரு தான் நின்ற நட்சத்திரம் மற்றும் உப நட்சத்திரம் மூலமாக 8,12ஆம் பாவங்களை தொடர்பு கொள்ள கூடாது.
விதி ஆறு
குரு தான் நின்ற நட்சத்திரம் மற்றும் உப நட்சத்திரம் மூலமாக 5ஆம் பாவத்திற்க்கு 8,12ஆம் பாவங்களான 4,12ஆம் பாவங்களை தொடர்பு கொள்ள கூடாது.
விதி ஏழ
நடக்கு தசை லக்னத்துக்கு மிகவும் தீமையை தரும் 8,12ஆம் பாவங்களை தொடர்பு கொண்டு தசை நடைபெற கூடாது
விதி எட்டு
நடக்கு தசை 5ஆம் பாவத்திற்க்கு மிகவும் தீமையை தரும் 4,12ஆம் பாவங்களை தொடர்பு கொண்டு தசை நடைபெற கூடாது
விதி ஒன்பது

ஒரு கிரகம் தன்னுடைய தசையில் எந்த எந்த பாவங்களுக்கு உபநட்சத்திரமாக அல்லது உபஉப நட்சத்திரமாக அல்லது நட்சத்திரமாக உள்ளதோ அந்த பாவங்களை முன்னிறுத்தியே தனது தசையை எடுத்து நடத்தும்.(கொடுப்பினை தசாபுத்தியும் புத்தகத்தில் 187 பக்கம் விதி 16)
இருப்பினும் தசாநாதன் எந்த பாவமுனைக்கு உப நட்சத்திரமாக வருகின்றதோ அதை முன்னிருத்தியே தனது தசையை நடத்தும்.அதற்கு அடுத்த நிலையில் தசாநாதன் எந்த பாவமுனைக்கு உபஉப நட்சத்திரமாக உள்ளதோ அந்த பாவத்தை முன்னிருத்தியே தனது தசையை நடத்துவார், கடைசி நிலையில் தசாநாதன் எந்த பாவமுனைக்கு நட்சத்திரமாக உள்ளாரோ அந்த பாவத்தை முன்னிருத்தியே தனது தசையை நடத்துவார்.
இதில் தசைநாதன் நின்ற நட்சத்திர அதிபதி எந்த எந்த பாவமுனைகளுக்கு உப நட்சத்திரமாக மற்றும் எந்த எந்த பாவமுனைக்கு உபஉப நட்சத்திரமாகவும், நட்சத்திரமாக வருகின்றதோ அந்த பாவங்கள் அனைத்தும் நம்பவங்களாக அமையும்,இதில் தசைநாதன் நின்ற நட்சத்திர அதிபதி எந்த எந்த பாவமுனைகளுக்கு உப நட்சத்திரமாக உள்ளதோ அந்த பாவத்திற்குரிய சம்பவமே மேலோங்கி இருக்கும்.
மேற்கண்ட சம்பவத்திற்கு தசாநாதன் நின்ற உப நட்சத்திர அதிபதி எந்த எந்த பாவமுனைகளுக்கு உப நட்சத்திரமாக மற்றும் எந்த எந்த பாவமுனைக்கு உபஉப நட்சத்திரமாகவும், நட்சத்திரமாக வருகின்றதோ அந்த பாவங்கள் அனைத்தும் சாதகம் அல்லது பாதக, நடுநிலையான பலனை நிர்ணயம் செய்யும்
குறிப்பாக தசைநாதன் மேற்கண்ட பாவ செயல்களை மட்டும் செய்யாமல் 12 பாவங்களுக்கும் சாதக பாதக,நடுநிலையான பலனை தன்னுடைய கிரக,பாவ காரக ரீதியிலும்,தான் நின்ற நட்சத்திரம்,உப நட்சத்திர கிரகங்களின் கிரக மற்றும் பாவ காரக ரீதியிலும் செயல்படுத்துவார்
விதி பத்து
ஒரு கிரகம் தன்னுடைய தசையில் தான் செய்ய வேண்டியை வேளையை முழுமையாக செய்யது முடிக்கும் என்பது உயர் கணித சார ஜோதிடத்தின் அடிப்படை விதியாகும்.

