Thursday, 28 April 2016

யாருக்கு சர்க்கரை நோய் வரும்? வராது? ADVANCED KP STELLAR ASTROLOGY (உயர் கணித சார ஜோதிட) முறையில் மிகவும் துல்லியமான மருத்துவத்தை சார்ந்த ஜோதிட விளக்கம்

யாருக்கு சர்க்கரை நோய் வரும்? வராது? ADVANCED KP STELLAR ASTROLOGY (உயர் கணித சார ஜோதிட) முறையில் மிகவும் துல்லியமான மருத்துவத்தை சார்ந்த ஜோதிட விளக்கம்
                                                          சர்க்கரை நோய்

ஒருவரின் உடலில் சர்க்கரை அல்லது குளுக்கோ அளவு 100 மிலிட்டர் இரத்தித்தில் 180 மி,கிராம் அளவிற்கு மேல் சேர்ந்தால் அவரின் இரத்தம் அசுத்தம் அடைந்து சிறுநீரில் சக்கரை வெளியேறும் நிரையே நீரிழிவு நோய் அல்லது சர்க்கரை நோய் ஆகும்.

நமது உடலில் சக்திக்கு ஆதாரமான உயிர்ச் சத்தான சர்க்கரைச் சத்தை இரத்தத்திலிருந்து உடல் உறுப்புகளில் உள்ள செல்கள் உறிஞ்ச் இயலாத நிலை சர்க்கரை நோயாக மாறுகின்றது.

நாம் உண்ணும் உணவில் உண்டாகும சக்தி இரத்தத்தில் கலந்து விடுகினறது,இந்த இரத்ததிலிருந்து பல்வேறு சத்துக்களை செல்கள் உறிஞ்சுவதால் மூரை உட்பட உடல் இயக்கம் சரியாக செயல்படு கின்றது.அந்த பல்வேறு சக்துகளில் சர்க்கரை அல்லது குளுக்கோஸ் என்ற சத்தும் மக முக்கியமானது ஆகும்.


இரத்தத்தில் உள்ள சர்க்கரைச் சத்தைத் தவிர மற்ற சத்துகளை செல்கள் அப்படியே உறிஞ்சுகின்றது.ஆனால் சர்க்கரைச் சத்திற்கு மட்டும் கணையத்திலிருந்து உற்பத்தியாகும் இன்சுலின் என்ற திரவம் சர்க்கரையை செல்களுக்குள் செல்ல தேவைப்படுகின்றது.
இந்த இன்சுலின் இல்லாமல் சக்கரை மட்டும் நேரடியாக இரத்தத் திலிருந்து செல்களுக்கு செல்ல முடியாது என்பதே இயற்க்கை உடலுக்கு தரும் கட்டுப்பாடு.

இரத்தம் மூலம் எல்லா செல்களுக்கும் இந்த சர்க்கரைச் சத்து சென்றால் தான் ஒருவர் சக்தியைப்பெற முடியும்.
இரத்தத்தில் உள்ள சக்கரை சத்தை உடலில் பல பகுதிக்கும் கொண்ட சேர்க்கும பணியை இன்சுலின் செய்கின்றது.


இன்சுலினுக்குத் தட்டுப்பாடு உண்டாகி விட்டால் இரத்ததில் தேவைக்கு அதிகமான சர்க்கரை சேர்ந்து இரத்ததிலிருந்து செல்களுக்கு சர்க்கரை செல்லாமல் இரத்ததிலேயே தேங்க ஆரம்பிக்கும்.


சர்க்கரையை செல்கள் பயன்படுத்த இயலாத நிரையில் தாகம் பெருகும்.நிறைய நீர் பருகுவதால் அந்த நீரும் ஏற்கெனவே இரத்தத்தில் சர்க்கரையும் கரைந்து சிறுநீராக வெளியேறும்.இதை தான் நீரிழிவு நோய் என்கிறோம்.
 நமது தவறான உணவு பழக்க வழக்கங்களினால் உண்டாகும சீரண குளறுபடிகளால் அதிகமான சர்க்கரை உற்பத்தியாகி,இதற்கு கணையத்திலிருந்து உண்டாகும் எதிர்ப்பினால் இன்சுலினை அது சுரக்காமல் விடுவதால் சர்க்கரை இரத்த்த்திலேயே தங்கி,செல்களை சென்று அடையாத நிலையில் உடலில் ஏற்படும் முடக்கமே சர்க்கரை நோய் என்று சுருக்கமாக கூறலாம்.