ஆண் ஜாதகம்
வரிசை எண்ண1130 பெயர் -ஆண் ,பிறந்த தேதி -9.11.1967 time-10.47 p.m,place-srilanka—Jaffna ஆளும் கிரகம் எடுத்த இடம் காஞ்சிபுரம் ஆளும் கிரகம் எடுத்த தேதி  05.02.2015  9.26.00 மணி பிற்பகல் பிறந்த நேரந்தை திருத்தைய நேரம் 10.51.37 மணி பிற்பகல்
1,7ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக புதன் உள்ளது,புதன் நின்ற நட்சத்திரம் ராகு,புதன் நின்ற உப நட்சத்திரம் ராகு
ராகு 4,10,12ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாகவும்,1,9ஆம் பாவங்ளுக்கு உபஉப நட்சத்திரமாகவும்,4,12ஆம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாக உள்ளது
புதனும் ஒரு அலி கிரகம் அல்லது இரட்டை தன்மையுள்ள கிரகம்,ராகுவும் ஒரு அலி கிரகம் ஆகும்.
புதன் 5ஆம் பாவத்திற்க்கு 8,12ஆம் பாவங்களான 4,12ஆம் பாவ வேளையை மிகவும் வலிமையோடு செய்கிறது.
லக்ன கொடுப்பினை 5ஆம் பாவத்திற்க்கு 75 சதவீதம் எதிராக உள்ளது.
இதனால் ஜாதகருக்கு மலட்டுதன்மை இருக்க அதிகமாக வாய்ப்புள்ளது.


5ஆம் பாவ கொடுப்பினை  5ஆம் பாவத்திற்க்கு 100 சதவீதமும் சாதகமாக உள்ளது
புத்திர காரகன் குரு மேலோட்டமாக பார்க்கும் போது 3,9ஆம் பாவங்களை வைத்து உள்ளார் இது நன்றாக உள்ளது,ஆனால் குரு நின்ற உப நட்சத்திரம் சனி 4,6,8ஆம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாக உள்ளார் மற்றும் சனி 1,5,9ஆம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாக உள்ளது.

6ஆம் பாவத்திற்க்கு உப நட்சத்திரமாக குரு உள்ளார்,குரு நின்ற நட்சத்தரம் கேது,குரு நின்ற உப நட்சத்திரம் சனி ஆகும்.
குருவும் அலி கிரகங்களான கேது,சனியோடு தொடர்பு உள்ளது.
கேது 12ஆம் பாவத்திற்க்கு உபஉப நட்சத்திரமாகவும் உள்ளார்.
சனி 3,9ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாகவும்,4,6,8ஆம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாகவும்,1,5,9ஆம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாக உள்ளார்.

குரு சனியின் 3,9 ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக உள்ள பாவங்களின்  வேளையையும் செய்யும் அதே நேரத்தில் சனி 4,6,8ஆம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாக உள்ளதால் குரு 4,6,8ஆம் பாவ வேளையை செய்யும்,  1,5,9ஆம் பாவ வேளையையும் செய்யும் அதனால் குரு 25 சதவீதம் தீமை செய்யும் விதமாக உள்ளார் மற்றும் 4,6என்பது மோசமான பாவ ஆதிபத்தியம் ஆகும்.5ஆம் பாவத்தை முழுமையாக பாதிப்பை தரும் இந்த 4,6ஆம் பாவங்கள்.

ஜாதகருக்கு 7 வயது முதல் 25 வயது வரை ராகு தசை நடந்து உள்ளது
ராகு 4,10,12ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாகவும்,1,9ஆம் பாவங்களுக்கு உப உப நட்சத்திரமாகவும், 4,12ஆம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாகவும் உள்ளார்.
ராகு நின்ற  நட்சத்திரம் கேது ஆகும், ராகு நின்ற உப நட்சத்திரம் சூரியன் ஆகும்.

கேது 12ஆம் பாவத்திற்க்கு உபஉப நட்சத்திரமாகவும்,2,6,10ஆம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாகவும் உள்ளார்.
சூரியன் 5ஆம் பாவத்திற்க்கு உபஉப நட்சத்திரமாகவும்,3,7,11ஆம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாகவும் உள்ளார்.
ராகு 12ஆம் பாவத்திற்க்கு உபஉப நட்சத்திரமாக உள்ள கேதுவின் வேளையை 5ஆம் பாவத்திற்க்கு உபஉப நட்சத்திரமாக சூரியன் கெடுத்து 12ஆம் பாவ வேளையை செய்யகிறார்.

ராகு ஒரு அலி கிரகம்,கேது ஒரு அலி கிரகம் ஆகும்.
ராகு வைத்துள்ள 4,10,12ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாகவும், 4,12ஆம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாகவும்,இருந்து 12ஆம் பாவளையை செய்யும் போது 5ஆம் பாவம் முழுமையாக பாதிக்கபடும்
ராகு 1,9ஆம் பாவங்களுக்கு உப உப நட்சத்திரமாக இருந்து 12ஆம் வேளையை செய்வதால் லக்னத்திற்க்கு தரவேண்டிய பாதிப்பை 25 சதவீதம் வாலிப வயதிலே தந்து விட்டது.

ராகு 25வயத்திற்க்குள்ளாக 5ஆம் பாவத்திற்க்கு செய்ய வேண்டிய பாதிப்பை முழுமையாக செய்து முடித்துவிட்டது.
ராகு தசையில் செவ்வாய் புத்தியில் 05.09.1987 முதல் 22.9.1988 அந்த கால கட்டத்தில் செவ்வாய் ராகுவின் ஏஜென்டாக செய்ய வேண்டிய வேளையை செய்து இருப்பார்,

செவ்வாய் 11ஆம் பாவத்திற்க்கு உப உப நட்சத்திரமாக,8ஆம் பாவத்திற்க்கு ஆரம்பமுனை நட்சத்திரமாக இருக்கிறது.
செவ்வாய் நின்ற நட்சத்திர சுக்கிரன் 5,8,11ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக உள்ளது,செவ்வாய நின்ற உப நட்சத்திரமாக ராகு 4,10,12  ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக உள்ளது அதனால் 5,11ஆம் பாவத்தை முழுமையாக செவ்வாய் புத்தியில் கெடுத்துயிருக்கும்.

 /////////ஒரு கிரகம் தான் நின்ற நட்சத்திரம் மற்றும் உப நட்சத்திர கிரகத்தின் முழுமையான பாவ தொடர்பு கொண்ட பாவ வேளையை செய்யும்(அந்த கிரகங்கள் உப நட்சத்திரம் மற்றும் உப உப நட்சத்திரம், நட்சத்திரம் உள்ள அனைத்து பாவங்களின் வேளையும் செய்ய கடமைபட்டுள்ளது) என்பது உயர் கணித சார ஜோதிடத்தின் அடிப்படை விதியாகும்///////


22.9.1988 முதல் நடந்த குரு தசையும் 25 சதவீதம் அளவிற்க்கு 5ஆம் பாவத்தை கெடுக்கும் விதமாக உள்ளது.
இப்பொழது நடக்கும் சனி தசை பாதகமாகவே உள்ளது ஏனெனில்  சனி தன்னுடைய சொந்த நட்சத்திரத்தில் உள்ளது சனியின் 3,9ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக , 4,6,8ஆம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாக உள்ளார் மற்றும் சனி 1,5,9ஆம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாக உள்ளது.

சனி நின்ற உப நட்சத்திரம் ராகு 4,10,12ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாகவும்,1,9ஆம் பாவங்களுக்கு உப உப நட்சத்திரமாகவும், 4,12ஆம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாகவும் இருந்து 12ஆம் பாவ வேளையை செய்கிறார்.

இங்கு சனி மேலோட்டமாக பார்க்கும் போது 3,9,12 பாவ வேளைகளை செய்யதாலும் ராகுவின்,முழுதொடர்பின் வேளையையும் செய்ய சனி கிரகம் கடைமைபட்டுள்ளது.