குழந்தை பருவத்தில் ஒரு சிலருக்கு வரும் சர்க்கரை நோய் இயற்கையிலேயே கணையம் முழுவதும் இயங்காத நிலையில் உண்டாகும் பழுதால்(இன்சூலின் சுரக்காமல் இருப்பதால்)சர்க்கரை நோய் வரும்.இது உடலில் உள்ள சர்க்கரை நோயாளிகளில் 1 சதவீதம் நபருக்கு மட்டுமே உள்ளது.



                                 சக்கரை நோயின் நிலை 1


சுவையான உணவுப் பொருள்களுக்கும்,மனதை மயக்கும் ஆடம்பர உணவு பொருட்களுக்கும்(இனிப்பு)காரகம் வகிக்கும் கிரகம் சுக்ரன் ஆகும்.


சுக்ரகன் ஒரு ஜாதகத்தில் 1,3,5,7,9,11 ஆம் பாவங்களை மட்டுமே தொடர்பு கொண்டுயிருந்தால் அந்த ஜாதகர் சுக்ரனின் காரகமான சுவையான பொருட்களை நீடித்த நிலையில்(வாழ்க்கையின் பெரும் பகுதியில்)உட்பொள்ள கொடுப்பினை உள்ளது என கொள்ளலாம்.


சுக்ரன் லக்னத்திற்கு சாதகமற்ற 4,6,8,12ஆம் பாவத்தொடர்பினைப் பெற்றிருந்தால் ஜாதகரால் அவர் மனதை மயக்கும்(அவர் விரும்பும்)உணவு பொருட்களை நீடித்த நிரையில் உட்கொள்ள முடியாது.ஆரம்பத்தில் அவரது உடல் அதை ஏற்றுக்கொள்ளாது,பிறகு அதன் மீது வெறுப்பு உண்டாகிவிடும்.


ஒரு கிரகம் லக்னத்திற்கு பாதகமான பாவங்களை தொடர்பு கொண்டால் அந்த கிரகத்தின் காரகங்களை ஜாதகர் மகிழ்ச்சியாக அனுபவிக்கமாட்டார்,அவரது உடலும் அதனை ஏற்றுக்கொள்ளாது.


அந்த வகையில் ஒவ்வொரு கிரகமும் அல்லது பாவமும் லக்னத்திற்கு சாதகமான நிரையில் உள்ளதா அல்லது லக்னத்திற்கு பாதகமான நிலையில் உள்ளதா என்பதை கருத்தில் கொண்டே ஒருவருக்கு நோய் நிர்ணயம் செய்யவேண்டும்.



சுக்ரன் உலகில் உள்ள இன்பங்களுக்கும் காரகர் என்பதால் ஒருவருக்கு சுக்ரன் 4,6,8,12ஆம் பாவத் தொடர்பு கொள்ளும் போது அந்த இன்பவங்களை அனுப விக்க முடியாத சூழ்நிலையை அவருக்கு தருகின்றது.
சர்க்கரை நோய் வந்தவர்கள் வாய்க்கு ருசியாக குறிப்பாக இனிப்பு பொருட்களை சாப்பிடக் கூடாது என்ற நிர்பந்த்த்திற்குத் தள்ளப் படுகின்றார்கள்,அதே போல் மனத்திற்கும் உடலுக்கும் இன்பத்தை தரும் தாம்பத்ய இன்பத்தையும் அவர்களால் மற்றவர்களை போல் அனுபவிக்க முடியாது.



சக்கரை நோய்க்குக் காரணமான பாவம் 4ஆம் பாவம்(தேவைக்கு அதிகமான சக்தி உற்பத்தி)ஆகும்.இந்த 4ஆம் பாவம்.5ஆம் பாவம் என்னும் தாம்பத்ய இன்பத்திற்கு 12ஆம் பாவம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.