ஆண்ணுக்கு முழுமையான ஆண்மை குறைபாடு உள்ளது விந்துவில் இருக்க வேண்டிய உயிர் அணு  குறைவாக இருக்கும் அல்லது தரம் இல்லாமல் இருப்பதாக இருக்கும்.



ஜாதகர் பிறந்த முதல் 9.11.1967 முதல் 22.9.2004 வரை நடந்த தசைகள் 5ஆம் பாவ பாதகமாக உள்ளது.முக்கியமாக லக்னம் 75 சதவீதம் பாதிக்கபட்டுள்ளது,அதற்க்கான தசையும் நடந்து முடிந்துவிட்டது அந்த தசையில் 5ஆம் பாவத்தையும் கெடுக்கும் வேளையும் செய்துவிட்டது.
நடப்பு சனியில் சூரிய புத்தி நன்றாக உள்ளது 13.9.2014 முதல் 26.8.2015 வரை மட்டும் நன்றாக உள்ளது.பிறகு வரும் புத்திகள் நன்றாக இல்லை.

வரிசை எண்ண1131 பெண் -birth-16-11-1972--time-12.20 பகல் --இடம்-srilanka-jaffna

ஆளும் கிரகம் எடுத்த இடம் காஞ்சிபுரம் ஆளும் கிரகம் எடுத்த தேதி  05.02.2015  3.45.45 மணி பிற்பகல் பிறந்த நேரந்தை திருத்தைய நேரம் 12.14.45 மணி பிற்பகல்
5ஆம் பாவம் உப நட்சத்திரம் பாதிப்பில் உள்ளது,
5ஆம் பாவ உப நட்சத்திரம் கேது 4ஆம் பாவத்திற்க்கும் உபஉப நட்சத்திரமாக,3,11ஆம் பாவங்களுக்கு ஆரம்ப முனை நட்சத்திரமாக இருப்பதால் அதனால் 5ஆம் பாவ வேளையை இவரே கெடுத்துப்பார் அதே நேரத்தில் 4ஆம் பாவ வேளையை ஒரளவுக்கு கெடுப்பார்
5ஆம் பாவ உப நட்சத்திரம் கேது நின்ற நட்சத்திரம் குரு கேது நின்ற உப நட்சத்திரம் கேதுயாகும்
குரு 8ஆம் பாவத்திற்க்கு உப நட்சத்திரமாகவும்,3,9,10,11ஆம் பாவங்களுக்கு உப உப நட்சத்திரமாகவும்,2,6ஆம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாகவும் உள்ளார்.
5ஆம் பாவம் 5,8ஆம் பாவங்களை காட்டுகிறது 5ஆம் பாவம் 30 சதவீதம் செயல்படும் பிறகு அதன் செயல்பாடுநின்றுவிடும் முழுமையாக 8ஆம் பாவம் செயல்படும் இதனால் 5ஆம் பாவம் பாதிக்கபட்டுள்ளது.
புத்திரகாரகன் குரு நன்றாக உள்ளார்.
1ஆம் பாவ கொடுப்பினை
1,7,10ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக சனி உள்ளார்,அவர் 12ஆம் பாவத்திற்க்கு உபஉப நட்சத்திரமாக உள்ளார்,10ஆம் பாவத்திற்க்கு ஆரம்பமுனை நட்சத்திரமாக உள்ளார்.
சனி நின்ற நட்சத்திரம் செவ்வாய் ஆகும், செவ்வாய் 12ஆம் பாவத்திற்க்கு உப நட்சத்திரமாகவும்,5,8ஆம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாகவும்,1,5,9ஆம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாகவும் உள்ளார்.
சனி நின்ற உபநட்சத்திரம் ராகு ஆகும், ராகு 2,3ஆம் பாவத்திற்க்கு உப நட்சத்திரமாகவும் உள்ளார்.3ஆம் பாவத்தை கெடுக்கும் 2ஆம் பாவத்திற்க்கும் ராகு அதிபதியாக உள்ளதால் 3ஆம் பாவம் வீரியமாக வேளையை செய்யாது

///////இதனால் 1ஆம் பாவ உப நட்சத்திரம் சனி 2,12ஆம் பாவ வேளையை செய்வார்/////// இதனால் லக்ன கொடுப்பினை பாதிக்கபட்டுள்ளது மற்றும் 5ஆம் பாவத்தையை கெடுக்கும் 12ஆம் பாவத்தை தொடர்பு கொண்டுள்ளது.

9ஆம் பாவ கொடுப்பினை 9ஆம் பாவ உப நட்சத்திரமாக சந்திரன் உள்ளதால் அதனுடைய பலன் தசை மற்றும் புத்திகளுக்கு ஏற்ப்ப மாறும்
9 வயது வரை ஜாதகருக்கு குரு தசை நடந்துள்ளது
9வயது முதல் 28 வயது வரை சனி தசை நடந்துயுள்ளது மதி வழியே விதி செல்லும் என்ற நியதிபடி சனி தசையை பற்றி ஆய்வு செய்வோம்.
சனியின் பாவ தொடர்புகள் மேலே விளக்கபட்டுள்ளது,சனி 2,12ஆம் பாவ வேளையை செய்கிறார் இதில் 12ஆம் பாவம் என்பது லக்னத்திற்க்கு 12ஆம் பாவம்கவும் 5ஆம் பாவத்திற்க்கு 8ஆம் பாவம் இதனால் குழந்தை பிறப்பை லக்னமூலமாகவும்,தசை மூலமாக சனி எதிர்ப்பு தெரிவிக்கிறார்
சனி 7ஆம் பாவத்திற்க்கும் உப நட்சத்திரமாக உள்ளார்,பெண்களுக்கு7ஆம் பாவம் கருப்பபையை குறிக்கும்,7ஆம் பாவம் 2,12ஆம் பாவதொடர்பை பெறுகிறது,7ஆம் பாவத்திற்க்கு 12ஆம் பாவம் 6ஆம் பாவமாக வருவதால் 7ஆம் பாவத்தில் உறுப்புகளில் நோய் இருக்க வாய்ப்பு உள்ளது மற்றும் 12ஆம் பாவம் லக்னத்திற்க்கு 12ஆம் பாவம் என்பதால் செயல்திறன்குறைந்து யிருக்கலாம்.2ஆம் பாவம் என்பது 7ஆம் பாவத்திற்க்கு 8ஆம் பாவம் என்பதால் அதில் ஒரளவுக்கு பிரச்சனைகள் இருக்க வாய்ப்புள்ளது 2ஆம் பாவம் லக்னத்திற்க்கு தீமையில்லை அதனால்.
5ஆம் பாவத்தில் உள்ள ஹார்மோன் உற்பத்திக்கு கிரக காரகமான சுக்கிரன் 11ஆம் பாவத்திற்க்கு உப நட்சத்திரத்திற்க்கு உப நட்சத்திரமாக இருந்து  8,12ஆம் பாவங்களை தொடர்பு கொள்கிறது,இதனால் ஜாதகருக்கு சினை முட்டை உற்ப்த்தி ஆவதில் பிரச்சனை உள்ளது.
இவ்வாறாக 5ஆம் பாவத்தில் பிரச்சனை,ஹார்மோன் உற்பத்தில் பிரச்சனை, கருப்பபையில் பிரச்சனை,9 வயது முதல் 28 வயது வரை நடக்கும் சனி தசையும் லக்னம்,7ஆம் பாவம்,5ஆம் பாவத்தை கெடுக்கும் விதமாக உள்ளது.
28 வயது முதல் 45 வரை நடக்கும் புதன் தசை
4ஆம் பாவ உப நட்சத்திரம் புதன், புதன்1,7ஆம் பாவத்திற்க்கும் உபஉப நட்சத்திரமாகவும் உள்ளார்
 4ஆம் பாவ உப நட்சத்திரம் புதன் நின்ற நட்சத்திரம் புதன்யாகும், புதன் நின்ற உப நட்சத்திரம் கேதுயாகும்.
கேது 5ஆம் பாவத்திற்க்கு உப நட்சத்திரமாகவும் 4ஆம் பாவத்திற்க்கு உபஉப நட்சத்திரமாகவும் 3,11ஆம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சதிதரமாக உள்ளார்.
மேலே குறிப்பிட்டுள்ள விதியை கவனமாக படிக்கவும் அந்த விதி படி புதன் முதலில் உப நட்சத்திரம் மூலமாக தொடர்பு கொள்ளும் பாவ வேளைகளை செய்வார்,பிறகு உபஉப நட்சத்திர வேளையை செய்வார் அதன் பிறக ஆரம்ப முனை நட்சத்திர வேளையை செய்வார்.அதாவது புதன் தசையின் முடிவில் இரண்டு புத்திகாலங்கள் என்று வைத்துக்கொள்ளலாம்.
புதன் 5ஆம் பாவத்திதை கெடுத்து 4ஆம் பாவத்தின் வேளையை செய்கிறார் இதனால் ஜாதகருக்கு குந்தை பிறக்கு வாய்ப்பு குறைவாக இருக்கிறது.
அதாவது 1ஆம் பாவம் பாதிக்கபட்டுள்ளது
5ஆம் பாவம் பாதிக்கபட்டுள்ளது
5ஆம் பாவத்தில் உள்ள ஹார்மோன் உற்த்திக்கு கிரக காரகமான சுக்கிரன் பாதிக்கபட்டுள்ளது
7ஆம் பாவம் குறிப்பிடும் கருப்ப்பை பாதிக்கபட்டுள்ளது
45 வயது வரை நடக்கும் தசையும் குழந்தை பிறக்கு தடையாக உள்ளது.