அந்த வகையில் சுக்ரன் பின்வரும் நிலையில் இருந்தால் ஒருவருக்கு சர்க்கரை நோய் ஒருவருக்கு வராது அல்லது நீண்ட காலத்திற்கு பிறகு(சுமார் 65 வயதிற்கு பிறகு)வரலாம்.மேலும் சர்க்கரை நோயால் அவரின் எந்த உறுப்புகளுக்கும் பிரச்சனை வராது.வந்தாலும் கட்டுக்குள் இருக்கும.



சக்கரை நோய்க்கான பாவ மற்றும் கிரக காரக பாவ தொடர்புகள் பற்றிய விபரம்


1) சுக்ரன் எந்த வித்த்திலும் 4,6,8,12ஆம் பாவ முனைகளின் உபநட்சத்திரமாகவோ,நட்சத்திரமாகவோ, உபஉப நட்சத்திரமாகவோ அமையக்கூடாது.



2) சுக்ரன் தான் நின்ற நட்சத்திரம்,உப நட்சத்திரம் மூலமாக 4,6,8,12ஆம் பாவங்களை தொடர்பு கொள்ளகூடாது


3) சுக்ரன் 1,3,5,7,9,11ஆம் பாவ முனைகளின் உப நட்சத்திரமாகவோ, நட்சத்திரமாகவோ,உபஉப நட்சத்திரமாகவோ இருந்து சுக்கிரனின் நட்சத்திரம்,உபஉப நட்சத்திரத்தில் நிறைய கோள்கள் இருப்பது சிறப்பான அமைப்பு ஆகும்.



4) சுக்ரன் தான் நின்ற நட்சத்திரம்,உப நட்சத்திரம் மூலமாக 1,3,5,7,9,11ஆம் பாவங்களை தொடர்பு கொண்டுயிருந்தால் அது ஒரு உன்னதாமான நிலையாகும்.



5) லக்ன உப நட்சத்திரம் 3,11ஆம் பாவங்கனுக்கும் உப நட்சத்திரமாக வந்து, லக்ன உப நட்சத்திரத்தின், நட்சத்திரம்,உப நட்சத்திரத்தில் நிறைய கிரகங்கள் இருப்பது



6) லக்ன உப நட்சத்திரம் எந்த விதத்திலும் 4,6,8,12ஆம் பாவங்களை தொடர்பு கொள்ளகூடாது.பெரும்பாலான கிரகங்கள் 4ஆம் பாவத்திற்கு தீமையை தரும் பாவங்களான 3,11ஆம் பாவங்களையும்,லக்னத்திற்க்கு சாதகமான பாவங்களான 5,9ஆம் பாவங்களை தான் நின்ற நட்சத்திரம்,உப நட்சத்திரம் மூலமாக தொடர்பு கொள்வது.


7) 4,6ஆம் பாவ உப நட்சத்திரம் எந்தவித்த்திலும் 4,6,8,12ஆம் பாவங்களை தொடர்பு கொள்ளாமல் யிருக்கவேண்டும்.



8) 4,6,8,12ஆம் பாவங்களுக்கு நட்சத்திரம்,உப நட்சத்திரம், உப நட்சத்திரமாக உள்ள கிரகங்களின் திசை சுமார் 25 வயது முதல் 60 வயது வரை நடைபெறகூடாது.(ஏனெனில் மேற்கண்ட கிரகங்கள் தாங்கள் நின்ற நட்சத்திரம்,உப நட்சத்திரம் மூலம் லக்னத்திற்கு சாதகமான பாவங்களைத் தொடர்பு கொண்டிருந்தாலும், இரத்தத்திற்கு காரகமான சந்திரன் மேற்கண்டகிரகத்தின் திசையில் அதன் நட்சத்திரத்தில் இருப்பார் என்பதால்)



9) சுமார் 25 வயது முதல் 60 வயது வரை 3,7,11ஆம் பாவத் தொடர்புடைய தசை,புத்திகள் வருது.

No comments:

Post a Comment