இந்த நேரத்தை ஏன் நான்  வைத்தேன் என்றால் நடந்த சம்பவம் வருமாறு நாம் ஆளும் கிரகத்தை பயன்படுத்த வேண்டும்.நாம் திருத்திய பிறந்த நேரத்தை ஏற்கெனவே நடந்த தசை.புத்திகளுடன் ஓப்பிட்டு பலன் சரியாக வருகிறதா என்று   தெரிந்துக் கொள்ளவும்.

இதற்க்கு பரிகாரக தலம் தேவாரத்தில் குழந்தை பிறக்க பதிக்கம் பாட பெற்ற தலம் திருவெண்கடு ஆகும்.அங்கு சென்று மூன்று குளத்திலும் முழ்கி சிவனை வழிபடுமாறு கேட்டு கொள்ளபடுகிறார்கள்



இப்பொழது பாரம்பரிய முறையில் இந்த இரு ஜாதகங்களுக்கு குழந்தை பிறப்பை பற்றி ஆய்வு செய்வோம்

பெயர் -ஆண் ,பிறந்த தேதி -9.11.1967 time-10.47 p.m,place-srilanka--jaffna
கடக லக்னம் 5ஆம் பாவஅதிபதி செவ்வாய் 6ஆம் பாவத்தில் மறைவு ஆனால் குரு 5ஆம் பார்வையாக செவ்வாயை பார்பது விஷசமாகும்.
பூராடம் 2ஆம் பாவத்தில் செவ்வாய் இருப்பது கடக லக்னத்திற்க்கு 4க்கும் 11 க்கும் குரிய சுக்கிரனின் சாரத்தில் உள்ளார்.
சர லக்னத்திற்க்கு பாதகாதிபதி 11ஆம் பாவம் என்பது உண்மை ஆனால் பொது விதி அனைத்து கோளுகளும் 11ஆம் பாவத்தில் இருந்தால் நன்மை  செய்யும் என்று அனைத்து பழமையான நூல்களில் கூறியுள்ளது.பாதகதிபதி  பாவ வலிமை மாதிரியாக முழுமையான தீமை செய்யும் என்று எந்த நூலிலும் கூற வில்லை.இரு ஆதிபத்தியமும் நல்ல ஆதிபத்தியம் தான்
செவ்வாய் நின்ற சார நாதன் சுக்கிரன் 3ஆம் பாவத்தில் மறைந்து நீச்சம் பெற்று சார பரிவர்த்தினை பெற்று உள்ளார்.
5ஆம் பாவம் எந்த கிரகமும் இல்லை எந்த கோளாளும் பார்க்கபடவில்லை.
5ஆம் பாவம் பாவ கர்த்தாரி யோகத்தில் உள்ளது இது மட்டுமே பாதிப்பான அமைப்பு ஆகும்.
புத்திர காரகன் குரு லக்கனத்திற்க்கு 2ஆம் இடத்தில் மகம் 3ஆம்  பாதத்தில் உள்ளார்.
புத்திர காரகன் குரு நின்ற நட்சத்திர அதிபதி கேது 4ஆம் பாவத்தில் உள்ளார்.
ஜாதகருக்கு 52 வயது ஆகிறது இதுவரைக்கும் குழந்தை பிறக்க வில்லை குழந்தை பிறப்புகாண விதிகளில் ஒற்றை தவிர மற்ற எல்லா விதகிளும் சாதகமாக உள்ளது.
ஜாதகருக்கு7 வயது முதல் ராகு தசை 25 வயது வரை நடந்து உள்ளது.ராகு அஸ்வினி 2ஆம் பாதத்தில் 10ஆம் இடத்தில் உள்ளார் அவருடைய சார நாதன் கேது 4ஆம் பாத்தில்  உள்ளார். ஒரு கிரகம் 10ஆம் இடத்தில் இருப்பது சிறப்பு மற்றும் அவருடைய சார நாதன்4 ஆம் பாவத்தில் இருப்பது மற்றொன்று சிறப்பு ஆகும்.நன்மை செய்யும் வித்த்தில் ராகு இருந்து குழந்தை பிறக்க இல்லை.
ஜாதகருக்கு25 வயது முதல் குரு தசை 41 வயது வரை நடந்து உள்ளது.
புத்திர காரகன் குரு லக்கனத்திற்க்கு 2ஆம் இடத்தில் மகம் 3ஆம்  பாதத்தில் உள்ளார்.புத்திர காரகன் குரு நின்ற நட்சத்திர அதிபதி கேது 4ஆம் பாவத்தில் உள்ளார்.
குரு 6,9க்கும் ஆதிபத்தியம் பெற்று உள்ளார் இந்த இரண்டு ஆதிபத்தியமும் நல்ல ஆதிபத்தியம் ஆகும்.அப்படி இருக்க குழந்தை பிறக்காதற்க்கு காரணம் என்ன?
ஜாதகருக்கு41 வயது முதல் சனி தசை 60 வயது வரை நடந்து வருகிறது.
கடக லக்கத்திற்க்கு 7க்கு8க்கும் உரிய சனி 9ஆம் பாவத்தில் வக்கிரத்தில் உள்ளார்.உத்திரட்டாதியில் 3ஆம் பாதத்தில் சுய சாரத்தில் உள்ளார்.
இரண்டு ஆதிபத்தியங்களில் ஒன்று நன்மை மற்றொன்று தீமை ஆனால் இருப்பது நன்மை செய்ய கூடிய இடமான 9ஆம் இடம் என்பதால் தீமை குறையும்.
வக்கிரத்தில் உள்ள பாவிகள் நன்மையை செய்வார்கள் என்பது ஜோதிட விதியாகும்.


9ஆம் பாவம் என்பது லக்னத்துக்கும் 5ஆம் பாவத்திற்க்கு மிகவும் நன்மை தரும் அமைப்பு ஆகும்.ஆனால் சனி தசையில் இதுவரை குழந்தை பிறக்க இல்லை 4முறைகள் செயற்க்கை கருவூட்டலுக்கு முயற்ச்சி செய்தும் பல இல்லை.
சனியும் செவ்வாய்யும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள். 6இல் மறைந்த செவ்வாயால் சனிக்கு பாதிப்பு இல்லை
பெண்ணு ஜாதகம்
பெண் -birth-16-11-1972--time-12.20 பகல் --இடம்-srilanka-jaffna
மகர ராசியில் லக்னபுள்ளி 28.18.31யில் உள்ளது.
5ஆம் பாவத்தில் மிருகசீரிடம்1 ஆம் பாதத்தில்  சனி உள்ளார்.சனி நின்ற சார நாதன் செவ்வாய் 10ஆம் பாவத்தில் உள்ளார். செவ்வாய் 4,11ஆம் பாவங்களுக்கு அதிபதி ஆவார்.
பாதக சானத்தை பற்றி மேலே விளக்கி உள்ளேன்,பாதக சானத்தைவிட நல்ல ஆதிபத்தியம் மற்றும் நல்ல இடத்தில் செவ்வாய் உள்ளார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.  இதனால் பாதிப்பு இல்லை.பாதக சானம் என்பது பாவத்தை போல் நன்மையோ அல்லது தீமையோ செய்யும் என்று எந்த பழைமையான நூல்களில் கூறவில்லை.
சனிகிரகம் 1,2ஆம் பாவ அதிபதியாக நல்ல ஆதிபத்தியம் பெற்று 5ஆம் பாவத்தில் இருப்பதால் இதை பாதிப்பாக கருத கூடாது.
5ஆம் அதிபதி சுக்கிரன் 9ஆம் பாவத்தில் சித்திரை 1ஆம் பாதத்தில் இருந்து நீச்சம் பெற்று உள்ளார்.5ஆம் அதிபதி பாதிக்கபட்டள்ளார்.
பாவமே வலிமையானது என்பது ஜோதிடவிதியாகும்.5ஆம் பாவம் பாதிக்கபடவில்லை ஆனால் புத்திர காரகனும்.புத்திரசானதிபதியும் பாதிக்கபட்டுள்ளது.


     
12ஆம் பாவத்தில் குரு 14.20.02 டிகிரியில் மறைந்து உள்ளார் அதே 12 ஆம் பாவத்தில் ராகு 26.12.23 டிகிரியில் மறைந்து இருக்கிறார்,இரு கிரகங்கள் இணைவு என்பது ஒரு பாதத்தில் இருப்பதை குறிக்கும் ஆனால் இங்கு 12டிகிரி இடைவெளி ராகுவும் குருவும் இருப்பதால் இதை ராகு குரு சேர்க்கையாக இதை கொள்ள கூடாது.
அதனால்5ஆம் பாவமும்,லக்ன அதிபதியும் பாதிக்கபடவில்லை. 5ஆம் அதிபதியும் பாதிக்கபட்டு உள்ளார் மற்றும் புத்திர காரகன் குரு பாதிக்கபட்டுள்ளார்.
9வயது முதல் சனி தசை 28 வயது வரை நடந்தது,சனி நன்மை செய்யும் விதத்தில் இருந்தும் குழந்தை பிறப்பு இல்லை.
28வயது முதல் தசை 45 வயது வரை நடக்கிறது,புதன் கேட்டை 1ஆம் பாதத்தில் வக்கிரத்தில் உள்ளார்.
மகர லக்னத்திற்க்கு புதன் 6,9ஆம் பாவங்களுக்கு அதிபதியாக இருந்து 11ஆம் பாவத்தில் உள்ளார். புதன் 11ஆம் பாவத்தில் இருந்து தசை நடத்துகிறது.
சூரியனுக்கும் புதனுக்கும் இடை வெளி 18டிகிரி உள்ளது அதனால் சூரியனும்,புதனும் இணைவாக கருத கூடாது.
சனி தசையும் புதன் தசையும் நன்மை செய்யும் வித்த்தில் இருந்தும் குழந்தை பிறப்பு இல்லை. குழந்தை பிறப்பு இல்லை என்பதற்க்கு உறுதியான காரணத்தை பாரம்பரிய முறையில் சொல்லமுடியவில்லை ஆனால் உயர் கணித சார ஜோதிட முறையில் உறுதியான காரணத்தை கூற முடிகிறது.
ஜோதிடர் சு.அண்ணாமலை M.A (ASTRO)., M.Phil (ASTRO) .,cell9843504457

































No comments:

Post a Comment